மனோகரன் மலையாளம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எம். மனோகரன்
M. Manoharan
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்
கோத்தா ஆலாம் சா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
8 மார்ச் 2008 – மே 2013
முன்னையவர் கெராக்கான் சிங் சு சென்
பின்னவர்படிமம்:Democratic Action Party Logo.svg கணபதிராவ் விருமன்
பெரும்பான்மை7,184 (2008)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 செப்டம்பர் 1961 (1961-09-13) (அகவை 64)
சிலாங்கூர், மலாயா (தற்போது மலேசியா)
அரசியல் கட்சிபடிமம்:Democratic Action Party Logo.svg ஜ.செ.க
பிற அரசியல்
தொடர்புகள்
படிமம்:Pakatan Harapan Logo.svg பாக்காத்தான் (PH) (2015– )
பாரா (PR) (2008–2015)
மாற்று முன்னணி (BA) (1999–2004)
துணைவர்புசுபநீலா
பிள்ளைகள்அரிகரன்; சிவரஞ்சனி; கணேந்திரா
வாழிடம்(s)கிள்ளான்; சிலாங்கூர்
கல்விவணிகவியல்; மலாயா பல்கலைக்கழகம்; சட்டத்துறை; இங்கிலாந்து
முன்னாள் கல்லூரிசெபீல்ட் பல்கலைக்கழகம், மலாயா பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி, வழக்கறிஞர்

மனோகரன் மலையாளம் அல்லது எம். மனோகரன் (ஆங்கிலம்; மலாய்: M. Manoharan அல்லது Manoharan s/o Malayalam) (பிறப்பு: 13 செப்டம்பர் 1961) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; வழக்கறிஞர்; 8 மார்ச் 2008 முதல் 5 மே 2013 வரை சிலாங்கூர், கோத்தா ஆலாம் சா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்; மலேசிய இந்தியர்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிய இண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகரும் ஆவார்.

இவர் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கமுந்திங் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் போது, 2008 மலேசியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர்; சிறையில் இருந்தே தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்த மலேசிய இந்தியர் என மலேசிய அரசியலில் நன்கு அறியப்படுகிறார். தடுப்புக்காவலில் இருந்தவாறு மலேசியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்றாவது மலேசியரும்[1] ஆவார்.

அரசியல் வாழ்க்கை

ஜனநாயக செயல் கட்சியின் (DAP) உறுப்பினரான் இவர்[2] 1999 மலேசியப் பொதுத் தேர்தலில், சிகாம்புட் மக்களவைத் தொகுதிக்கான ஜசெக வேட்பாளராகப் போட்டியிட்டார். இருப்பினும் பாரிசான் நேசனல் (பிஎன்) வேட்பாளர் டான் கீ குவோங் என்பவரிடம் 16,340 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்; டான் கீ குவோங் 24,926 வாக்குகள் பெற்றார்.

2008 பொதுத் தேர்தலில், மனோகரன், ஜனநாயக செயல் கட்சியின் சார்பாக சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தொகுதியான கோத்தா ஆலாம் சா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, சீன இன வாக்காளர்கள் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில், சீனர் இன வேட்பாளரை விட இரண்டு மடங்கு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[3][4] எம். மனோகரன் 12,699 வாக்குகளைப் பெற்று 7,184 வாக்குகள் பெரும்பான்மையுடன் கோத்தா ஆலாம் சா சட்டமன்றத் தொகுதியை வென்றார்.

2008 பொதுத் தேர்தலில், அவரின் வெற்றிச் செய்தி வியப்பான செய்திகளில் ஒன்றாகும். ஏனெனில் அப்போது அவர் விசாரணையின்றி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். தடுப்புக்காவலில் இருந்தபோது தேர்தலில் வெற்றி பெற்ற மூன்றாவது மலேசியர் மனோகரன் ஆவார்.

பொது

அவர் சிறையில் இருக்கும் போது, அவரின் தொகுதி மக்கள், அவருக்கு வாக்கு அளித்து தேர்தலில் வெற்றி பெறச் செய்தனர். இவர் சிறையில் இருக்கும் போது, இவருடைய வழக்கறிஞர் நிறுவனம் திவாலாகிவிடும் நிலை ஏற்பட்டது.[5]

அதைத் தவிர்க்க, ‘மனோகரனைக் காப்பாற்றுங்கள் நிதி’ உருவாக்கப்பட்டது. மலேசியர்கள் பலரும் ஒன்றாக இணைந்து, பணம் திரட்டி அவருடைய நிறுவனத்தைக் காப்பாற்றி, மலேசியாவின் மூவின ஒற்றுமைக்கு அடையாளம் காட்டினர்.

மேற்கோள்கள்

  1. "Government election losses in Malaysia signal eruption of deep political crisis". World Socialist Web Site (in ஆங்கிலம்). 11 March 2008. Retrieved 12 February 2026.
  2. Hindraf men DAP members பரணிடப்பட்டது 10 பெப்பிரவரி 2008 at the வந்தவழி இயந்திரம் New Straits Times
  3. [1] Channel news Asia Report
  4. [2] Malaysiakini Breaking news
  5. Manoharan getting a YB’s respect at Kamunting detention centre.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மனோகரன்_மலையாளம்&oldid=459802" இலிருந்து மீள்விக்கப்பட்டது