7 நாட்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
7 நாட்கள்
இயக்கம்கௌதம் வி.ஆர்
தயாரிப்புகே. கார்த்திக்
கே. கார்த்திக்கேயன்
கதைபி.விமல்குமார்
இசைவிஷால் சந்திரசேகர்
நடிப்புசக்தி வாசு
பிரபு
கணேஷ் வெங்கட்ராமன்
ஒளிப்பதிவுஎம். எஸ். பிரபு
படத்தொகுப்புஎம். ஜெஸ்வின் பிரபு
வெளியீடு2 சூன் 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்

7 நாட்கள் (7 Naatkal), கௌதம் வி.ஆர் இயக்கத்தில், கே. கார்த்திக், கே. கார்த்திக்கேயன் ஆகியோரின் தயாரிப்பில், சக்தி வாசு, கணேஷ் வெங்கட்ராமன், பிரபு ஆகியோரின் முன்னணி கதைப்பாத்திர நடிப்பில் வெளியாகியுள்ள தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் விஷால் சந்திரசேகர் இசையில், எம். எஸ். பிரபுவின் ஒளிப்பதிவில், எம். ஜெஸ்வின் பிரபுவின் படத்தொகுப்பில் 2 சூன், 2017 அன்று வெளியாகியுள்ள தமிழ்த்திரைப்படம்.

நடிப்பு

கதை

இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடைபெற இருக்கும் விஜய் ரகுநாத்தின் (பிரபு) மகனுக்கு ஏழாவது நாள் அன்று என்ன நடக்கின்றது என்பதே இப்படத்தின் கதைச்சுருக்கம்.[1] மாநிலத்தின் முதலமைச்சரிடம் மிகவும் நெருக்கமாக இருப்பவர் பணக்காரத் தொழிலதிபர் விஜய் ரகுநாத்தின் (பிரபு). விஜய் ரகுநாத்திற்கு ஒரு மகனும் வளர்ப்பு மகனும் உள்ளனர்.[2] அவரின் மகன் சித்தார்த் ரகுநாத் (ராஜீவ் கோவிந்தா பிள்ளை) பெண்களை பாலியல் நோக்கில் விரும்பும் ஒருவர். வளர்ப்பு மகன் காவல் துறையில் இணையம் சார் குற்றங்களைத்தடுக்கும் அலுவலலாக உள்ளார். விஜய் ரகுநாத்தின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வு நடக்க இருக்க, அதைத் தடுத்து நிறுத்துவதற்கான பொறுப்பை வளர்ப்பு மகனிடம் ஒப்படைக்கிறார் அவர்.[3] இந்தசிக்களுக்குள் ஒன்றாக அடுக்குமாடி ஒன்றில் வாழும் கௌதம் கிருஷ்ணாவாகவும் (சக்தி) பூஜாவும் (நிக்கிஷா) சிக்கிக் கொள்கின்றனர். அவர்கள் எப்படி சிக்கலில் வந்தார்கள்? விஜய் ரகுநாத்தின் தன் வளர்ப்பு மகனுக்கு கொடுத்தப் பணியை முடித்தாரா? சிக்கல்களில் இருந்து கௌதம் கிருஷ்ணாவாகவும் பூஜாவும் தப்பித்தார்களா? விஜய் ரகுநாத்தின் மகனுக்கு திருமணம் நடந்ததா இல்லையா? என்பதே இத்திரைப்படத்தின் கதைப்பின்னல்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=7_நாட்கள்&oldid=29821" இருந்து மீள்விக்கப்பட்டது