தெலுங்கு நாயுடு
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
|---|---|
| தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், புதுச்சேரி, கேரளம், | |
| மொழி(கள்) | |
| தெலுங்கு, தமிழ், கன்னடம், துளு | |
| சமயங்கள் | |
| இந்து |
நாயுடு (Naidu) என்பது தெலுங்கு பேசும் சமூகப் பிரிவினரால் பயன்படுத்தப்படும் ஒரு பட்டமாகும்.[1] இம்மக்கள் தங்களின் பாரம்பரிய தொழில்கள் அடிப்படையில் பல்வேறு உட்பிரிவுகளாக உள்ளார். குறிப்பாக நாயுடு பட்டத்தினை பயன்படுத்தும் பலிஜா, கம்மவார், கவரா, கொல்லா, வெலமா, முத்திரியர் [2] மற்றும் போயர் சமூகத்தினர் தமிழ் நாட்டில் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.[3]
வரலாறு
ஆந்திராவில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசு ஆட்சிக்காலத்தில் அவர்களால் குடியேறிய, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் குழுவினர்.[4]
1909 - இல், எட்கர் துர்ச்டன், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகை புள்ளி விவரங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது என்னவெனில், "நாயுடு" அடைமொழி பயன்படுத்திய சாதிகள் எவையெவை எனப் பின்வருமாறு கூறியுள்ளார். அவை முறையே, பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, ஈடிகா நாயுடு, கொல்லா, கலிங்கி, காப்பு, முத்திரியர், மற்றும் வேலம என்பனவாகும். மேலும் சமஸ்கிருதத்தில் பாதுகாவலர் என்பவர் "நாயுடு" எனும் சொல் தமிழில் நாயக்கர் எனவும் அழைக்கப்படும் என்று கூறியுள்ளார்.[5] மேலும் இவர்கள் தமிழகத்தில் கொங்கு நாட்டு பகுதிகளான நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளிலும், தெற்கு பகுதியில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும், மத்திய பகுதியில் தஞ்சை, திருச்சி ஆகிய பகுதிகளிலும், சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், வேலூர் , திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி, ஆகிய இடங்களிலும் அதிகமாக வாழுகிறார்கள்.
அரசியல்வாதிகள்
கவர பலிஜா இனம்
- வரதராஜுலு நாயுடு - முன்னாள் மாநில தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி.[6]
- திருச்சி இரா. சவுந்தரராசன் - முன்னாள் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்[7]
- விசயகாந்து - முன்னாள் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்[8]
- எ. வ. வேலு - தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர்[7]
- தே. ஜனார்த்தனம் - முன்னாள் தமிழக பால்வளத்துறை அமைச்சர்
- கு. பிச்சாண்டி - முன்னாள் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர்[7]
- பி. கே. சேகர் பாபு - தமிழக அறநிலையத்துறை அமைச்சர்[9]
- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் - முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சர்.
- இ. மதுசூதனன் - முன்னாள் கைத்தறி மற்றும் உணவுத்துறை அமைச்சர்
- பத்மசா நாயுடு - முன்னாள் மேற்கு வங்க ஆளுநர்.[10]
- என். வரதராசன் - முன்னாள் மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)[11]
கம்மவார் இனம்
- வெங்கையா நாயுடு, முன்னாள் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்[12]
- என். டி. ராமாராவ் - முன்னாள் ஆந்திர முதலமைச்சர்[13]
- நா. சந்திரபாபு நாயுடு - ஆந்திர முதலமைச்சர்[14]
- வைகோ, தலைவர், மதிமுக[15]
- பா. ராமச்சந்திரன் - முன்னாள் ஒன்றிய மின்துறை அமைச்சர், கேரள ஆளுநர்
- இரா. பிரபு - முன்னாள் ஒன்றிய வேளாண்துறை இணை அமைச்சர்
- எஸ். ஆர். பாலசுப்ரமணியன் - முன்னாள் ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர், முன்னாள் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர்
- ஆற்காடு வீராசாமி - முன்னாள் மின்துறை அமைச்சர்
- பி. வி. ரமணா - முன்னாள் பால்வளத்துறை அமைச்சர்
- கடம்பூர் ராஜு - முன்னாள் செய்தித்துறை அமைச்சர்
- டி. கே. எம். சின்னையா - முன்னாள் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
- கே. பாண்டுரங்கன் - முன்னாள் தொழில் துறை அமைச்சர்
- ப. வெ. தாமோதரன் - முன்னாள் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
- கே. சுதர்சனம் - முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
வெலமா இனம்
- கி. இராசாராம் நாயுடு - முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர்
- பி. வி. ராஜமன்னார் - சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் தமிழக ஆளுநர்
திரைப்படத்துறை
தெலுங்குத் திரைப்படத்துறை
- என். டி. ராமராவ்
- ஜூனியர் என்டிஆர்
- சிரஞ்சீவி[16]
- ராம் சரண்
- அல்லு அர்ஜுன்
- கட்டமனேனி கிருஷ்ணா
- மகேஷ் பாபு
- வெங்கடேஷ் தக்குபாட்டி
- அக்கினேனி நாகார்ஜுனா
- அக்கினேனி நாகேஸ்வர ராவ்
- எஸ். வி. ரங்கராவ்
- நானி - தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்.
- டி. ராமா நாயுடு - தயாரிப்பாளர் (சுரேசு புரொடக்சன்சு)
- இராஜமௌலி - திரைப்பட இயக்குநர்
தமிழ்த் திரைப்படத்துறை
- விஜயகாந்த்
- எம். ஆர். ராதா
- ராதாரவி
- ராதிகா
- பாக்யராஜ்
- கஸ்தூரி ராஜா
- செல்வராகவன்
- தனுஷ்[17]
- விமல்
- ஆதி
- ரவி கிருஷ்ணா
- சமுத்திரக்கனி
- லிங்குசாமி
மேற்கோள்கள்
- ↑
- E. A. Ramaswamy, ed. (1977). The Worker and His Union. Allied Publishers. p. 14. ISBN 9780883869918.
- ↑ ந. சி கந்தையா பிள்ளை, ed. (2003). சிந்துவெளித் தமிழர். Vol. 13. அமிழ்தம் பதிப்பகம். p. 156.
- ↑ L. Ramamoorthy, ed. (2000). Language Loyalty and Displacement: Among Telugu Minorities in Pondicherry. Pondicherry Institute of Linguistics and Culture. p. 9. ISBN 9788185452104.
- ↑ Journal of Indian History. Vol. 85. University of Kerala. 2006. p. 181.
- ↑ Thurston, Edgar; Rangachari, K. (1909). Castes and Tribes of Southern India. Vol. V (M to P). Madras: Government Press. p. 138. Retrieved 2012-03-24.
- ↑ Dr. E. Sa. Visswanathan, ed. (1983). The political career of E.V. Ramasami Naicker: a study in the politics of Tamil Nadu, 1920-1949. Ravi & Vasanth Publishers. p. 32.
Another important non Brahman leader in the Tamilnad branch of the Congress and the MPA was Dr. P. Varadarajulu Naidu ( 1887-1957 ), a Balija Naidu, from Salem district.
- ↑ 7.0 7.1 7.2 தமிழ்நாடு கவரா நாயுடு நல சங்கத்தினர் செய்தியாளர் சந்திப்பு.
- ↑ "DMDK Founder Vijayakanth No More, Know All About This Life History". Oneindia. https://www.oneindia.com/photos/dmdk-founder-vijayakanth-no-more-know-all-about-this-life-history-111978.html.
- ↑ "களைகட்டும் தேர்தல் பந்தயம்!". தினமலர் நாளிதழ் (மே 01, 2021).
- ↑
- Roger D. Long, ed. (2004). Charisma and Commitment in South Asian History: Essays Presented to Stanley Wolpert. Orient Blackswan. p. 275. ISBN 9788125026419.
Sarojini was a Brahmin and a Bengali, while Dr Naidu was from the Balija community and a Telugu
- Roger D. Long, ed. (2004). Charisma and Commitment in South Asian History: Essays Presented to Stanley Wolpert. Orient Blackswan. p. 275. ISBN 9788125026419.
- ↑ க. பாலபாரதி, ed. (2009). மக்கள் சேவையில் மலர்ந்த தோழர் என். வரதராஜன். பாரதி புத்தகாலயம். p. 17,18.
- ↑ Kancha Ilaiah Shepherd, Karthik Raja Karuppusamy, ed. (2021). The Shudra: Vision for a New Path. Penguin Random House India Private Limited. p. 176. ISBN 9789390914241.
Venkaiah Naidu, though he comes from the rich Shudra Kamma community, could not acquire any philosophically independent leadership status because he did not have the vision and courage to challenge RSS–BJP Brahminism.
- ↑ Agarala Easwara Reddi, D. Sundar Ram, ed. (1994). State Politics in India: Reflections on Andhra Pradesh. M.D. Publications Pvt. Ltd. p. 102. ISBN 9788185880518.
The rise to power of NTR , a Kamma , for the first time after 27 years of Congress Rule in Andhra Pradesh , did produce a reaction , particularly among the Congress
- ↑ Erich Reiter, Peter Hazdra, ed. (2013). The Impact of Asian Powers on Global Developments. Springer Science & Business Media. p. 129. ISBN 9783662131725.
A case in point is Chandrababu Naidu, Chief Minister of Andhra Pradesh. He is a Kamma (Andhra peasant caste), which means that he can rely on the extensive rural base which supports his party "Telugu Desam" (= Telugu Land; Telugu is the language of Andhra Pradesh).
- ↑ Andrew Wyatt, ed. (2009). Party System Change in South India: Political Entrepreneurs, Patterns and Processes. Routledge. p. 2003. ISBN 9781135182014.
- ↑ "லோக்சபா தேர்தலை குறிவைத்து காய் நகர்த்துகிறார் சிரஞ்சீவி". தினமலர். 31 ஆகத்து 2008. Retrieved 11 அக்டோபர் 2020.
- ↑ https://tamil.oneindia.com/news/2004/11/18/dhanush.html