வடக்கணேந்தல்
வடக்கநந்தல் | |
அமைவிடம் | 11°28′47″N 78°30′11″E / 11.47959°N 78.503059°ECoordinates: 11°28′47″N 78°30′11″E / 11.47959°N 78.503059°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
வட்டம் | சின்னசேலம் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | எம். எசு. பிரசாந்த், இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
23,034 (2011[update]) • 1,952/km2 (5,056/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 11.80 சதுர கிலோமீட்டர்கள் (4.56 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/vadakkanandal |
வடக்கநந்தல் (ஆங்கிலம்:Vadakkanandal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சி பகுதியில் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனம் இயங்கி வருகிறது. மேலும் வடக்கநந்தல் பகுதியில் கோமுகி அணை மற்றும் கல்வராயன் மலைகள் உள்ளது.
அமைவிடம்
சின்னசேலம் வட்டத்தில் அமைந்த வடக்கநந்தல் பேரூராட்சி, விழுப்புரத்திலிருந்து 92 கிமீ தொலைவில் உள்ளது. சின்னசேலம் 18 கிமீ தொலைவில் உள்ளது. கள்ளக்குறிச்சி 12 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
11.80 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 112 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,397 வீடுகளும், 23,034 மக்கள்தொகையும் கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.3% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 976 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 884 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,612 மற்றும் 611 ஆகவுள்ளனர்.[4]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ வடக்கணேந்தல் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Vadakkanandal Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011