அத்தையா மாமியா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அத்தையா மாமியா
இயக்கம்கோபு
தயாரிப்புஎன். ஆர். அமுதா
கருடா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
உஷா நந்தினி
வெளியீடுஆகத்து 15, 1974
நீளம்3936 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அத்தையா மாமியா 1974 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும்.[1][2][3][4][5] கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், உஷா நந்தினி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், மனோரமா, சச்சு, எம்.பானுமதி, சுகுமாரி, காந்திமதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கதை

அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு இளைஞன் ஊருக்கு வருகிறான். அவனுக்குப் பெண் தர அவனது அத்தை தன் பெண்ணோடு வந்து சேர்கிறார். அதேசமயம் அவனது மாமியின் குடும்பமும் தங்கள் பெண்ணோடு வந்து சேர்கின்றனர். இந்த அமெரிக்க மாப்பிள்ளை, இந்த இரு குடும்பங்களிடையே சிக்கித் தவிக்கிறான். இந்நிலையில் இந்த மாப்பிள்ளை தன் காதலியை மணமுடிக்க, அதனால் வரும் பிரச்சினைகளே கதையாகும்.

நடிப்பு

வார்ப்புரு:Cast listing

தயாரிப்பு

சென்னைத் தமிழ் பேசும் பெணான அமுதா கணேசன் கோபுவை அணுகி தான் எழுதிய கதையின் அடிப்படையில் ஒரு திரைப்படத்தை உருவாக்கித்தருமாறு கேட்டார். அவர் சூதாட்டத்தில் சம்பாதித்த பணத்தில் படத்தை தயாரித்தார்.

பாடல்கள்

இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி எழுதினார்.

பாடல் பாடகர்(கள்) நீளம்
மறந்து போச்சு எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈசுவரி 3:36
நான் பெத்த மகனே நடராஜா டி. எம். சௌந்தரராஜன் 4:02
அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா பி. சுசீலா, எல். ஆர். ஈசுவரி 3:12

வரவேற்பு

சிரிக்கவும், போழுதுபோக்கவும் விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் என்று கல்கியின் எஸ். வி. எஸ். குறிப்பிட்டார்.[6] அத்தையா மாமியா 10 வாரங்கள் திரையரங்குகளில் ஓடியது.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அத்தையா_மாமியா&oldid=29982" இருந்து மீள்விக்கப்பட்டது