அரவக்குறிச்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அரவக்குறிச்சி
நகரம்
அரவக்குறிச்சி காவல் நிலையம்
அரவக்குறிச்சி காவல் நிலையம்
அரவக்குறிச்சி is located in தமிழ் நாடு
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி நகரம்
ஆள்கூறுகள்: 10°46′29″N 77°54′32″E / 10.774700°N 77.909000°E / 10.774700; 77.909000Coordinates: 10°46′29″N 77°54′32″E / 10.774700°N 77.909000°E / 10.774700; 77.909000
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கரூர்
அரசு
 • வகைபேரூராட்சி
 • நிர்வாகம்அரவக்குறிச்சி பேரூராட்சி
 • சட்டமன்ற உறுப்பினர்அரவக்குறிச்சி
ஏற்றம்
192 m (630 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்12,413
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசி குறியீடு
639 201
Telephone code04320
வாகனப் பதிவுTN-47

அரவக்குறிச்சி (ஆங்கிலம்:Aravakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் மற்றும் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், பேரூராட்சியும் ஆகும்.

அமைவிடம்

அரவக்குறிச்சி பேரூராட்சியின் கிழக்கில் திருச்சிராப்பள்ளி 110 கிமீ, மேற்கில் தாராபுரம் 45 கிமீ, வடக்கில் கரூர் 30 கிமீ; தெற்கில் திண்டுக்கல் 45 கிமீ தொலைவில் உள்ளது.

சிறப்பு

இந்தியாவிலேயே அரவக்குறிச்சி முருங்கைக்காய் முக்கிய சந்தையாகும்.

மகாராஷ்டிரம், குஜராத், தில்லி, ராஜஸ்தான், ஹரியாணா, மேற்குவங்கம், ஒரிசா, கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு நூற்றுக்கணக்கான முருங்கைக்காய் சுமை ஏற்றப்பட்டு, அரவக்குறிச்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. அரவக்குறிச்சி பகுதி முருங்கைக்காய் சுவைக்காக புகழ் பெற்று, விளை பொருட்களை வாங்க வரும் வர்த்தகர்களை ஈர்க்கிறது. இப்பகுதியில், 40,000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்படுகிறது

அரவக்குறிச்சியின் மற்றொரு சிறப்பு பூலாம்வலசு சேவல்சண்டை. ஏறக்குறைய பல நூற்றாண்டுகளாக இங்கு சேவல் சண்டை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்லாயிரக்கணக்கான ஆர்வலர்கள் கரூர், தாராபுரம், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் அண்டை மாறிலமான கேரளாவில் உள்ள சில இடங்களிலிருந்தும் வருகை புரிகின்றனர்.

வரலாறு

மைசூர் மன்னர் நஞ்சராஜா தளபதியாக இருந்தவர் ஐதர்அலி. 1782ல் வந்தவாசியில் நடந்த இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேய படைகளை எதிர்த்து போரிட்டு இறந்த பிறகு அவர் மகன் திப்பு சுல்தான் மைசூர் மன்னரானார். அவர் காலத்தில் திண்டுக்கல் கோட்டைக்கு இணையாக அரவக்குறிச்சியில் வலுவான கோட்டை ஒன்று உருவாக்கப்பட்டது.

இடையகோட்டை, தாராபுரம், ராயனூர், பாலக்காடு, சத்தியமங்கலம், கோவை உள்ளிட்ட இடங்களை இணைத்து அரவக்குறிச்சி கோட்டை தலைமையிடமாக மாற்றப்பட்டது. அரவக்குறிச்சி கோட்டைக்கு நிர்வாக பொறுப்பாளராக திப்புசுல்தானின் தாய்மாமா சையதுசாயபு, போர் படை தளபதியாக பத்ரூல் ஜமான்கான் நியமிக்கப்பட்டனர். கடந்த 1784ல் பேடனூரை கைப்பற்ற திண்டுக்கல், அரவக்குறிச்சி படைகளுடன் திப்புசுல்தான் சென்றார். இதையறிந்த ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் திருச்சி தளபதி கர்னல் லாங்கிடம் திண்டுக்கல், அரவக்குறிச்சி கோட்டையை கைப்பற்ற உத்தரவிட்டார். 200க்கும் மேற்பட்ட ஆங்கிலேய படையினர் திருச்சியிலிருந்து கரூர், ராயனூர் வழியாக அரவக்குறிச்சி, திண்டுக்கல்லை தாக்குவதற்கு கிளம்பினர். ஆற்காடு நவாப் முகமது அலியின் போர் தளபதி புஷி மூலமாக ரகசிய தகவலை அறிந்த சையது சாயபு தாராபுரத்தில் பதுங்கினார்.

அரவக்குறிச்சியை அடைந்த ஆங்கிலேய படையினர் கோட்டையை நாலாபுறத்திலிருந்தும் தாக்கினர். கோட்டையின் உள்ளிருந்து தளபதி பத்ரூல் ஜமான்கான் தலைமையில் கடுமையான எதிர்தாக்குதல் நடந்தது.

ஏழு நாள் நடந்த போரின் முடிவில் ஆங்கிலேய படை வென்றாலும், 80 வீரர்களை இழக்க வேண்டியிருந்தது. போர் முடிவில் ஆங்கிலேய தளபதி கோட்டைக்குள் பார்த்தபோது ஏழு பேர் மட்டுமே இறந்தது கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். தளபதி பத்ரூல் ஜமான்கான் உள்ளிட்ட ஏழு பேர் மட்டுமே ஏழு நாட்கள் தாக்குப்பிடித்து 200 பேர் கொண்ட ஆங்கிலேய படையை கலங்கடித்தது கண்டு ஆச்சரியமடைந்தனர்.

"தி டைகர் ஆஃப் மைசூர்' என்ற புத்தகத்தில் ஏழு பேர் மட்டுமே ஏழு நாள் புரிந்த போர் முறை குறித்து எஸ்.ஆர்., சௌத்திரி குறிப்பிட்டுள்ளார். அரவக்குறிச்சியை மீண்டும் கைப்பற்றிய திப்புசுல்தான், 1,799 வரை அவர் ஆளுகையில் வைத்திருந்தார். 1,788ல் சையது சாயபு இறந்ததும், அவர் நினைவாகவும், போரில் இறந்த தளபதி பத்ரூல் ஜமான்கான் நினைவாகவும் 1,798ல் நினைவிடம் அமைத்தார். "சையது பாவா தர்ஹா' என அழைக்கப்படும் இந்த நினைவிடம் அரவக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தால் இன்றுவரை பராமரிக்கப்படுகிறது. அரவக்குறிச்சி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

பேரூராட்சியின் அமைப்பு

20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 85 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,562 வீடுகளும், 12,412 மக்கள்தொகையும் கொண்டது.[2] [3]

ஆறு

அரவக்குறிச்சி பேரூராட்சி எல்லைக்குள் நங்காஞ்சி மற்றும் அமராவதி ஆறுகள் உள்ளன. இதில் நங்காஞ்சி ஆறானது அரவக்குறிச்சி மற்றும் பள்ளபட்டி கழிவு நீர்கள் செல்லும் பாதையாக மாறிக் கொண்டுள்ளது. அமராவதி ஆற்றில் அணையில் தண்ணீர் திறக்கும் போது வரும்.

அரசு அலுவலகங்கள்

  • மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம்
  • வட்டாச்சியர் அலுவலகம்
  • ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
  • பேரூராட்சி அலுவலகம்
  • உதவி தொடக்க கல்வி அலுவலகம்
  • அரசு கருவூலம்

காவல் நிலையம்

  • துணை கண்காணிப்பாளர் நிலையம்
  • காவல் நிலையம்

தீயணைப்பு நிலையம்

தீயணைப்பு நிலையம்

மருத்துவமனைகள்

  • அரசு மருத்துவமனை
  • கால்நடை மருத்துவமனை

பள்ளிக்கூடங்கள்

  • அரசினர் மேல்நிலை பள்ளி
  • அரசினர் பெண்கள் உயர் நிலை பள்ளி
  • பி.எஸ்.பி. மேல்நிலைப் பள்ளி
  • ஆறுமுகம் மேல்நிலைப் பள்ளி
  • ஆர்.சி. நடுநிலைப் பள்ளி
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

வங்கிகள்

பள்ளிவாசல்கள்

  • ஜும்மா மஸ்ஜித் பெரிய பள்ளி
  • மஸ்ஜிதுல் அப்ரார் சின்ன பள்ளி

தர்காக்கள்

  • காயலா பாவா தர்கா
  • முத்து பாவா தர்கா
  • கரீம் பாவா தர்கா
  • சையது பாவா தர்கா
  • மலையாளதம்மா தர்கா

கோவில்கள்

  • பாலசுப்ரமண்யர் கோவில்
  • மாரியம்மன் கோவில்
  • காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் ஆலயம்
  • பிள்ளையார் கோவில்
  • செல்லாண்டியம்மன் கோவில்
  • பகவதியம்மன் கோவில்

அரவக்குறிச்சி காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் ஆலயம்

தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாயும் ஆறுகளில் ஒன்றான நல்காசி என்ற நங்காஞ்சி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கியிருக்கும் ஒரே சிவாலயம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருள்மிகு காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் ஆலயம்.

இவ்வாலயத்தின் மூலவர் புண்ணிய லிங்கமான பாண லிங்கம்.இவ்வாலயத்திற்கு வந்து சிவனை தரிசித்தால் காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் .

700 ஆண்டுகளுக்கு முன் சேரமன்னர் திருபுவன சக்கரவர்த்தியால் நிர்மாணம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .

1974 ஆம் ஆண்டு திருப்பணி திருப்பணி வேலைகள் நடந்தன . 1979 ஆம் ஆண்டு

புயல் மற்றும் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்து விட்டது . பிறகு 1995–96 ஆம் ஆண்டில் திருப்பணி தொடங்கப்பட்டு சுமார் 7 ஆண்டுகள் நடைபெற்று 2003 ஆம் ஆண்டு கும்பாபிசேகம் நடைபெற்று சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது.

காசிக்கு செல்லமுடியாத அன்பர்கள் இங்குவந்து சிவனை தரிசித்து புண்ணியத்தை பெற வாழ்த்துகிறோம் .

கரூரிலிருந்து திண்டுக்கல் திண்டுக்கல் செல்லும் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது .

தேவாலயங்கள்

அப்போஸ்தல ஐக்கிய சபை கர்மேல் பெந்தெகொஸ்தே சபை

ஆர்.சி. சர்ச் சி.எஸ்.ஐ. சர்ச்

சுற்றுலா செல்ல

அமராவதி ஆற்றில் தண்ணீர் வரும் போது கொத்தப்பாளையம் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஒன்று மட்டுமே ஒரே சுற்றுலா இடமாகும். நீர் வரும் காலங்களில் இவ்விடம் மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும்.

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=அரவக்குறிச்சி&oldid=122682" இருந்து மீள்விக்கப்பட்டது