மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் சங்ககாலப் பெண்புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் உள்ளன. அவை நற்றிணை 250, 369 ஆகியவை.

மதுரைமாநகரில் ஓலைக்கடை என்பது ஒரு பகுதியாக விளங்கியது. அப்பகுதியில் வாழ்ந்தவர் நல்வெள்ளையார் என்னும் இந்தப் புலவர்.

இவரது பால் சொல்லும் செய்திகள்:

நற்றிணை 250

புதல்வன் கிண்கிணி(கால்சலங்கை) ஆர்ப்பத் தேர்கள்(வண்டிகள்) செல்லும் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். அவன் வாயில் பூமணம் கமழ்ந்தது. நெஞ்சில் பூசியிருந்த சந்தனம் கலைந்திருந்தது. அவனைக் கண்ட தந்தைக்கு ஆசை. மகனை அள்ளி அணக்க நெருங்கினான். அவன் காதலி(மனைவி) 'யாரையா நீர்' என்று சொல்லித் தடுத்து நின்றாள்.

இந்தச் செய்தியைத் தலைவன் தன் பாணனிடம் சொல்லித் தலைவியுடன் வாழ வகைசெய்யுமாறு வேண்டுகிறான்.

நற்றிணை 369

தலைவன் பிரிவைப் பொறுத்துக்கொள்ளுமாறு தலைவியைத் தோழி வற்புறுத்தும்போது, தலைவி தன்னால் பொறுத்துக்கொள்ள இயலாமையைத் தெரிவிக்கும் பாடல் இது.

பெரும்புண் மாலை

நுடரின் வெப்பம் தணிந்தது. குருகினம் வானில் பறக்கிறது. முல்லை அரும்புகள் மலர்கின்றன. அவர் இன்னும் வரவில்லை.

ஞெமை

ஞெமை மரங்கள் ஓங்கியுள்ளத் இமயமலை.

கங்கை

இமய மலையிலிருந்து பொங்கிவரும் கங்கையாறு போன்ற என் காம வெள்ளத்தை நீந்திக் கடக்க எனக்கு வழி தெரியவில்லையே!