வீராப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox film | name = வீராப்பு | image = Veerappu poster.jpg | image_size = | caption = | director = பத்ரி | producer = கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார் <br /> சுஜாதா விஜயகும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →விமர்சனம்: clean up, replaced: இருக்கிறார்கள் → இருக்கின்றனர் using AWB |
||
| வரிசை 59: | வரிசை 59: | ||
| title5 = போனா வருவீரோ - மறுகலவை | extra5 = [[டி. இமான்]], ஜெய் | length5 = 05:27 |
| title5 = போனா வருவீரோ - மறுகலவை | extra5 = [[டி. இமான்]], ஜெய் | length5 = 05:27 |
||
}} |
}} |
||
==விமர்சனம்== |
|||
[[ஆனந்த விகடன்]] வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "மலையாள ‘ஸ்படிகம்’ படத்தில் கொஞ்சம் தெலுங்கு மசாலா தடவி, தமிழில் பரிமாறியிருக்கிறார் இயக்குநர் பத்ரி. ஆல் டைம் கூலிங் கிளாஸ், அசத்தல் கெட்டப் என ‘புலிப்பாண்டி’ கேரக்டரில் கச்சிதமாக சுந்தர்.சி. பொருந்துகிறார். ஆக்ஷனில் துறுதுறுப்பவர், சென்டிமென்ட்டில் சவசவக்கிறார்... அடிதடியா, காதலா, அப்பா - மகன் ஈகோவா... எதை பிரதானப்படுத்துவது என்பதில் குழம்பி, சில இடங்களில் தடுமாறி இருக்கின்றனர். ‘ஜோரப்பு’ என்றுதான் சொல்ல முடியவில்லை!" என்று எழுதி {{sfrac|38|100}} மதிப்பெண்களை வழங்கினர்.<ref>{{Cite web |url=https://www.vikatan.com/humour-and-satire/cinema/72956- |title=சினிமா விமர்சனம்: வீராப்பு |date=2007-08-08 |website=விகடன் |language=ta |access-date=2025-05-24}}</ref> |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
*{{Imdb title|}} |
|||
*[https://www.imdb.com/title/tt13667194/]] |
|||
[[பகுப்பு:மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:2007 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:2007 தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
15:44, 16 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்
| வீராப்பு | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பத்ரி |
| தயாரிப்பு | கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார் சுஜாதா விஜயகுமார் |
| கதை | பத்ரி |
| இசை | டி. இமான் |
| நடிப்பு | சுந்தர் சி. கோபிகா (நடிகை) பிரகாஷ் ராஜ் விவேக் சந்தானம் |
| ஒளிப்பதிவு | கே. எஸ். செல்வராஜ் |
| படத்தொகுப்பு | மு. காசிவிசுவநாதன் |
| கலையகம் | ஹோம் இந்தியா [பி].லிமிடட் |
| விநியோகம் | அவினி சினிமேக்ஸ் |
| வெளியீடு | 27 சூலை 2007 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வீராப்பு (Veerappu) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும், இப்படத்தை பத்ரி இயக்கினார். இது 1995 ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான பரதனின் ஸ்படிகம் என்ற படத்தின் மறு ஆக்கம் ஆகும். இந்த படமானது சுந்தர் சி. கதாநாயகனாக நடித்த இரண்டாவது படமாகும். இவருடன், கோபிகா, பிரகாஷ் ராஜ், விவேக், சந்தனம் ஆகியோர் நடித்தனர். டி. இமான் இசையமைத்தார்.[1] படத் தொகுப்பை மு. காசி விஸ்வநாதன் மேற்கொண்டார். இந்தப் படம் வணிகரீதியான வெற்றியை ஈட்டியது.
கதை
தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான ஒரு தன்முனைப்பு மோதலைச் சுற்றியே கதை சுழல்கிறது. புலிப்பாண்டி ( சுந்தர் சி. ) ஒரு உள்ளூர் ரவுடியும், கணித ஆசிரியர் வேதக்கண்ணுவின் ( பிரகாஷ் ராஜ் ) மகன் ஆவான். வேதக்கண்ணு புலிப்பாண்டியை ரவுடி என்பதற்காகவும் கணிதத்தில் தேர்ச்சி பெறாததற்காகவும் வெறுக்கிறார். கதையின் பின்னோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக, சிறுவயது புலிப்பாண்டி இயற்பியலில் மிகவும் சிறந்தவன் என்று காட்டப்பட்டுகிறது. ஆனால் அவனது தந்தை, கணித ஆசிரியராக இருப்பதால், அவன் கணிதத்தில் சிறந்து விளங்க வேண்டும் விரும்புகிறார், அது அவனால் முடியவில்லை. தொடர்ச்சியான உடல் மற்றும் மன இம்சைகளினின் விளைவாக, புலிப்பாண்டி வளர வளர தவறான பாதையில் செல்கிறான். இதற்கிடையில், போட்டி கும்பல்களும் போலீசாரும் அவனைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் அவன் தற்செயலாக அவனது ஒன்றிவிட்ட தங்கையும், தனது தந்தைக்கு முறைதவறி பிறந்த ஒரு பெண்ணால் காப்பாற்றப்படுகிறான். புலி தனது ஒன்றுவிட்ட சகோதரியின் எதிர்பாராத உதவிக்கு ஈடாக உதவுகிறான். மேலும் அவரளது பாதுகாப்பிற்காக உறுதி அளிக்கிறான். போட்டி கும்பல்கள் அவளைக் கொன்று, அவனது தந்தையின் மீது அந்தப் பழியைப் போடுகின்றன. புலி எப்படி உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தனது குடும்பத்தினருடன் ஒன்று சேர்கிறான் என்பது திரைப்படத்தின் எஞ்சிய பகுதியாக உள்ளது.
நடிகர்கள்
- சுந்தர் சி. புலிப்பாண்டியாக
- கோபிகா (நடிகை) பார்கவியாக
- பிரகாஷ் ராஜ் புலியின் தந்தை வேதக்கண்ணுவாக
- விவேக் ரத்தன்னாக
- மணிகண்டன்
- அஞ்சு கொடியாக
- தேஜாஸ்ரீ
- சந்தோஷி புலியின் தங்கையாக
- சுமித்ரா புலியின் தாய் காந்திமதியாக
- சந்தானம் பிலியின் நண்பணாக
- பிரேம் புலியின் மைத்துனனாக
- சோபராஜ் ஊழல் காவல் ஆய்வாளர் காட்டு ராஜாவாக
- விச்சு விசுவநாத் காட்டுராஜாவின் உதவியாளராக
- லொள்ளு சபா மாறன் - மொக்கையாக
இசை
இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்தார்.[2]அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கே. எஸ். செல்வராஜ்.
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
| 1. | "புளிய கிளி ஜெயிச்சா" | ஹரிஷ் ராகவேந்திரா, மதுஸ்ரீ | 04:54 | |||||||
| 2. | "ரவுண்டுகட்ட அடி" | பார்கவி | 04:37 | |||||||
| 3. | "போனா வருவீரோ" | ஜனனி மதன்பாப் | 05:39 | |||||||
| 4. | "Mathematical Expression (கணக்கு)" | மாணிக்க விநாயகம் | 04:06 | |||||||
| 5. | "போனா வருவீரோ - மறுகலவை" | டி. இமான், ஜெய் | 05:27 | |||||||
மொத்த நீளம்: |
24:43 | |||||||||
விமர்சனம்
ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "மலையாள ‘ஸ்படிகம்’ படத்தில் கொஞ்சம் தெலுங்கு மசாலா தடவி, தமிழில் பரிமாறியிருக்கிறார் இயக்குநர் பத்ரி. ஆல் டைம் கூலிங் கிளாஸ், அசத்தல் கெட்டப் என ‘புலிப்பாண்டி’ கேரக்டரில் கச்சிதமாக சுந்தர்.சி. பொருந்துகிறார். ஆக்ஷனில் துறுதுறுப்பவர், சென்டிமென்ட்டில் சவசவக்கிறார்... அடிதடியா, காதலா, அப்பா - மகன் ஈகோவா... எதை பிரதானப்படுத்துவது என்பதில் குழம்பி, சில இடங்களில் தடுமாறி இருக்கின்றனர். ‘ஜோரப்பு’ என்றுதான் சொல்ல முடியவில்லை!" என்று எழுதி 38100 மதிப்பெண்களை வழங்கினர்.[3]
மேற்கோள்கள்
- ↑ "Veerappu (2007) - D. Imman". MusicIndiaOnline. Archived from the original on 2019-04-17.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-01-26. Retrieved 2021-02-04.
- ↑ "சினிமா விமர்சனம்: வீராப்பு". விகடன். 2007-08-08. Retrieved 2025-05-24.
