ஆர். கே. (நடிகர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆர் கே
பிறப்பு3 பெப்ரவரி 1959 (1959-02-03) (அகவை 65)
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, காரைக்குடி,
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1989-2017

ஆர். கே (ராதாகிருஷ்ணன் சிதம்பரம்) என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் ஒரு நடிகர் ஆவார். இவர் திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன்பு ஒரு முக்கிய தொழிலதிபராக இருந்தார், "வெல்கம் சிட்டி" என்ற மணை வணிக நிறுவனத்தை நடத்திவந்தார். [1]

தொழில்

வில்லு பாட்டுக்காரன் (1992), பொய் (2006), தூண்டில் (2008) போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்த இவர் பிறகு, சிந்தாமணி கொல கேஸ் என்ற மலையாள திரைப்படத்தின் மறுஆக்கமான எல்லாம் அவன் செயல் (2008) படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார். [2] இந்த படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று, சராசரி வசூலையும் ஈட்டியது. [3] [4] வணிகரீதியாக சிறப்பாக வெற்றிபெறாத அழகர் மலை (2009), என் வழி தனி வழி (2014), வைகை எக்ஸ்பிரஸ் (2017) போன்ற படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார், இடையில் இவர் அவன் இவன் (2011), பாயும் புலி (2015) போன்ற படங்களில் எதிர்மறையான பாத்திரங்களில் நடித்தார்.

திரைப்படவியல்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1989 வெற்றி விழா கும்பல் உளவாளி
1992 வில்லுப்பாட்டுக்காரன் காவல் ஆய்வாளர்
1993 மணிக்குயில் முத்துவேலுவின் நண்பர்
தங்கக்கிளி
1994 செவத்த பொண்ணு சுடலைமணியின் நண்பர்
1996 கட்டபஞ்சாயத்து சிதம்பரம்
1997 நாட்டுப்புற நாயகன் மருத்துவர்
2006 பொய்
2008 தூண்டில் சூம்
வாழ்த்துகள் வெற்றிச்செல்வன் செல்வநாயகம்
எல்லாம் அவன் செயல் லட்சுமண் கிருஷ்ணா
2009 மஞ்சள் வெயில் ராஜேஷ்
அழகர் மலை புகாசெந்தி
2011 அவன் இவன் மாட்டு கடத்தல்காரன்
புலிவேசம் முனியன்
2014 ஜில்லா மகாலட்சுமியின் மாமனார்
2015 என் வழி தனி வழி வெற்றிச்செல்வன்
பாயும் புலி அமைச்சர் சிங்கராசு
புலன் விசாரணை 2 ராகேஷ் கேதன்
2017 வைகை எக்ஸ்பிரஸ் ஷராபுதீன் ரஹ்மான்

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆர்._கே._(நடிகர்)&oldid=21473" இருந்து மீள்விக்கப்பட்டது