தியாகதுர்கம்
தியாகதுருகம் | |||||||
— பேரூராட்சி — | |||||||
அமைவிடம் | 11°53′22″N 78°54′53″E / 11.8895°N 78.9147°ECoordinates: 11°53′22″N 78°54′53″E / 11.8895°N 78.9147°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கள்ளக்குறிச்சி | ||||||
வட்டம் | கள்ளக்குறிச்சி | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | எம். எசு. பிரசாந்த், இ. ஆ. ப | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
18,605 (2011[update]) • 1,592/km2 (4,123/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 11.69 சதுர கிலோமீட்டர்கள் (4.51 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/thiyagadurgam |
தியாகதுருகம் (ஆங்கிலம்:Thiyagadurgam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
தியாகதுர்க்கம் பேரூராட்சி, விழுப்புரத்திலிருந்து 65 கிமீ; சின்னசேலத்திலிருந்து 27 கிமீ தொலைவிலும், கள்ளக்குறிச்சியிலிருந்து 13.5 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் வடக்கில் திருக்கோவிலூர் 32.6 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
11.69 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 113 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4224 வீடுகளும், 18605 மக்கள்தொகையும் கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 12737 ஆகவுள்ளது. மேலும் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5478 மற்றும் 131 ஆகவுள்ளனர்
வரலாறு
தியாகதுருகம்நகரின் மத்தியில் ஒரு சிறிய குன்று அமைந்துள்ளது அந்த குன்றின்மேல் ஒரு கோட்டை அமைந்துள்ளது. இதனை கி.பி 1760 முதல் [ஐதர் அலி]]யின் கட்டுப்பாட்டில் இருந்தது அடுத்த ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது பின்னர் திப்பு சுல்தான் அதற்கான போர் புரிந்தார். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி நிலையானதும் இந்தக் கோட்டை இராணுவத் தளங்களாகச் செயல்பட்டு வந்தது.
மலையின் மீது அமர்ந்துள்ள சிறப்புகள்
இக்கோட்டையின் உள்ளே நிறைய குகைள் உள்ளது மலையின் மீது சுனை நீர் கிணறு ஒன்றும் உள்ளது ,பிரங்கிகள் மற்றும் அதன் இடிந்த நிலையில் மண்டபம் உள்ளது மற்றும் இதன் மீது ஏறி நின்றுகொண்டு பார்த்தால் ஊரின் அழுகு தெரியும்படி அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ தியாகதுர்க்கம் பேரூராட்சியின் இணையதளம்
=