குறமகள் இளவெயினி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

குறமகள் இள எயினி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புறநானூறு 157 எண் கொண்ட பாடல் ஒன்று மட்டும் இவர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இவரது பெயர் குறமகள் குறியெயினி என்னும் புலவரின் பெயர் அமைப்பைப் போன்றது.

புறநானூறு 157 சொல்லும் செய்தி

ஏறைக்கோன் என்னும் மன்னனின் பெருமையை மற்றொரு மன்னனிடம் கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

ஏறை

ஏறு என்னும் பெயர் கொண்ட இந்த ஊர் இக்காலத்தில் 'காளையார் கோயில்' என்னும் பெயருடன் வழங்கப்படுகிறது.

ஏறைக்கோன் படைத்தலைவன்

ஏறைக்கோன் தன் படைவீரர்களைப் பழிக்கமாட்டான். தான் முன்னின்று போர்புரிந்து வெல்வான்.

ஏறைக்கோன் தூதன்

பகை வேந்தர்களின் அவையில் அஞ்சாது நடக்கும் ஆண்மை நிறைந்தவன்.

ஏறைக்கோன் பண்புகள்

தன்னைச் சார்ந்தவர்கள் தனக்குத் தப்பு செய்தால் அதனை ஏறைக்கோன் பொறுத்துக்கொள்வான். பிறர் தம்மை அறியாமல் செய்யும் தவறுகளுக்காகத் தான் நாணுவான். அவர்கள் செய்யும் தவற்றினுக்குத் தானும் ஒரு காரணம் என்று எண்ணும் மனப்பாங்கு உள்ளவன்.

குறவர் பெருமகன்

மலைவாழ் குடிகளைக் குறவர் என வழங்குதல் சங்ககால வழக்கம். ஏறைக்கோனைக் குறவர் பெருமகன் என்று புலவர் குறிப்பிடுவதால் இவன் மலைசார் மக்களின் தலைவன் எனத் தெரிகிறது.

"https://tamilar.wiki/index.php?title=குறமகள்_இளவெயினி&oldid=11818" இருந்து மீள்விக்கப்பட்டது