பஞ்சமர் இலக்கியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பஞ்சமர் என்பவர்கள் இந்து மதத்தில் உள்ள நால் வருனங்களுக்கு அப்பாற்பட்ட ஐந்தம் வருனத்தார்கள். ஈழத்து தாழ்த்தப்பட்ட மக்களின் ஆக்கங்கள், அவர்களின் பிரச்சினைகளை கருப்பொருளாக அல்லது முன்னிறுத்தும் ஆக்கங்கள் ஆகியவை ஈழத்து பஞ்சமர் இலக்கியம் எனலாம். சாதி, ஆதிக்க, சமய, அரசியல், சமூக கட்டமைப்புக்களின் தாக்கங்கள், அக்கட்டமைப்புக்களில் இருந்து மீட்சி, அக்கட்டமைப்புகளை உடைப்பது அல்லது மாற்றியமைப்பது தொடர்பான சிந்தனைகளைத் தாழ்த்தப்பட்ட இலக்கியம் பிரதானமாக மையப்படுத்துகின்றது. மேலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல், உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதர மேன்படுத்தல், மாற்று சமூக கட்டமைப்பு வடிவங்கள், சமத்துவம் என்று தாழ்த்தப்பட்ட இலக்கியக் கருப்பொருள்கள் மேலும் விரியும். ஈழத்து சூழலில் அதனை மையப்படுத்து எழும் தாழ்த்தப்பட்ட இலக்கியங்கள் பிற தாழ்த்தப்பட்ட இலக்கியங்களில் இருந்து மாறுபட்டு நிற்கும்.பஞ்சமி நிலம் இந்தியாவில் பஞ்சமர் என்கிற பறையர்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கிய நிலங்கள் பஞ்சமி நிலம் என்று அழைக்கப்படுகிறது

ஈழத்து பஞ்சமர் எழுத்தாளர்கள்

ஈழத்து பஞ்சமர் எழுத்தாளர்களின் படைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பஞ்சமர்_இலக்கியம்&oldid=9773" இருந்து மீள்விக்கப்பட்டது