மாற்பித்தியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாற்பித்தியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாகச் சங்கத்தொகை நூல்களில் 2 பாடல்கள் உள்ளன. அவை புறநானூறு 251, புறநானூறு 252.

இரண்டும் தாபதவாகை என்னும் துறையைச் சேர்ந்தவை. 'நாலிரு வழக்கின் தாபத பக்கம்' என்று தொல்காப்பியம் (1021) இதனைக் குறிப்பிடுகிறது. தவம் செய்பவரைப் பற்றிக் கூறுவது தாபதவாகை. தவம் செய்வோரின் பணி எட்டு வகையில் அமைந்திருக்கும் என்பது தொல்காப்பியர் வகைப்பாடு.

  • பித்தன் என்பது ஆண்பால். பித்தி என்பது பெண்பால். பித்தியார் பெண்பாற் புலவர்.
  • மாயம் செய்பவன் மால். திருமால். இப்புலவர் வாழ்க்கையை மாயம் என்று காட்டுவதால் மால் என்னும் சிறப்பு அடைமொழியைப் பெற்றுள்ளார்.

தாபத வாழ்க்கை

  • மலையில் மூங்கில் போல் ஒழுகும் அருவியில் நீராடுவர்.
  • வெளிச்சத்துக்காகக் காட்டு யானை ஒடித்துப் பொட்டுக் காய்ந்த விரகில் தீ மூட்டுவர்.
  • பின்புறம் தொங்கும் புரிசடையாடு வாழ்வர்.
  • அவர்களது சடை தில்லைக் காய்க் கொத்துப் போல் இருக்கும்.
  • தாளி என்னும் இலையைக் கொய்து படையல் செய்து உணவாக்கிக் கொள்வர்.

மால் (மாய) வாழ்க்கை

  • இன்று தவம் செய்பவன் ஒரு காலத்தில் 'இல் வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவனாய் இருந்தவன் - என்கிறார்.
  • இன்று புரிசடையைப் புலர்திக்கொண்டிருப்பவன் ஒரு காலத்தில் பாவை போன்ற மகளிரை ஏங்கவைத்து அவர்களின் வளையல்களை நழுவும்படி செய்தவன் - என்கிறார்.
"https://tamilar.wiki/index.php?title=மாற்பித்தியார்&oldid=11832" இருந்து மீள்விக்கப்பட்டது