நாராயணசாமி சத்யமூர்த்தி
Jump to navigation
Jump to search
நா. சத்யமூர்த்தி | |
---|---|
பிறப்பு | Narayanasami Sathyamurthy சூலை 10, 1951[1] சேதுர், புதுசேரி |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகம் |
பணி | வேதியியலாளர் |
அமைப்பு(கள்) | இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், மொகாலி, இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் |
நாராயணசாமி சத்யமூர்த்தி என்ற இந்திய வேதியலாளர் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் ஜூலை 10, 1951ல் பிறந்தார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் மொஹலி என்ற இடத்தில் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை தோற்றுவித்தார். இவர் தனது பி.எஸ்சி. மற்றும் எம்.எஸ்சி. பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1975இல் அமெரிக்க நாட்டில் உள்ள ஓக்ளஹாமா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஆராய்ச்சிப் பட்டத்திற்கு அடுத்தபடியாக மேற்படிப்பு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற ஜே.சி. பொலானியின் ஆய்வகத்தில் தனது கண்டுபிடிப்புகளை மேற்கொண்டார். பின்னர் 1975ல் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1985ம் ஆண்டு அந்நிறுவனத்திலேயே பேராசிரியரானார்.
வேதியியல் துறைக்கு பங்களிப்பு
- அறிமுறையிரசாயனவியல்
- மூலக்கூறு தாக்க இயக்கவியல்
- கணிப்பிய வேதியியல்
விருதுகளும் கெளரவங்களும்
- சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 1990.[2]
- உலக அறிவியல் கலைக்கூடம், திரியசுடு, இத்தாலி 2005 வழங்கிய உறுப்பினர் விருது.[3]
மேற்கோள்
- ↑ "Narayanasami Sathyamurthy". home.iitk.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-24.
- ↑ "Awardee Details: Shanti Swarup Bhatnagar Prize". ssbprize.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-24.
- ↑ Sciences (TWAS), The World Academy of. "Sathyamurthy, Narayanasami". TWAS (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-05-24.