தீண்ட தீண்ட

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தீண்ட தீண்ட
இயக்கம்ஏ. பி முகன்
தயாரிப்புஏ. எஸ். மேரிசன்
கதைஏ. பி முகன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்பு
  • சிவாசன்
  • வினோத்
  • பிரீத்தி வர்மா
  • ஷிரவ்யா
ஒளிப்பதிவுசிறீ கணேஷ்
படத்தொகுப்புபி. கே. கீர்த்தி
கலையகம்மேரிசன் பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 7, 2006 (2006-04-07)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தீண்ட தீண்ட (Theenda Theenda) என்பது 2006ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம். ஆகும். ஏ. பி முகன் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் சிவாசன், வினோத், பிரீத்தி வர்மா, புதுமுகம் ஷிரவ்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இதில் ராஜேஷ், விஜயன், சேது விநாயகம், குமரிமுத்து, வடிவுக்கரசி, ஜெமினி ராஜேஸ்வரி, பிரியங்கா, கௌதமி வேம்புநாதன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஏ. எஸ். மேரிசன் தயாரித்த இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார். படமானது 2006 ஏப்ரல் 7 அன்று வெளியானது.[1][2][3]

நடிகர்கள்

தயாரிப்பு

மேரிசன் பிலிம்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட தீண்ட தீண்ட படத்தின் வழியாக ஏ. பி முகன் இயக்குநராக அறிமுகமானார். புது முகங்களான சிவாசன் மற்றும் பதினைந்து வயதான ஷர்வ்யா (கவிதா), வினோத், ப்ரீத்தி வர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர்.[4][5]

இசை

திரைப்பட பின்ண்ணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அமைத்தார். 2006 இல் வெளியிடப்பட்ட இந்த படத்தின் இசைப்பதிவில், தமிழ்நாதன், கோபால் தாசன், ஏ. பி. முகன் ஆகியோரால் எழுதப்பட்ட 6 பாடல்கள் உள்ளன.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "வானம் கருத்திருக்க"  புஷ்பவனம் குப்புசாமி 5:29
2. "வச்சிக்கவா வச்சிக்கவா"  சங்கர் கணேஷ் 3:51
3. "இராப் பகலா கண்விழித்து"  சங்கர் கணேஷ் 2:04
4. "புது மலரே"  திப்பு, சிறீதேவி 4:17
5. "என்ன சொல்லி"  கங்கை அமரன் 4:46
6. "தீண்ட தீண்ட"  புஷ்பவனம் குப்புசாமி, மாலதி லட்சுமணன் 4:24
மொத்த நீளம்:
24:51

குறிப்புகள்

  1. "Theenda Theenda (2006)". gomolo.com. பார்க்கப்பட்ட நாள் 25 November 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Theenda Theenda Tamil Movie". woodsdeck.com. பார்க்கப்பட்ட நாள் 25 November 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "List of Tamil Films Released In 2006". woodsdeck.com. Archived from the original on 22 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 November 2019.
  4. "ஷாவ்யா போட்டுள்ள ஆட்டம்" [Will Shavya win in Kollywood ?] (in Tamil). filmibeat.com. 27 April 2006. பார்க்கப்பட்ட நாள் 25 November 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Theenda Theenda". chennaionline.com. Archived from the original on 31 January 2010. பார்க்கப்பட்ட நாள் 25 November 2019. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
"https://tamilar.wiki/index.php?title=தீண்ட_தீண்ட&oldid=34191" இருந்து மீள்விக்கப்பட்டது