கலிவெண்பா
கலிவெண்பா வெண்பா வகைகளுள் ஒன்று. இஃது இன்னிசைக் கலிவெண்பா, நேரிசைக் கலிவெண்பா என இருவகைப்படும். இன்னிசைக் கலிவெண்பா பதின்மூன்று அடிகள் முதல் பல அடிகளில் தனிச்சொல் பெறாமல் வரும். நேரிசைக் கலிவெண்பாவின் இரண்டிரண்டு அடிகள் ஒவ்வொரு எதுகையும் தனிச்சொல்லும் பெற்றுக் கண்ணி என்ற பெயரில் பலவாக வரும்.
கலிவெண்பா எனினும் வெண்கலிப்பா எனினும் ஒக்கும் என்று யாப்பருங்கல விருத்தியுரை கூறுகிறது. [1]
எடுத்துக்காட்டுகள்
- இன்னிசைக் கலிவெண்பா
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
- நேரிசைக் கலிவெண்பா
கல்லாதார் சிங்கம்எனக் கல்விகேள்விக்கு உரியர்
எல்லாரும் நீயாய் இருந்தமையால் - சொல்ஆரும்
என்அடிக ளேஉனைக்கண்டு ஏத்தின்இடர் தீரும்என்று
பொன்அடிக ளேபுகலாப் போற்றினேன்
பார்வை
மேற்கோள்கள்
- ↑ அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 252