வாராயோ வெண்ணிலாவே
வாராயோ வெண்ணிலாவே (Vaaraayo Vennilaave) ஆர். சசிதரன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் திரைப்படமாகும். அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் ராஜா இசை அமைப்பில் 2017 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. ஹரிப்ரியா, காவ்யா, தம்பி ராமையா, மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் ராணா மற்றும் தொகுத்தவர்கள் விஜயன் மற்றும் கணேஷ்பாபு ஆவர்.
நடிகர்கள்
தினேஷ், சத்யா, ஹரிப்பிரியா, சங்கதாரா, காவியா, தம்பிராமைய்யா, முருகதாஸ், சந்தானபாரதி, சரித்திரன், சோனியா, சரவணன், கானா பாலா.
கதைச்சுருக்கம்
மிகவும் பணக்கார வாலிபன் தினேஷ். ஒரு வேலையின் காரணமாக சென்னையில் இருந்து கேரளாவிற்கு பயணம் செய்கிறான். அப்போது மிகவும் அழகான பெண் ஒருத்தியை சந்திக்கிறான் தினேஷ். அதன் பின்னர் அவள் வசம் காதல் கொள்கிறான்.
தயாரிப்பு
அட்டகத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் கதாநாயகனாக தனது இரண்டாவது படத்தை தேர்வு செய்தார் அட்டகத்தி தினேஷ். இந்தப் படம் அறிமுக இயக்குனர் ஆர் சசிதரனால் இயக்கப்பட்டது. துவக்கத்தில் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி. வி. குமாரால் இப்படம் தயாரிக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் அவர் இந்தப் படத்தை விட்டு விலகினார். விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த நினைத்தது யாரோ என்ற படத்தை தயாரித்த அபிஷேக் பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரித்தது. சந்தான பாரதி, சரித்திரன், சோனியா, சரவணன் மற்றும் கானா பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2][3][4]
இந்தத் திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் கார்த்திக் ராஜா. பாடல்களுக்கு வரிகளை எழுதியது பா. விஜய் மற்றும் கபிலன் (கவிஞர்). ஒளிப்பதிவு செய்தது ராணா. கலை இயக்கம் செய்தது ராமலிங்கம் மற்றும் சண்டைக் காட்சிகளை இயக்கியது மைக்கேல்.[5][6]
இசை
இந்தப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களுக்கு இசை அமைத்தவர் கார்த்திக் ராஜா.
பாடல்களுக்கு வரிகள் எழுதியது பா. விஜய் மற்றும் கபிலன்.
ட்ராக் | பாடல் |
---|---|
1 | என் காதல் |
2 | என் காதல் (மறுமுறை) |
3 | கண்ணாடி பார்க்காம |
4 | அம்பானி பொண்ணு |
5 | உன்னிடம் ஒன்றை |
6 | உயிர் என்னும் |
7 | இந்த ஐலேசா |
மேற்கோள்கள்
- ↑ "http://www.tamilstar.com" இம் மூலத்தில் இருந்து 2019-03-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190329201835/https://www.tamilstar.com/news-id-dinesh-of-attakathi-fame-does-vaarayo-vennilave-attakathi-dinesh-movie-vaarayo-vennilave-11-05-134807.htm.
- ↑ "http://www.indiaglitz.com". http://www.indiaglitz.com/channels/tamil/article/97183.html.
- ↑ "http://www.vuin.com" இம் மூலத்தில் இருந்து 2013-10-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131002093820/http://www.vuin.com/news/attakathi-dinesh-has-got-more-than-a-handful.
- ↑ "http://tamilwire.net". http://tamilwire.net/35003-attakathi-dinesh-haripriya-for-vaarayo-vennilave.html.
- ↑ "http://reviews.in.88db.com". http://reviews.in.88db.com/index.php/movie/movie-news/22017-attakathi-dinesh-signs-his-next-titled-vaarayo-vennilave.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "http://minbimbangal.com". http://minbimbangal.com/2013/05/vaarayo-vennilave/.[தொடர்பிழந்த இணைப்பு]