இ. ம. வெ. கிருட்டிணமூர்த்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இ. ம. வெ. கிருட்டிணமூர்த்தி
E. M. V. Krishnamurthy
பிறப்புஇடையாற்று மங்கலம் வெங்கடராம கிருட்டிணமூர்த்தி
18 சூன் 1934
அரியலூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு26 அக்டோபர் 2012(2012-10-26) (அகவை 78)
கான்பரா, ஆத்திரேலியா
தேசியம்இந்திய மக்கள்
துறைகணினியியல்
அறியப்படுவதுதுரித வகுத்தல் படிமுறை
கோட்பாட்டு கணினி அறிவியல்

இடையாற்று மங்கலம் வெங்கடராம கிருட்டிணமூர்த்தி (E. M. V. Krishnamurthy)(18 சூன் 1934 - 26 அக்டோபர் 2012) இந்தியாவில் பிறந்த கணினி அறிவியலாளர் ஆவார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பேராசிரியராக இருந்தார். இவர் முதுபெரும் பேராசிரியர் கணினி அறிவியல் ஆய்வகம், தகவல் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி பள்ளி, கான்பெரா ஆத்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளார்.

கிருட்டிணமூர்த்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மதிப்புமிக்க சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினைப் 1978ஆம் ஆண்டு பெற்றார்.[1] இவர் இந்தியா, ஆத்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற நாடுகளின் பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்