ஆலங்குடி
ஆலங்குடி Alangudi | |
|---|---|
பேரூராட்சி | |
| ஆள்கூறுகள்: 10°21′40″N 78°58′47″E / 10.361100°N 78.979600°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| ஏற்றம் | 104 m (341 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 12,367 |
| Languages | |
| • Official | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 622 301 |
| அஞ்சல் குறியீட்டு எண் | 04322 |
| வாகனப் பதிவு | TN 55 |
ஆலங்குடி(Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும்; பேரூராட்சியும் ஆகும்.
அமைவிடம்
ஆலங்குடி பேரூராட்சி, மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், கிழக்கேயுள்ள வடகாட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், தெற்கே கொத்தமங்கலத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் புதுக்கோட்டையில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
3.09 சகிமீ பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3228 வீடுகளும், 12367 மக்கள்தொகையும் கொண்டது.[2][3][4]
புவியியல்
இவ்வூரின் அமைவிடத்தின் புவியியல் ஆள்கூறுகள், 10°21′40″N 78°58′47″E / 10.3611°N 78.9796°E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 123 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.
இதையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "ஆலங்குடி பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-26. Retrieved 2019-03-26.
- ↑ "ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-26. Retrieved 2019-03-26.
- ↑ Alangudi Population Census 2011
- ↑ Alangudi Town Panchayat