திருவுந்தியார் உரை
Jump to navigation
Jump to search
திருவுந்தியார் என்னும் சித்தாந்த நூலுக்கு நல்லதோர் உரை எழுதப்பட்டுள்ளது.[1] உரை எழுதியவரின் பெயர் தெரியவில்லை.[2] உரை தெளிவாகப் பொருள் உணரும் வகையிலும், ஆங்காங்கே சில இலக்கணக் குறிப்புகளுடனும் அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது.[3]
உரை தரும் தெளிவுகளில் சில
- யோகப் பயிற்சியினாலே பிராணவாயுவை உள்ளடக்கித் தன்னுடைய போதத்தை [4] இறைவனிடத்துச் செலுத்துவதே வெற்றி. அல்லாத முயற்சிகள் இழிவு.[5]
- இரவாகிய ஆணவமும், பகலாகிய மாயையும் இல்லாத இன்ப வெளியாகிய இறைவனிடம் அறிவால் உந்தி, பற.[6]
- உந்தி பற என்பதற்கு இவர் கூறும் பொருள் விளக்கங்கள். (1) குற்றங்களினின்றும் உந்தி பற.[7] (2) பற என்பது ஒருமை பன்மை மயக்கம்.[8] (3) தீமைகளெல்லாம் பறந்து போம்படி நிற்பீர்.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ மாணிக்கவாசகரின் திருவுந்தியார் என்னும் சைவத் திருமுறைப் பகுதி வேறு.
- ↑ திருக்களிற்றுப்படியார் என்னும் நூலுக்கு எழுதப்பட்டுள்ள உரையும் இத்துடன் உள்ளது.
- ↑ அறிவை
- ↑ பாடல் 22
- ↑ பாடல் 20
- ↑ குற்றத்திலிருந்து நீங்குவீராக
- ↑ மூச்சைப் பறக்க விடு, அறிவைப் பறக்கவிடு என்றால் இரண்டும் ஒருமை. மூச்சையும் அறிவையும் பறக்கவிடு என்றால் பன்மை