குப்புசாமி நாகராஜன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குப்புசாமி நாகராஜன்
Kuppuswamy Nagarajan
பிறப்பு 15 ஆகத்து 1930 (1930-08-15) (அகவை 94)
தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
Alma mater
துறை ஆலோசகர்
  • தூ. ரா. கோவிந்தாச்சாரி
  • சி. எல். ஸீடீவன்சு
  • ஜெ. டீ. ராபர்ட்சு
  • எச். சுமிட்
அறியப்பட்டதுமருத்து ஆராய்ச்சி
சிந்தமிழ்
வர்சில்
சட்ரானிடசோல்

குப்புசாமி நாகராஜன் (Kuppuswamy Nagarajan)(பிறப்பு: செப்டம்பர் 15, 1930) என்பவர் இந்திய கரிமவேதியியலாளர் ஆவார்.[1] இவர் அறிவியல் அறிஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினை பெற்றுள்ளார்.[2]

கல்வி மற்றும் பணிகள்

நாகராஜன் தமிழ்நாட்டில் உள்ள சிறுபலை எனும் கிராமத்தில் பிறந்தார். சென்னையிலுள்ள இலயோலாக் கல்லூரியில் பி.ஏ. ஹானர்சு பட்டத்தினை வேதியியல் பாடத்தில் 1950ஆம் ஆண்டில் பெற்றார். பின்னர் 1954ஆம் ஆண்டு மாநிலக் கல்லூரி முனைவர் பட்டத்தினை மாநிலக் கல்லூரியின் பேராசிரியர் டி.ஆர் கோவிந்தாச்சாரி, வழிகாட்டுதலில் பெற்றார்.[3] டைலோஃபோரின், ஜெண்டியானின் மற்றும் வெடெலோலாக்டோன் போன்ற பல இயற்கை தயாரிப்புகளின் கட்டமைப்பு தெளிவுபடுத்தலில் மேலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் முனைவர் பட்ட மேல் ஆய்வினை டெட்ராய்டின் வெய்ன் மாநிலப் பல்கலைக்கழகம் (1957-59), பசடேனாவின் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் (1959-60) மற்றும் சுவிட்சர்லாந்தின் சூரிக் பல்கலைக்கழகத்தில் (1961-62) மேற்கொண்டார். இதன்பிறகு, மருத்துவ வேதியியல் தலைவராக, சிபா ஆராய்ச்சி மையத்திலும் (1962-84), இயக்குநராக, ஆர் & டி ஆஃப் சியர்ல் இந்தியா, பம்பாய் (1984-92); நிறுவனர் இயக்குநர் ஆர் & டி மையம், ரெகான் லிமிடெட் (1992-2001); கார்ப்பரேட் ஆலோசகர், ஹிகல் லிமிடெட், மும்பை (2001-); மற்றும் ஆலோசகர், ஆராய்ச்சி மேம்பாட்டு மையம், அல்கெம் லேபரேட்டரீஸ் லிமிடெட், பெங்களூர் (2006), இந்திய தேசிய அறிவியல் கழக மூத்த விஞ்ஞானி பரிமாற்ற திட்டத்தின் கீழ், ராயல் சொசைட்டி (1982-83), பிரஞ்சு கழகம் (1984-85) மற்றும் போலந்து கழகம் (1988-89) ஆகியவற்றில் ஆய்வினைத் தொடர்ந்தார்.[4]

விருதுகள்

நாகராசனுக்கு இந்திய அரசு, 1974ஆம் ஆண்டு வேதியியல் அறிவியலுக்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினை வழங்கியது.[5] வேதியியல் ஆய்வுக் கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது (2004), பேராசிரியர் வெங்கட்ராமன் சொற்பொழிவு விருது (1979 மற்றும் 2007) மற்றும் இந்திய அறிவியல் காங்கிரசு சங்கத்தின் பிளாட்டினம் ஜூபிலி சொற்பொழிவு விருது (1995), பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (1974) மற்றும் மகாராட்டிர அறிவியல் கழக உறுப்பினர் விருதினையும் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=குப்புசாமி_நாகராஜன்&oldid=25483" இருந்து மீள்விக்கப்பட்டது