அலி காமெனி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அலி காமெனி
Ali Khamenei
علی خامنه‌ای
2026 சனவரியில் காமெனி
2021-இல் அலி காமெனி
ஈரானின் 2-ஆவது அதியுயர் தலைவர்
பதவியில்
4 சூன் 1989[1] – 28 பெப்ரவரி 2026
குடியரசுத் தலைவர்
பட்டியலைப் பார்க்க
முன்னையவர்ரூகொல்லா கொமெய்னி
பின்னவர்-
ஈரானின் 3-ஆவது குடியரசுத்தலைவர்
பதவியில்
9 அக்டோபர் 1981 – 16 ஆகத்து 1989
முன்னையவர்முகம்மது-அலி ராசாய்
பின்னவர்அக்பர் அசெமி ரஃப்சஞ்சானி
ஏனைய பதவிகள்
1-ஆவது செலவுகள் மற்றும் விவேகம் தொடர்பான குழுத் தலைவர்
பதவியில்
7 பெப்ரவரி 1988 – 4 சூன் 1989
நியமிப்புரூகொல்லா கொமெய்னி
பின்னவர்அக்பர் அசெமி ரஃப்சஞ்சானி
வல்லுநர் மன்ற உறுப்பினர்
பதவியில்
15 ஆகத்து 1983 – 4 சூன் 1989
தொகுதிதெகுரான் மாகாணம்
பெரும்பான்மை2,800,353 (87.8%)[2]
ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
28 மே 1980 – 13 அக்டோபர் 1981
தொகுதிதெகுரான், ரேய், செமிரனாத்
பெரும்பான்மை1,405,976 (65.8%)[3]
தெகுரானின் வெள்ளித் தொழுகைக்கான இமாம்
பதவியில்
14 சனவரி 1980 – 28 பெப்ரவரி 2026
நியமிப்புரூகொல்லா கொமெய்னி
முன்னையவர்உசைன்-அலி மொந்தசேரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அலி ஒசைனி காமெனி

(1939-04-19)19 ஏப்ரல் 1939
மஸ்சாத், ஈரான்
இறப்பு28 February 2026(2026-02-28) (aged 86)
தெகுரான், ஈரான்
இறப்பிற்கான காரணம்வான்வழித் தாக்குதல் மூலம் படுகொலை
அரசியல் கட்சி
  • இசுலாமியக் குடியரசுக் கட்சி (1979–1987)
  • போராளி மதகுருமார்கள் சங்கம் (1977–1989)
  • சுயேச்சை (1989–2026)
துணைவர்
மன்சோரா பாகர்சாதே (தி. 1964)
பிள்ளைகள்6, மோச்தபா உட்பட
பெற்றோர்
  • ஜாவத் காமெனி (தந்தை)
கல்வி
  • கொரசான் மடப்பள்ளி
  • நாசப் மடப்பள்ளி
  • கோம் மடப்பள்ளி
இணையத்தளம்english.khamenei.ir
இராணுவ சேவை
கிளை/சேவை
சேவை ஆண்டுகள்1979–1989[4]
கட்டளை ஈரான் இசுலாமியக் குடியரசின் ஆயுதப் படைகள்
போர்கள்/யுத்தங்கள்
  • ஈரான் – ஈராக் போர்
    • சமன்-ஒல்-ஆமி நடவடிக்கை[5]
  • 2026 ஈரான் மீதான இசுரேலிய-அமெரிக்கத் தாக்குதல் (அலி கமெய்னி படுகொலை)
சுய தரவுகள்
சமயம்இசுலாம்
சமயப் பிரிவுபன்னிருவர், சியா இசுலாம்
Jurisprudenceஜஃபாரி
Creedஉசுலி
Notable idea(s)அணுவாயுதங்களுக்கு எதிரான பத்வா
பதவிகள்
ஆசிரியர்

அலி ஒசெய்னி காமெனி (Ali Hosseini Khamenei, பலுக்கல்: [ʔæˈliː hosejˈniː xɒːmeneˈʔiː] ; 19 ஏப்ரல் 1939 – 28 பெப்ரவரி 2026) ஈரானிய சியா மதகுருவும், அரசியல்வாதியும் ஆவார்.[6][7] இவர் 1989 முதல் 2026 இல் அவர் கொல்லப்படும்வரை ஈரானின் அதியுயர் தலைவராகப் பதவியில் இருந்தார்.[8][9] இவர் முன்னதாக 1981 முதல் 1989 வரை ஈரானின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.[10] காமெனியின் 36 ஆண்டு அதியுயர் தலைவராக இருந்த காலம், மத்திய கிழக்கில் மிக நீண்ட காலம் பணியாற்றிய அரசுத்தலைவராகவும், முகம்மத் ரிசா ஷா பஹ்லவிக்குப் பின்னர் மிக நீண்ட காலம் பணியாற்றிய ஈரானியத் தலைவராகவும் அவரை ஆக்கியது.

ஈரானை ஆண்ட பகலவி பேரரசர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவியை ஆட்சியிலிருந்து தூக்கி எறிய நடைபெற்ற போராட்டத்தின் போது, அலி காமெனி, 6 முறை கைது செய்யப்பட்டார். பின்னர் 3 ஆண்டுகளுக்கு ஈரானை விட்டு நாடு கடத்தப்பட்டார்.[11] 1979-இல் நடைபெற்ற ஈரானியப் புரட்சியின் முடிவில் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி ஈரான் நாட்டை விட்டு துரத்தப்பட்டார். ஈரானில் பகலவி வம்சத்தின் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ஈரான் இசுலாமியக் குடியரசு நாடானது.

1980களில் நடைபெற்ற ஈரான் - ஈராக் போரின் போது, அலி காமெனியின் கட்டுப்பாட்டில் ஈரானிய புரட்சிகர காவல் படை செயல்பட்டது.[12][13]ரூகொல்லா கொமெய்னி ஈரான் நாட்டின் அதி உயர் அதிகாரம் படைத்த ஆன்மீக & அரசியல் தலைவராக இருக்கையில், அலி காமெனி 1981 முதல் 1989 முடிய ஈரான் நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 3 சூன் 1989 அன்று ரூகொல்லா கொமெய்னி இறந்த பின்னர், 4 சூன் 1989 அன்று ஈரான் நாட்டின் அறிஞர்கள் மன்றம் கூடி, அலி கொமெனியை இரானின் அதி உயர் அதிகாரம் படைத்த ஆன்மீகம் மற்றும் அரசியல் பதவிக்கு தேர்வு செய்ததது.[14][15] அலி காமெனி ஈரானின் முப்படைகளையும் கட்டளையிடும் தலைமைத் தலைவர் ஆவார். மேலும் அரசியல் மற்றும் நிர்வாகம், வெளியுறவுக் கொள்கை, தேசியத் திட்டங்கள் போன்றவற்றில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர் ஆவார்.[16][17][18][19][20][21]

ஈரானின் அதியுயர் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைவர் எனும் முறையில் அலி காமெனி ஈரான் நாட்டு நிர்வாகம், நீதித்துறை, இராணுவம், செய்தித்தொடர்பு, ஊடகம் மற்றும் நாடாளுமன்றத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகவோ கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவர்.[10] ஈரானின் காப்பாளர் குழுவால் தேர்வு செய்யப்படும் அறிஞர்கள் குழு வேட்பாளர்கள், அதிபர் வேட்பாளர்கள், நாடாளுமன்ற வேட்பாளர்கள் ஈரானின் அதியுயர் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைவர் என்ற முறையில் அலி கொமெனியின் ஒப்புதல் பெற வேண்டும்.[22]

2026 பெப்ரவரி 28 அன்று, ஈரான் மீதான இசுரேல்-அமெரிக்க வான்வழித் தாக்குதலில் காமெனி கொல்லப்பட்டார்.[23]

இதனையும் காண்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

  1. பதில்: 4 சூன் – 6 ஆகத்து 1989
  2. "چه کسی در نخستین انتخابات خبرگان اول شد؟ +جدول ("Who came first in the first election of the Experts?" )". 7 January 2014 இம் மூலத்தில் இருந்து 10 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171010024415/https://www.mashreghnews.ir/news/520344/%da%86%d9%87-%da%a9%d8%b3%db%8c-%d8%af%d8%b1-%d9%86%d8%ae%d8%b3%d8%aa%db%8c%d9%86-%d8%a7%d9%86%d8%aa%d8%ae%d8%a7%d8%a8%d8%a7%d8%aa-%d8%ae%d8%a8%d8%b1%da%af%d8%a7%d9%86-%d8%a7%d9%88%d9%84-%d8%b4%d8%af-%d8%ac%d8%af%d9%88%d9%84. 
  3. "Parliament members" (in பெர்ஷியன்). ஈரான் நாடாளுமன்றம். Archived from the original on 7 July 2014. Retrieved 28 October 2014.
  4. உச்ச தலைவராக, ஈரானிய இசுலாமியக் குடியரசின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக தீவிரமாக செயல்பட்டார்.
  5. Raee, Sajjad (Winter 2008). Ardestani, Hussein. ed. (in fa)Negin-e Iran - Quarterly for Studies of Iran–Iraq War 7 (26): 9–24. http://www.negineiran.ir/article_3502_e6259811d85ef09a0248f5e7f51ee64b.pdf. பார்த்த நாள்: 15 January 2018. 
  6. "Ali Khamenei". CGIE (fa).
  7. "taking look at the biography of Ali Khamenei". khamenei (fa). Retrieved 21 March 2014.
  8. "Iran". State. 23 July 2010. Retrieved 21 August 2010. The government monitored meetings, movements, and communications of its citizens and often charged persons with crimes against national security and insulting the regime based on letters, e-mails, and other public and private communications.
  9. "Profile: Ayatollah Seyed Ali Khamenei". BBC News. 17 June 2009 இம் மூலத்தில் இருந்து 26 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090326014456/http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/3018932.stm. 
  10. 10.0 10.1 "The Supreme Leader – The Iran Primer". Archived from the original on 30 June 2016. Retrieved 1 July 2016.
  11. "Khamenei.ir". Archived from the original on 12 November 2013.
  12. "Khamenei Will Be Iran's Last Supreme Leader". Newsweek. 17 November 2009 இம் மூலத்தில் இருந்து 16 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170916184019/http://www.newsweek.com/khamenei-will-be-irans-last-supreme-leader-76961. "referring to the enormous power Khamenei has given Iran's Islamic Revolutionary Guards Corps, which, under Khamenei's direct control, has brutally repressed demonstrators, human rights activists, and opposition journalists." 
  13. Jamsheed K. Choksy. "Tehran Politics: Are the Mullahs Losing Their Grip?". World Affairs Journal இம் மூலத்தில் இருந்து 22 ஜூலை 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170722064446/http://www.worldaffairsjournal.org/article/tehran-politics-are-mullahs-losing-their-grip. "Khamenei has strengthened alliances with militant commanders, especially within the Islamic Revolutionary Guard Corps (IRGC), in the hope that all opposition to his authority will continue to be suppressed—as it was during the protests of 2009." 
  14. "Profile: Iran's 'unremarkable' supreme leader Khamenei". BBC News. 4 August 2011 இம் மூலத்தில் இருந்து 18 February 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120218062301/http://www.bbc.co.uk/news/world-middle-east-14362281. 
  15. Ganji, Akbar, "The Latter-Day Sultan: Power and Politics in Iran", Foreign Affairs, November December 2008
  16. "Iran's Khamenei hits out at Rafsanjani in rare public rebuke". Middle East Eye. Archived from the original on 4 April 2016.
  17. "Khamenei says Iran must go green – Al-Monitor: the Pulse of the Middle East". Al-Monitor. Archived from the original on 22 December 2015. Retrieved 31 March 2016.
  18. Louis Charbonneau and Parisa Hafezi (16 May 2014). "Exclusive: Iran pursues ballistic missile work, complicating nuclear talks". Reuters. Archived from the original on 31 July 2017.
  19. "IranWire – Asking for a Miracle: Khamenei's Economic Plan". Archived from the original on 7 March 2016.
  20. "Khamenei outlines 14-point plan to increase population". 22 May 2014. Archived from the original on 1 August 2017. Retrieved 21 May 2017.
  21. "Iran: Executive, legislative branch officials endorse privatization plan". Archived from the original on 5 January 2017.
  22. "Rafsanjani breaks taboo over selection of Iran's next supreme leader". The Guardian. Archived from the original on 18 December 2016.
  23. "Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei is dead, state media says". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2026-03-01. Retrieved 2026-03-01.

உசாத்துணைகள்

  • Sadiki, Larbi (2014). Routledge Handbook of the Arab Spring: Rethinking Democratization. Routledge. ISBN 978-1-317-65004-1.

வெளி இணைப்புகள்

-

புகைப்படங்கள்
ஊடகங்கள்
காணொளிகள்
"https://tamilar.wiki/w/index.php?title=அலி_காமெனி&oldid=437910" இலிருந்து மீள்விக்கப்பட்டது