வீ. மாரியப்பன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வீ. மாரியப்பன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
வீ. மாரியப்பன்
பிறந்ததிகதி சூலை 2 1942
அறியப்படுவது எழுத்தாளர்

வீ. மாரியப்பன் (பிறப்பு: சூலை 2 1942) மலேசிய எழுத்தாளர் ஆவார். வீரமான் எனும் புனைபெயரில் எழுதிவரும் இவர், ஒரு வியாபாரியாவார். மேலும் இவர் பினாங்கு தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராகவும், மாஜூ ஜயா கூட்டுறவுக் கழக அமைப்பாளர்களில் ஒருவராகவும், பல இலக்கியப் போட்டிகளுக்கு நீதிபதியாகவும் இருந்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1959 தொடங்கி மலேசிய தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசிய தேசிய செய்தித்தாள்களிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "வெள்ளி நிலவு" (கவிதைத் தொகுப்பு)
  • "வீரமான் கவிதைகள்" (கவிதைத் தொகுப்பு)

பரிசுகளும் விருதுகளும்

  • தமிழ் முரசு வெண்பாப் போட்டிப் பரிசு
  • தமிழ் நேசன் பவுன் பரிசு
  • தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கக் கவிதைப் பரிசு
  • டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது (2003) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=வீ._மாரியப்பன்&oldid=6430" இருந்து மீள்விக்கப்பட்டது