பியா பஜ்பை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பியா பஜ்பை
பிறப்புசனவரி 6, 1989 (1989-01-06) (அகவை 36)
எடவாஹ், உத்தர் பிரதேஷ், இந்தியா
பணிநடிகை, விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008–அறிமுகம்
உயரம்5 அடி 4 அங் (1.63 m)

பியா பஜ்பை இவர் இந்திய நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

திரைப்பட வாழ்க்கை

பியா 2008ம் ஆண்டு ஏ. எல். விஜய் இயக்கத்தில் பொய் சொல்ல போறோம் என்ற தமிழ் நகைச்சுவைத் திரைப்படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில் அஜித் மற்றும் நயன்தாரா நடித்த ஏகன் என்ற திரைப்படத்தில் நவ்தீப்பின் ஜோடியாக நடித்தார். 2010ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் கோவா என்ற திரைப்படத்தில் நடித்தார். கே. வி. ஆனந்த் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளிவந்த கோ என்ற திரைப்படத்தில் ஜீவா, அஜ்மல் மற்றும் கார்த்திகா நாயர் இவர்களுடன் இணைந்து நடித்தார். 2012ம் ஆண்டு மாஸ்டர்ஸ் என்ற மலையாள மொழித் திரைப்படத்தில் அறிமுகமானார். 2013ம் ஆண்டு பச்க்பென்ச் ஸ்டுடென்ட் என்ற தெலுங்கு திரைப்படத்தில் மஹத் ராகவேந்திராவுடன் நடித்தார். 2014ம் ஆண்டு எக்ஸ் என்ற ஆங்கில திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2008 பொய் சொல்ல போறோம் அம்ரிதா தமிழ்
2008 ஏகன் பூஜா தமிழ்
2009 நின்னு காளிசகா பிந்து தெலுங்கு
2010 கோவா ரோஷினி தமிழ்
2010 பலே பாண்டியா வைஷ்ணவி தமிழ்
2011 கோ சரஸ்வதி (சரோ) தமிழ் பரிந்துரை - சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது
2012 மாஸ்டர்ஸ் தக்ஷ மலையாளம்
2012 சட்டம் ஒரு இருட்டறை தமிழ்
2013 பச்க்பென்ச் ஸ்டுடென்ட் தெலுங்கு
2013 தளம் ஸ்ருதி தெலுங்கு
2014 கூட்டம் ஸ்ருதி தமிழ்
2014 கேள்வி மலையாளம் படபிடிப்பில்
2014 எக்ஸ் ஆங்கிலம் படபிடிப்பில்
2014 நெருங்கி வா முத்தமிடாதே தமிழ் படபிடிப்பில்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பியா_பஜ்பை&oldid=23062" இருந்து மீள்விக்கப்பட்டது