திருக்களிற்றுப்படியார் உரை
Jump to navigation
Jump to search
12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருக்களிற்றுப்படியார் என்னும் என்னும் நூலுக்கு, 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநூலே திருக்களிற்றுப்படியார் உரை[1] என்னும் இந் நூல்.. இந்த உரையை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. திருவுந்தியார் உரைநூலுக்கு உள்ள அத்துணைச் சிறப்புகளும் இந்த நூலுக்கும் உண்டு.
இதில் உள்ள செய்திகளில் சில
- ஆசிரியரின் தீட்சை இல்லாமல் ஞான்ம் வராது.[2]
- கருவிகளினாலே [3] சிவனைக் காணமுடியாது எனக் கண்டுகொள்க.[4]
- ஆன்ம போதம் பெற்றவர் எந்தப் பாதத்தில் [5] இருந்தாலும் அதுவே ஞானம் தரும் எனக் கண்டுகொள்க [6]
- ஞானிக்கு வினை [7][8] இல்லை [9]
- பெத்தத்திலும்,[10] முத்தியிலும் ஆன்மாவுக்குச் செயல் இல்லை.[11]
- சிவன் கிருத்தியம் [12] பண்ணான்.[13]
திருக்களிற்றுப்படியார் விளக்கம்
- தில்லை நடராசப் பெருமான் சிற்சபைக்கு ஏறும் படிகள் துதிக்கையை உடைய யானையின் மத்தகம் யானைத்தலை போல இருப்பதால் இந்தப் படி திருக்களிற்றுப்படி. இந்தப் படியில் ஏறும் மன-வழியை மார்க்கத்தை விளக்கும் நூல் திருக்களிற்றுப்படியார்.
- தன்மீது ஏறுவோருக்கு யானை தன் காலை மடக்கிப் படிந்து கொடுப்பது போலத் தன்னை நினைப்பவர்களுக்குச் சிவன் என்னும் களிறு படிந்துகொடுப்பதால் இது களிற்றுப்படி. களிறு இறைவன் ஆனதால் இது திருக்களிறு. 'ஆர்' நூலுக்குத் தரும் சிறப்பு விகுதி.[14]
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ பாடல் 3 உரை
- ↑ ஐம்பொறிக் கருவிகளால் சிவனைக் காண முடியாது
- ↑ பாடல் 14 உரை
- ↑ இறைவனை அடையும் படிநிலைப் பாதங்கள்
- ↑ பாடல் 15 உரை
- ↑ நல்வினை, தீவினை
- ↑ இருள் சேர் இருவினையும் சேரா - திருக்குறள்
- ↑ பாடல் 42 உரை
- ↑ பெத்தம் = பிறவி
- ↑ பாடல் 43 உரை
- ↑ கிறுக்குத்தனம்
- ↑ பாடல் 78 உரை
- ↑ ஒப்புநோக்குக 'நாலடியார்'