மகளிர் மட்டும்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மகளிர் மட்டும்
சுவரிதழ்
இயக்கம்சிங்கீதம் சீனிவாசராவ்
தயாரிப்புகமல்ஹாசன்
கதைகமல்ஹாசன்
திரைக்கதைகிரேசி மோகன்
இசைஇளையராஜா
நடிப்புநாசர்
ரேவதி
ஊர்வசி
ரோகிணி
ஒளிப்பதிவுதிரு
படத்தொகுப்புஎன். பி. சதீஷ்
கலையகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடு25 பிப்ரவரி 1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகளிர் மட்டும் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி நடித்த இப்படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கினார், கமல்ஹாசன் தயாரித்துள்ளார்.[1][2][3]

இத்திரைப்படம் 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. தெலுங்கு, மலையாள மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தி மொழியில் லேடீஸ் ஒன்லி எனும் பெயரில் மீண்டும் எடுக்கபட்டது, ஆனால் அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

நடிகர்கள்

தயாரிப்பு

கமல்ஹாசன் திரு எனும் திருநாவுக்கரசு என்பவரை இந்த திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தி உள்ளார்.[4]

பாடல்கள்

இளையராஜா பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார் மற்றும் கவிஞர் வாலி பாடல்களை எழுதியுள்ளார்.

எண் பாடல் பாடியவர்கள்
1 "மகளிர் மட்டும்" குழுவினர்
2 "கறவை மாடு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
3 "மொத்து மொத்துனு" எஸ். ஜானகி
4 "வீட்டை தாண்டி" எஸ். ஜானகி

மேற்கோள்கள்

  1. "ஜானகி, பாப்பம்மா, சத்யா, மூக்கன்; 25-வது ஆண்டில் மகளிர் மட்டும்". இந்து தமிழ். 25 பிப்ரவரி 2019. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/156892-25-7.html. பார்த்த நாள்: 14 செப்டம்பர் 2020. 
  2. "'நாசர், ரோகிணி… அசத்துவாங்கன்னு நினைக்கவே இல்ல!' – கிரேஸிமோகனின் 'மகளிர்மட்டும்' நினைவுகள்". இந்து தமிழ். 25 பிப்ரவரி 2019. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/156652--2.html. பார்த்த நாள்: 14 செப்டம்பர் 2020. 
  3. "'மகளிர் மட்டும்' படத்தில் தனது பணி என்ன? - கமல் வெளிப்படை". இந்து தமிழ். 12 சூன் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/559092-kamal-about-magalir-mattum.html. பார்த்த நாள்: 14 செப்டம்பர் 2020. 
  4. "ஒளிப்பதிவாளர் திரு பிறந்தநாள் ஸ்பெஷல்: கொண்டாடப்பட வேண்டிய ஒளிக்கலைஞன்". இந்து தமிழ். 2 சூன் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/557528-cinematographer-thiru-birthday-special.html. பார்த்த நாள்: 14 செப்டம்பர் 2020. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மகளிர்_மட்டும்&oldid=36087" இருந்து மீள்விக்கப்பட்டது