கீரமங்கலம்
கீரமங்கலம் | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | புதுக்கோட்டை | ||||||
வட்டம் | ஆலங்குடி | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
பேரூராட்சித்தலைவர் | உயரம் = | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
9,357 (2011[update]) • 264/km2 (684/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 35.50 சதுர கிலோமீட்டர்கள் (13.71 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/keeramangalam |
கீரமங்கலம் (ஆங்கிலம்:Keeramangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். இங்குள்ள மலர்ச்சந்தை மற்றும் காய்கனிச் சந்தை இவ்வட்டாரத்தில் மிக பிரபலமானதாக உள்ளது.
அமைவிடம்
தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி - சாயல்குடி மாநில பிரதானச் சாலையில் அமைந்த கீரமங்கலம் முதல்நிலை பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 43 கிமீ தொலைவிலும். அறந்தாங்கிலிருந்து 20 கிமீ தொலவிலும் உள்ளது.
இதன் கிழக்கில் பேராவூரணி 13 கிமீ, மேற்கில் ஆலங்குடி 24 கிமீ, வடக்கில் பட்டுக்கோட்டை 30 கிமீ; தெற்கில் அறந்தாங்கி 20 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
35.50 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 41 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,402 வீடுகளும், 9,357 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
சிறப்புகள்
ஒப்பிலாமணியம்பாள் சமேத மெய்நின்றநாதர் சுவாமி என்று பெயர் பெற்ற பிரசித்திபெற்ற சிவாலயம் இவ்வூரின் சிறப்பாக திகழ்கிறது.வரலாற்று பக்கங்களை பார்க்கும் போது தோராயமாக இவ்வாலயம் 900 ஆண்டு பழமையானது என்றும் "நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே"என்று சிவனிடத்தே வாதம் செய்த தலைமை புலவர் நக்கீரனார் வழிபாடு நடத்திய ஸ்தலமாகவும் அறியபடுகிறது.இவ்வாலய குளத்தின் மத்தியில் 81 அடி உயர சிவன் சிலை நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது(20/01/2016 சிலை திறப்பு விழா நடைபெற்றது.)நீர்நிலையில் அமைய பெற்று தடாகேஸ்வர மஹாதேவாக அருள்பாலிக்கிறார்.மெய்நின்றநாதர் சுவாமி ஆலய வளாகத்தில் 7.25 அடி உயரத்தில் தலைமை புலவர் நக்கீரனாருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறாக அருள் ஸ்தல சுற்றுலா தல பெருமையை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது கீரமங்கலம் எனும் நக்கீரமங்கலம்.
மாரியம்மன் கோயில்
கீரமங்கலம் மாரியம்மன் கோயில் கீரமங்கலத்தில் உள்ள ஊர்ப்பொதுமக்களுக்கு சொந்தமானதாகும். இக்கோயில் இவ்வூரில் உள்ள தாணன் கரை,சிவந்தன் கரை,22 குடிமக்கள் சேவி கரை கரை என பொதுமக்கள் தங்களது வாழும் பகுதிக்கேற்ப தங்களது வழிபாட்டு உரிமையையும், பராமரிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கீரமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Population Census 2011
- ↑ Keeramangalam Town Panchayat