பிந்து கோஷ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிந்து கோஷ்
பிறப்புவிமளா
தேசியம்இந்தியர்
பணிநடிகை, நடன இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1982-1991
குறிப்பிடத்தக்க படைப்புகள்கோழி கூவுது
உருவங்கள் மாறலாம்
டௌரி கல்யாணம்
தூங்காதே தம்பி தூங்காதே
சூரக்கோட்டை சிங்கக்குட்டி
விடுதலை

பிந்து கோஷ் (Bindu Ghosh) என்பவர் ஒரு திரைப்பட, நாடக நடிகை மற்றும் நடன இயக்குனர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். இவரது முதல் படம் 1982 இல் வெளியான கோழி கூவுது ஆகும்.[1]

நடன இயக்குனராக

பிந்து கோசின் இயற்பெயர் விமலா ஆகும். " களத்தூர் கண்ணம்மா " இவரது முதல் படம். அந்த படத்தில், கமல்ஹாசனுடன் சேர்ந்து குழு நடனமாக "எல்லோரும் நலம் வாழ" என்ற பாடலில் நடனமாடியுள்ளார். அன்றிலிருந்து தங்கப்பன் மாஸ்டரின் அனைத்து படங்களிலும் குழு நடனங்களில் இடம்பெற்றுள்ளார்.[2]

நடிகையாக

துவக்கத்தில் நாடகங்களில் நடித்துவந்த இவர் பின்னர் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்கத் துவங்கினார். இவர் நடிகர்கள் இரசினிகாந்து, கமல்ஹாசன், சிவாஜி கணேசன், மோகன், பிரபு, விசயகாந்து, கார்த்திக் ஆகியோருடன் நடித்துள்ளார்.

இவர் கோழி கூவுது, உருவங்கள் மாறலாம், டௌரி கல்யாணம், தூங்காதே தம்பி தூங்காதே, சூரக்கோட்டை சிங்கக்குட்டி, ஓசை, கொம்பேறிமூக்கன், நீதியின் நிழல், நவக்கிரக நாயகி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இப்போது

இவரது உடல் நிலை காரணமாக நடிப்பு வாழ்க்கையை தொடர்வது என்பது சிரமமாக ஆனது. இவரது இரண்டு மகன்களுடன் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடன இயக்குனர்களாக பணிபுரிகிறார்கள் [3][4][5][6]

திரைப்படவியல்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1982 கோழி கூவுது அறிமுக படம்
1983 உருவங்கள் மாறலாம்
1983 டௌரி கல்யாணம்
1983 தலை மகன்
1983 வளர்த்த கடா
1983 சூரக்கோட்டை சிங்கக்குட்டி சாந்தா
1983 தூங்காதே தம்பி தூங்காதே
1984 ஒசை
1984 அன்பே ஓடிவா
1984 கொம்பேறி மூக்கன்
1984 தேன் கூடு
1985 நீதியின் நிழல்
1985 வீட்டுக்காரி
1985 நெராரியம் நேராட்டு சாவித்ரி
1985 நவக்கிரக நாயகி
1985 மங்கம்மா சபதம்
1986 எங்கள் தாய்க்குலமே வருக
1986 விடுதலை
1987 திருமதி ஒரு வெகுமதி ஆனந்தாள்
1987 குடும்பம் ஒரு கோயில்
1987 சொல்ல துடிக்குது மனசு
1988 தாயம் ஒண்ணு
1988 பெல்லி சேசி சூடு
1988 லூஸ் லூஸ் அரப்பிரி லூஸ்
1990 பிராணனிகி பிராணம்
1991 செந்தூர தேவி பக்தர்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பிந்து_கோஷ்&oldid=23056" இருந்து மீள்விக்கப்பட்டது