மூவருலா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மூவருலா தமிழ் சிற்றிலக்கிய நூல்களில் ஒன்று. உலா சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது. விக்கிரம சோழன், அவரின் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன், பேரன் இரண்டாம் இராஜராஜ சோழன் ஆகிய மூவரையும் புகழ்ந்து பாடியது. (எனவே மூவருலா எனப்படுகிறது). இம்மூவரையும் பற்றி முறையே 342, 387, 391 பாக்கள் இந்நூலில் உள்ளன. இவை அனைத்தும் கண்ணி வகையைச் சேர்ந்தவை (கலிவெண்பாவில் ஒரே எதுகை வருபவை). சோழர் குலச்சிறப்பு, அரசர் பெருமை, பள்ளி எழுதல், அழகு செய்தல், யானையின் மீது அமர்தல், உடன் வருவோர், அவர்கள் கூற்று, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற ஏழுவகைப் பருவ மகளிரின் அழகு, உணர்ச்சிகள், விளையாட்டுகள், காமுறுதல், பேசுதல் போன்ற செய்திகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. இந்நூலின் பகுதிகளான மூன்று உலாக்களும் தனி நூல்களாகவும் கருதப்படுகின்றன.[1] [2]

இந்த உலாக்களின் பாட்டுடைத் தலைவர்களின் ஆட்சிக்காலம்.

  • விக்கிரம சோழன் 1118-1136
  • குலோத்துங்க சோழன் 1133-1150
  • இராசராசன் உலா 1146-1163

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்1". பார்க்கப்பட்ட நாள் 17-10-2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்2". பார்க்கப்பட்ட நாள் 17-10-2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மூவருலா&oldid=14417" இருந்து மீள்விக்கப்பட்டது