பாப்பா ராயுடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பாப்பா ராயுடு விருமன்
Papparaidu Veraman
சிலாங்கூர் மாநில அமைச்சர்
(மனிதவளம், வறுமை ஒழிப்பு, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள்)[note 1]
பதவியில் உள்ளார்
பதவியில்
21 ஆகத்து 2023
சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்
பந்திங் சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
12 ஆகத்து 2023
முன்னையவர்லாவ் வெங் சான்
(பாக்காத்தான்ஜசெக)
பெரும்பான்மை22,102 (2023)
மாநில உதவி அமைப்புச் செயலாளர்
சிலாங்கூர் ஜனநாயக செயல் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
14 நவம்பர் 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Papparaidu s/o Veraman

31 மார்ச்சு 1975 (1975-03-31) (அகவை 51)
பேராக், மலேசியா
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சிஜசெக (DAP)
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்காத்தான் (PH)
உறவுகள்கணபதிராவ் விருமன் (அண்ணன்)
புவனேஸ்வரி பாலசுப்பிரமணியம்
(அண்ணி)

ஜனனி; கௌரி; நர்மதா; சீனிவாச ராவ் (மருமகன்கள் மற்றும் மருமகள்கள்)
பணிஅரசியல்வாதி

பாப்பா ராயுடு அல்லது பாப்பா ராயுடு விருமன் (ஆங்கிலம்; மலாய்: Papparaidu Veraman அல்லது Papparaidu s/o Veraman) (பிறப்பு: 31 மார்ச் 1975) என்பவர் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிரூதின் சாரி கீழ் உள்ள பாக்காத்தான் அரப்பான் (PH) மாநில நிர்வாகத்தில், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவின் (EXCO) அமைச்சராகவும், ஆகத்து 2023 முதல் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் (MLA) பணியாற்றிய மலேசிய அரசியல்வாதி ஆவார்.

அவர் பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (DAP) உறுப்பினராக உள்ளார். நவம்பர் 2021 முதல் சிலாங்கூர் ஜனநாயக செயல் கட்சியின் மாநில உதவி அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அவர் தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் அமைச்சராகவும், கிள்ளான் மக்களவைத் தொகுதியின் (P110) நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் விருமன் அவர்களின் தம்பியாகவும் உள்ளார்.[1]

அரசியல் வாழ்க்கை

2023 சிலாங்கூர் மாநிலத் தேர்தலில், ஆளும் பாக்காத்தான் அரப்பான் (PH) மற்றும் பாரிசான் நேசனல் (BN) ஆகிய கூட்டணிகள் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் எளிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தன. அதைத் தொடர்ந்து, பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் அமிருதீன் சாரி மீண்டும் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.

பாப்பா ராயுடு, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மேலும் மனிதவளம், வறுமை ஒழிப்பு, பழங்குடியினர்; சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் புத்தமதம், கிறித்தவம், இந்து மதம், சீக்கியம், தாவோயிசம் (LIMAS) ஆகிய துறைகளின் மாநில அமைச்சர் பதவியை 23 ஆகத்து 2023 அன்று மந்திரி பெசார் அமிரூதின் சாரி பாப்பா ராயுடு அவர்களிடம் வழங்கினார்.[2][3]

சிலாங்கூர் மாநிலத் தேர்தல் 2023

2023 சிலாங்கூர் மாநிலத் தேர்தலில், பந்திங் மாநிலத் தொகுதியில் போட்டியிட பாக்காத்தான் அரப்பான் கூட்டணியால் பரிந்துரைக்கப்பட்டார். அதன்வழி அவர் அரசியலில் அறிமுகமானார்.

2023 சிலாங்கூர் மாநிலத் தேர்தலில், பெரிக்காத்தான் நேசனல் (PN) கூட்டணியின் சரவணன் முத்து கிருஷ்ணன்; மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஆங் வெய் யாங் (Ang Wei Yang) ஆகியோரை 22,102 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்து, சிலாங்கூர் மாநில சட்டமன்றத்திற்கு முதன் முறையாக பந்திங் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

தேர்தல் முடிவுகள்

சிலாங்கூர் மாநில சட்டமன்றம்[5][6][7]
ஆண்டு தொகுதி வேட்பாளர் வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
%
2023 N52 பந்திங் பாப்பா
ராயுடு
(ஜசெக)
27,223 80.58% சரவணன்
முத்துகிருஷ்ணன் (கெராக்கான்)
5,121 15.16% 33,783 22,102 75.12%
ஆங் வெய் யாங் (சுயேச்சை) 1,439 4.26%

மேற்கோள்கள்

  1. "Ganabatirau Veraman is the older brother of Papparaidu Veraman, Selangor EXCO Member and Banting MLA". MyPoliticians. Retrieved 8 February 2026.
  2. "10 sworn in as Selangor state excos, including one from Umno". Malaysiakini. 21 August 2023. Retrieved 15 September 2023.
  3. "Selangor MB announces 10 exco portfolios, takes on five". New Straits Times. 23 August 2023.
  4. "Selangor polls: Official Results". New Straits Times. 13 August 2023. Retrieved 15 September 2023.
  5. "SEMAKAN KEPUTUSAN PILIHAN RAYA UMUM KE – 14" (in Malay). Election Commission of Malaysia. Archived from the original on 13 September 2020. Retrieved 17 May 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link) Percentage figures based on total turnout.
  6. "The Star Online GE14". The Star. https://election.thestar.com.my/. பார்த்த நாள்: 24 May 2018.  Percentage figures based on total turnout.
  7. "Results of N48 Sentosa 2023". China Press. https://live.chinapress.com.my/ge15/2023election/Selangor/SELANGOR-N48. 

குறிப்புகள்

  1. Assumed portfolios on 23 August 2023.

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாப்பா_ராயுடு&oldid=433898" இலிருந்து மீள்விக்கப்பட்டது