ரகசிய சினேகிதனே
ரகசிய சினேகிதனே | |
---|---|
இயக்கம் | சுஜோ விசாந்த் |
தயாரிப்பு | எல்.சீனிவாசன் கே. மகேந்திரன் நாயுடு எம். டி.சீனிவாசன் நாயுடு |
கதை | சுஜோ விசாந்த் |
இசை | ஜான் பீட்டர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கே. ஜி. சங்கர் |
படத்தொகுப்பு | ஆர். டி. அண்ணாதுரை |
கலையகம் | ரேவதி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | ஆகத்து 22, 2008 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரகசிய சினேகிதனே (Ragasiya Snehithane) என்பது 2008 ஆண்டைய இந்திய தமிழ் திகில் பரப்பப்பூட்டும் திரைப்படம் ஆகும். இப்படத்தை சுஜோ விசாந்த் எழுதி இயக்க, லட்சுமி ராய் மற்றும் புதுமுகங்களான வசந்த், விஜயராஜ், பிரகாஷ், கந்தன், ஸ்ரீராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், ஜெயசூர்யா, சரண்ராஜ், மகாநதி சங்கர், சேது விநாயகம், ஹேமலதா, கௌதமி வேம்புநாதன், எம். எஸ். பாஸ்கர், பாண்டு, கிரேன் மனோகர் ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜான் பீட்டர் இசை அமைக்க, கே. ஜி. சங்கர் ஒளிப்பதிவு மேற்கொள்ள, ஆர். டி. அண்ணாதுரை படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். இந்த படம் பல தாமதங்களுக்குப் பிறகு 22 ஆகத்து 2008 அன்று வெளியிடப்பட்டது.
கதை
கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, வசந்த் (வசந்த்), விஜய் (விஜயராஜ்), அருண் (பிரகாஷ்), கார்த்திக் (கந்தன்) ஆகியோர் சென்னையில் வாடகை வீட்டில் தங்க முடிவு செய்கின்றனர். அதே நேரத்தில் அவர்களது நண்பர் சக்தி (ஸ்ரீராம்) தனது சொந்த கிராமத்திற்கு செல்கிறார். பின்னர் வசந்தின் காதலி ஜெனிபர் ( லட்சுமி ராய் ) அவர்களுடன் வாழ வருகிறாள். நகரத்துக்கு திரும்பிவரும் சக்தி விசித்திரமாக நடந்து கொள்ளத் தொடங்குகிறான். இதற்கிடையில், போக்கிரி ஜெயசூர்யாவை (ஜெயசூர்யா) போலீசார் தேடுகின்றனர். உள்ளூர் சந்தையில் ஜெயசூர்யா மீது மோதிய ஜெனிபர், அவர் குறித்து காவலர்களுக்கும், காவல் ஆய்வாளருக்கும் ( சரண்ராஜ் ) தெரிவிக்கிறாள்.
வேலையற்ற ஆறு நண்பர்களும் கறுப்புப் பணம் வைத்திருக்கும் அமைச்சர் ( சேது விநாயகம் ) ஒருவரிடமிருந்து அதை திருட முடிவு செய்கிறார்கள். வருமான வரி அதிகாரிகளைப் போல தங்களைக் காட்டிக் கொண்டு, அமைச்சர் இல்லாத நேரத்தில் வீட்டில் சோதனையை நடத்தி, 30 கோடி ரூபாயை ரகசியமாகக் கொள்ளையடிக்கின்றனர். இதன் பின்னர் தன் வீட்டில் கொள்ளையிட்டவர்கள் யார் என்பதை அமைச்சர் கண்டுபிடிக்கிறார். இதற்கிடையில், ஊழல் காவல் ஆய்வாளர் சங்கர் ( மகாநதி சங்கர் ) உதவியுடன் ஜெயசூர்யா சிறையிலிருந்து தப்பிக்கிறார். ஆறு பேரைக் கொல்லும் பணியை அமைச்சர் ஜெயசூர்யாவிடம் ஒப்படைக்கிறார்.
நண்பர்கள் இப்போது தலகோனம் அருவிக்கு அருகிலுள்ள காட்டில் பதுங்கி உள்ளனர். இறுதியில் அவர்களின் இடத்தைக் கண்டுபிடிக்கிறார் ஜெயசூர்யா. அன்று இரவு, ஐந்து நண்பர்களும் நண்பன் சக்தியின் காயமடைந்த உடலைக் கண்டுபிடிக்கின்றனர். தங்கள் நண்பரின் மறைவால் மனம் வருந்திய அவர்கள், திருடப்பட்ட பணத்தின் பங்கைக் கொண்டு அவரை அடக்கம் செய்கிறார்கள். அதன்பிறகு, கார்த்திக், அருண், விஜய் ஆகியோர் மர்மமான முறையில் ஒவ்வொன்றாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி யார் என்றால் அது சக்திதான்.
கடந்த காலங்களில், சக்தியும் அவரது சகோதரியும் ( ஹேமலதா ) அவர்களின் பேராசை கொண்ட சிற்றன்னையால் (கௌதமி வெம்புநாதன்) மோசமாக நடத்தப்படுகின்றனர். அவனது கல்லூரி கட்டணம் செலுத்த அவனது சகோதரி விபச்சாரத்தில் ஈடுபடுகிறாள். சக்தி தனது கிராமத்திற்குத் திரும்பியபோது, தனது சகோதரி வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்வதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். பின்னர் சக்தி அந்த நபரைக் கொல்கிறான். பின்னர் மெல்ல மெல்ல பணத்திற்காக எதையும் செய்யக்கூடிய மனநோயாளியாக மாறிவிடுகிறான். காட்டில், சக்தி ஜெயசூர்யாவின் உதவியுடன் தான் இறந்துவிட்டதாக தன் நண்பர்களை நம்ப வைக்கிறான். பின்னர் ஜெயசூர்யாவைக் கொன்று தனது நண்பர்களை ஒவ்வொருவராக கொல்லத் தொடங்குகிறான்.
சக்தி இறுதியாக ஜெனிபரைக் கொலை செய்து, பின்னர் தனியாக தப்பிய வசந்திடம் எல்லாவற்றையும் சொல்கிறான். இதற்கிடையில், சங்கர் அவர்களின் பணத்தைக் கைப்பற்றுவதற்காக சக்தியின் சகோதரியுடன் காட்டுக்கு வருகிறார். சண்டையின்போது, சக்தி சங்கரைக் கொல்ல முயல்கிறான். அவரது சகோதரி அவரைக் கொலை செய்யாமல் தடுக்க அவனை சமாதானப்படுத்த முயற்சிக்கிறாள். மனநோயாளியாக இருக்கும் சக்தி, அவள் பேச்சைக் கேட்காமல் வசந்தைக் கொல்ல முயற்சிக்கிறான். இறுதியில் சக்தியின் சகோதரிக்கு சக்தியைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது.
நடிகர்கள்
- வசந்த் வசந்தாக
- லட்சுமி ராய் ஜெனிபராக
- விஜயராஜ் விஜயாக
- பிரகாஷ் அருணாக
- கந்தன் கார்த்திக்காக
- ஸ்ரீராம் சக்தியாக
- ஜெயசூரியா ஜெயசூரியாவாக
- மகாநதி சங்கர் காவல் துணை ஆய்வாளராக சங்கராக
- சேது விநாயகம் அமைச்சராக
- ஹேமலதா சக்தியின் அக்காளாக
- கௌதமி வேம்பநான் சக்தியின் சிற்றன்னையாக
- எம். எசு. பாசுகர் அமைச்சரின் நன்பராக
- பாண்டு கல்லூரி துணைவேந்தராக
- கிரேன் மனோகர் அலுவலக மேலாளராக
- பாவா லட்சுமணன் நாயராக
- மேகா
- அசினா
- முத்து
- பி. வெங்கடேஷ்
- வி. அகிலன்
- சரண்ராஜ் காவல் ஆய்வாளர் (கௌரவ தோற்றம்)
தயாரிப்பு
அறிமுக இயக்குநரான சுஜோ விசாந்த் 2004 ஆம் ஆண்டில் குறுக்கெழுத்து என்ற திகில் படத்திற்கான வேலையைத் தொடங்கினார். இந்த படத்திற்கான கதை, திரைக்கதை, வசனங்களை எழுதினார். பல புதுமுகங்கள் முக்கிய வேடங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். இப்படம் சென்னை மற்றும் தலகோணத்தில் படமாக்கப்பட்டது.[1][2][3] பெல்காம் நகரைச் சேர்ந்த லட்சுமி ராய், கதாநாயகியாக நடித்தார். இது அவரது முதல் படமாக இருந்திருக்க வேண்டும்.[4][5] 2005 ஆம் ஆண்டில், படத்தின் பெயரானது குறுக்கெழுத்து என்பது அழகிய ஆபத்து என்று மாற்றப்பட்டது. மேலும் இந்தத் திரைப்படம் அறியப்படாத காரணங்களினால் நீண்டகாலம் வெளிவராமல் இருந்தது. பின்னர் 2008 ஆண்டில் படத்திற்கு ரகசிய சினேகிதனே என்று பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது.[6]
இசைப்பதிவு
படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையை இசையமைப்பாளர் ஜான் பீட்டர் மேற்கொண்டார். படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றன.[7][8]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "இரவு தூங்கலாம்" | ராம், நிசா | 4:26 | |||||||
2. | "காதல் செய்தால்" | Timmy | 3:32 | |||||||
3. | "தில் சாலியா" | டாக்டர். நாராயணன், பத்மா | 5:06 | |||||||
4. | "துப்பாக்கி" | கோபால் ராவ், சுவர்ணலதா | 3:34 | |||||||
5. | "வசந்த காலங்கள்" | ஹரிஷ் ராகவேந்திரா, பிரியா | 5:05 | |||||||
மொத்த நீளம்: |
21:43 |
குறிப்புகள்
- ↑ "Horror is the genre now". தி இந்து. 13 August 2004. பார்க்கப்பட்ட நாள் 19 November 2019.
- ↑ "Kurukkezhuthu". cinesouth.com. Archived from the original on 10 October 2004. பார்க்கப்பட்ட நாள் 19 November 2019.
- ↑ "Horror films are the new trend in Kollywood". indiaglitz.com. 21 June 2004. பார்க்கப்பட்ட நாள் 19 November 2019.
- ↑ https://web.archive.org/web/20070313230244/http://www.cinesouth.com/specials/interviews/lakshmirai.shtml
- ↑ "K sentiment A La Ekta Kapoor". behindwoods.com. 16 July 2005. பார்க்கப்பட்ட நாள் 19 November 2019.
- ↑ "Come September!". சிஃபி. 4 September 2005. பார்க்கப்பட்ட நாள் 19 November 2019.
- ↑ "Azhahiya Aabathu (2005) - John Peter". mio.to. Archived from the original on 14 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 19 November 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Azhahiya Abathu Songs". jiosaavn.com. பார்க்கப்பட்ட நாள் 19 November 2019.