ரூகொல்லா கொமெய்னி
ஆயதுல்லா ரூகொல்லா மூசவி கொமெய்னி | |
|---|---|
| 1வது ஈரானிய உச்சத் தலைவர் | |
| பதவியில் 3 திசம்பர் 1979 – 3 சூன் 1989 | |
| முன்னையவர் | முகம்மத் ரிசா ஷா பஹ்லவி |
| பின்னவர் | அலி காமெனி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 24 செப்டம்பர் 1902
[1][2][3][4][5] கொமெயின், ஈரான் |
| இறப்பு | 3 June 1989 (aged 86) தெகுரான், ஈரான் |
| தேசியம் | ஈரானியர் |
| அரசியல் கட்சி | இசுலாமியக் குடியரசுக் கட்சி |
| துணைவர் | கதிஜா சக்கஃபி (தி. 1929–1989) |
| பிள்ளைகள் | முசுத்தபா சாரா சாதிக் பரீதா அகமது |
| சமயம் | சியா இசுலாம் (பன்னிருவர், சியா இசுலாம்)[6][7][8] |
| கையெழுத்து | |
| இணையத்தளம் | www.imam-khomeini.ir |
ஆயதுல்லா ரூகொல்லா மூசவி கொமெய்னி (Sayyid Ruhollah Mūsavi Khomeini, பாரசீகம்: سید روحالله موسوی خمینی, 24 செப்டம்பர் 1902 – 3 சூன் 1989) ஓர் ஈரானிய அறிஞரும், இசீயா முசுலிம் மதத் தலைவரும், மெய்யியலாளரும், புரட்சியாளரும், அரசியல்வாதியும், ஈரான் இசுலாமியக் குடியரசின் நிறுவனரும் ஆவார். 1979இல் இவரால் துவங்கப்பட்ட ஈரானியப் புரட்சியை அடுத்து 2500-ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரசீகப் பேரரசு முடிவுக்கு வந்து ஈரானின் கடைசி அரசர் (ஷா) முகம்மத் ரிசா ஷா பஹ்லவி பதவி இழந்தார். ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் இவர் ஈரானின் அதியுயர் தலைவராக 1979 முதல் 3 சூன் 1989 வரை இருந்தார். இவருக்குப் பின்னர் அயத்துல்லா அலி ஒசைனி காமெனி (அலி காமெனி) ஈரானின் அதியுயர் தலைவராக 1989 முதல் 28 பிப்ரவரி 2026 வரை 36 வருடங்கள் இருந்தார்.
1979 டைம் ஆண்டு நபராக அமெரிக்க டைம் செய்தி இதழால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்,[9] இசுலாமின் மீட்கைக்கு வழிகோலியதாக சியா மற்றும் சுன்னி மக்களால் ஒருசேர[10] மிகவும் விரும்பப்பட்ட கவர்ச்சி வாய்ந்த தலைவர் எனக் கருதப்பட்டார்.[11].
தொடக்க ஆண்டுகள்
பின்புலம்

ரூகொல்லா மொசுதபாவி மூசாவி கொமெய்னி சிறிய நில உடைமையாளர்கள், மதகுருக்கள் மற்றும் வணிகர்களின் வழி வந்தவர் ஆவார்.[12] இவரது மூதாதையர்கள் குராசான் மாகாணத்தின் ஒரு பகுதியாக அந்நேரத்தில் இருந்த தங்களது சொந்த ஊரான நிசாபூரில் இருந்து 18-ஆம் நூற்றாண்டின் முடிவில் அவாத் இராச்சியத்தில் ஒரு குறுகிய காலம் தங்குவதற்காக வடகிழக்கு ஈரானில் இருந்து புலம் பெயர்ந்து இருந்தனர். அவாத் இராச்சியமானது தற்கால இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். இதன் ஆட்சியாளர்கள் (பாட்ஷா-இ-ஔத்) பாரசீகப் பூர்வீகத்தையுடைய பன்னிருவர் சியா முசுலிம் ஆவர்.[13][14][15] இவர்களின் ஆட்சிக் காலத்தின் போது பாரசீக அறிஞர்கள், கவிஞர்கள், நீதிபதிகள், கட்டடக் கலை நிபுணர்கள் மற்றும் ஓவியர்களின் ஒரு நிலையான வரவை விரிவாக அழைப்பு விடுத்து வருகை புரிய வைத்தனர்.[16] இவரது குடும்பமானது இறுதியாக அவாதின் தலைநகரமான இலக்னோவுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய பட்டணமான கிண்டூரில் இறுதியாகக் குடியமர்ந்தது.[17][18][19][20]
கொமெய்னியின் தந்தை வழித் தாத்தாவான அகமது இந்தி கிண்டூரில் பிறந்தார். 1830-இல் அவர் இலக்னோவிலிருந்து வெளியேறினார்.[18][20] உதுமானிய ஈராக்கின் (தற்போதைய ஈராக்கு) நஜாபில் உள்ள அலீயின் சமாதிக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார்.[17][20] ஆனால், அவர் என்றுமே திரும்பி வரவில்லை. பகெர் மொயின் என்ற சுயசரிதையாளர் இந்த இடம் பெயர்வானது இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி பரவிக் கொண்டிருந்ததிலிருந்து தப்பிப்பதற்காக ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.[21] 1834-இல் சையது அகமது மூசாவி இந்தி ஈரானுக்குச் சென்றார். 1839-இல் கொமெய்ன் நகரத்தில் குடியமர்ந்தார்.[18] ஈரானில் இவர் தங்கியிருந்து, குடியமர்ந்தாலும் இவர் தொடர்ந்து ஹிந்தி, அதாவது இந்தியன், என்றே தொடர்ந்து அழைக்கப்பட்டார். இந்தியாவில் இவர் தங்கியிருந்ததை இது காட்டியது. கொமெய்னி ஹிந்தி என்ற பெயரைத் தன்னுடைய கசல்கள் சிலவற்றில் புனை பெயராகப் பயன்படுத்தியுள்ளார்.[17] கொமெய்னியின் தாத்தாவான மிர்சா அகமது மொச்தபா-இ கொன்சாரி புகையிலைப் போராட்டத்தின் போது புகையிலைப் பயன்பாட்டைத் தடை செய்ய ஒரு தீர்ப்பை வெளியிட்ட மதகுரு ஆவார்.[22][23]
இளமைப் பருவம்
இவர் 1903 -ல் தனது தந்தையாரின் மறைவிற்குப் பின் தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தார். தனது 6 வது வயதில் பாரசீக மொழியில் குரானைக் கற்க ஆரம்பித்தார். பின்னர் பள்ளியில் மதக்கல்வி பயின்றார். தனது இளமைப் பருவத்தில் பெரும்பாலும் மதக்கல்வி கற்றார். இஸ்லாமிய சட்டக்கல்வியைக் கற்றறிந்தார். கவிதையிலும், தத்துவத்திலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அவரது ஆசிரியர் 'மிர்ஸா முகம்மது அலி ஸஹஹபாடியின் தாக்கம் அவரிடம் இருந்தது. கொமேனி கிரேக்கத் தத்துவத்தைக் கற்றார். அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் அவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின. 'அவிஸென்னா 'மற்றும் 'முல்லா ஸாட்ரா' ஆகிய இஸ்லாமிய தத்துவ ஞானிகளின் கருத்துகளே கொமேனியை அதிகளவு கவர்ந்தன.
இதனையும் காண்க
- பகலவி வம்சம்
- முகம்மத் ரிசா ஷா பஹ்லவி
- ஈரானியப் புரட்சி
- அலி காமெனி - இரண்டாவது ஈரானின் அதியுயர் தலைவர்
- அசன் ரவ்கானி
- மகுமூத் அகமதிநெச்சாத்
- இப்ராகிம் ரைசி
மேற்கோள்கள்
- ↑ DeFronzo 2007, ப. 287. "born 22 September 1901..."
- ↑ "History Of Iran Ayatollah Khomeini – Iran Chamber Society". Iranchamber.com. Retrieved 5 January 2013.
- ↑ "Khomeini Life of the Ayatollah By BAQER MOIN". The New York Times. https://www.nytimes.com/books/first/m/moin-khomeini.html. பார்த்த நாள்: 19 January 2012.
- ↑ "Imam Khomeini Official Website | پرتال امام خمینی". harammotahar.ir. Archived from the original on 3 மே 2016. Retrieved 9 March 2012.
- ↑ Karsh 2007, ப. 220. "Born on 22 September 1901
- ↑ Bowering, Gerhard; Crone, Patricia; Kadi, Wadad; Stewart, Devin J.; Zaman, Muhammad Qasim; Mirza, Mahan, eds. (28 November 2012). The Princeton Encyclopedia of Islamic Political Thought. Princeton University Press. p. 518. ISBN 9781400838554.
- ↑ Malise Ruthven (8 April 2004). Fundamentalism: The Search For Meaning: The Search For Meaning (reprint ed.). Oxford University Press. p. 29. ISBN 9780191517389.
- ↑ Jebnoun, Noureddine; Kia, Mehrdad; Kirk, Mimi, eds. (31 July 2013). Modern Middle East Authoritarianism: Roots, Ramifications, and Crisis. Routledge. p. 168. ISBN 9781135007317.
- ↑ TIME. "TIME Person of the Year 1979: Ayatullah Khomeini." 7 January 1980. Accessed 22 November 2008 at http://www.time.com/time/subscriber/personoftheyear/archive/stories/1979.html பரணிடப்பட்டது 2008-11-23 at the வந்தவழி இயந்திரம்
- ↑ [1]
- ↑ Arjomand, S.A. "Khumayni." Encyclopaedia of Islam, Second Edition. Brill, 2008.
- ↑ Abrahamian, Ervand (1989). Radical Islam: The Iranian Mojahedin. I.B. Tauris. p. 20. ISBN 1-85043-077-2.
- ↑ Algar, Hamid (2010). "A short biography". In Koya, Abdar Rahman (ed.). Imam Khomeini: Life, Thought and Legacy. Islamic Book Trust. p. 19. ISBN 978-9675062254.
- ↑ Sacred space and holy war: the politics, culture and history of Shi'ite Islam பரணிடப்பட்டது 5 மே 2023 at the வந்தவழி இயந்திரம் by Juan Ricardo Cole
- ↑ Art and culture: endeavours in interpretation பரணிடப்பட்டது 12 ஏப்பிரல் 2023 at the வந்தவழி இயந்திரம் by Ahsan Jan Qaisar, Som Prakash Verma, Mohammad Habib
- ↑ Encyclopædia Iranica, "Avadh" பரணிடப்பட்டது 17 மே 2017 at the வந்தவழி இயந்திரம், E. Yarshater
- ↑ 17.0 17.1 17.2 Ruhollah Khomeini's brief biography by Hamid Algar
- ↑ 18.0 18.1 18.2 From Khomein, A biography of the Ayatollah பரணிடப்பட்டது 8 பெப்பிரவரி 2007 at the வந்தவழி இயந்திரம், 14 June 1999, The Iranian
- ↑ The Columbia world dictionary of Islamism பரணிடப்பட்டது 3 மே 2023 at the வந்தவழி இயந்திரம் by Olivier Roy, Antoine Sfeir
- ↑ 20.0 20.1 20.2 Khomeini: life of the Ayatollah, Volume 1999 பரணிடப்பட்டது 17 ஏப்பிரல் 2023 at the வந்தவழி இயந்திரம் by Baqer Moin
- ↑ Moin 2000, ப. 18
- ↑ "Imam Khomeini's Biography". 21 February 2015. Archived from the original on 3 April 2019. Retrieved 17 April 2019.
- ↑ Moin, Baqer (2009) [1999]. Khomeini: Life of the Ayatollah. I.B. Tauris. ISBN 978-1-84511-790-0.