தியாகி (1982 திரைப்படம்)
தியாகி | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | சி. வி. இராசேந்திரன் |
தயாரிப்பு | ஜி. அனுமந்தராவ் |
கதை | ஆரூர்தாஸ் (உரையாடல்) |
இசை | ம. சு. விசுவநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சுஜாதா மேஜர் சுந்தரராஜன் வி. எஸ். ராகவன் |
ஒளிப்பதிவு | பி. கோபாலா கிருஷ்ணன் |
படத்தொகுப்பு | கே. கோபால ராவ் |
கலையகம் | பத்மலயா பிக்சர்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 3, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தியாகி (Thyagi) என்பது 1982 ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடித் திரைப்படமாகும். சி. வி. இராசேந்திரன் இயக்கிய இப்படத்தை ஜி. அனுமந்தராவ் தயாரித்தார். இதில் சிவாஜி கணேசன், சுஜாதா, மேஜர் சுந்தரராஜன், வி. எஸ். ராகவன் ஆகியோர் நடித்தனர்.[1] இப்படம் 1981 இல் வெளியான கன்னடப் படமான அந்த என்ற படத்தின் மறுஆக்கமாகும். இப்படம் 1982 செப்டம்பர் 3 அன்று வெளியானது.[2]
கதை
காவல்துறைத் தலைவரான கணேஷ் கொடிய குற்றங்கள் செய்யும் கும்பலுக்குளுக்கு எதிரான ஆதாரங்களை சேகரித்து அவர்களை நீதிக்கு முன் கொண்டு வரும் நோக்கத்துடன் அவர்களின் கும்பலுக்குள் கனவர்லால் என்ற பெயரில் ஊடுருவுகிறார். கும்பலில் கன்வர்லாலாக இருக்கும் போது, அவரின் கர்ப்பிணி மனைவி சித்திரவதை செய்யபட்டுக் கொல்லப்படுதல், சகோதரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுதல் ஆகியவற்றைக் காண வேண்டிய நிலைக்கு உள்ளாகிறார். தனது தாயின் மரண நிகழ்வையும் புறக்கணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார். தனது பணியை சிரத்தையுடன் மேற்கொள்ளும் நோக்கத்தில் இதையெல்லாம் அவர் தாங்குகிறார். இறுதியில் அவர் கும்பலால் பிடிபட்டு கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கபடுகிறார். அவர் அனைத்தையும் சகித்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு அவர்களைக் கொண்டு வருகிறார். ஆனால் அவர்கள் நீதிக்கு புறம்பான வழிமுறைகளினால் விடுவிக்கப்படுகின்றனர்.
தன் தியாகங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போவனதைப் பார்த்து, தன் கட்டுப்பாட்டை இழந்து சம்பந்தப்பட்ட அனைவரையும் தன் கைகளால் கொன்று சட்டத்தின் முன் குற்றவாளியாக நிற்கிறார்.
நடிகர்கள்
- ஐ. ஜி. கணேஷ்/கன்வர்லாலாக சிவாஜி கணேசன்
- கமலாவாக சுஜாதா
- ஸ்ரீபிரியா என ரஜனி
- கீதா
- மேஜர் சுந்தரராஜன்
- வி. எஸ். ராகவன்
- பைக்காக விஜயகுமார்
- பிரதாப்பாக டைகர் பிரபாகர்
- பண்டரிபாய்
- மேஜர் சுந்தரராஜன்
- ஒய். ஜி. பார்த்தசாரதி
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
பாடல்கள்
இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[3][4][5]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "தொட்டில் கட்டும்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 4:25 | |||||||
2. | "முல்லைப் பூவென" | பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:24 | |||||||
3. | "வந்தளே மாது" | எஸ். ஜானகி | 4:17 | |||||||
4. | "என்னை யார்" | எஸ். ஜானகி | 4:11 | |||||||
5. | "ஆடுங்கடி" | டி. எம். சௌந்தரராஜன் | 5:18 | |||||||
மொத்த நீளம்: |
22:35 |
சர்ச்சை
தியாகி படத்திற்கு முதலில் தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்துவிட்டது. அசல் கன்னடப் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை படத்தின் தயாரிப்புக் குழுவினர் இந்தப் படத்தில் தக்க வைத்துக் கொண்டதாக தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவர் கூறினார்.[6]
வரவேற்பு
ராஜேந்திரன் இயக்கி சிவாஜி கணேசன் நடித்த சங்கிலியைப் போன்ற கதைக்களம் உள்ளதாக கல்கியின் திரைஞானி குறிப்பிட்டார். ஆனால் இயக்குநர் இந்தக் கதையைக் கையாள்வதில் வேறுபாடு காட்டியதையும், இரட்டை வேடங்களில் சிவாஜி கணேசனின் நடிப்பை பாராட்டினார். படத்தில் சிவாஜி கணேசனை சித்திரவதை செய்யும் கொடூரமானவர்களை விட தணிக்கை வாரியம் படத்தை தொந்தரவு செய்துள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது என்று கூறினார்.[7]
மேற்கோள்கள்
- ↑ "221-230" இம் மூலத்தில் இருந்து 14 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180614121431/http://www.nadigarthilagam.com/filmographyp23.htm.
- ↑ "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்" (in ta) இம் மூலத்தில் இருந்து 14 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160814054109/http://www.lakshmansruthi.com/cineprofiles/sivaji-2.asp.
- ↑ "Thiyagi" இம் மூலத்தில் இருந்து 2 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210602215222/https://gaana.com/album/thiyagi-tamil.
- ↑ "Thyagi Tamil Film EP Vinyl Record by M S Viswanathan" இம் மூலத்தில் இருந்து 27 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210927040425/https://mossymart.com/product/thyagi-tamil-film-ep-vinyl-record-by-m-s-viswanathan/.
- ↑ "Thyagi Tamil Film EP Vinyl Record by M S Viswanathan" இம் மூலத்தில் இருந்து 23 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220923073351/https://macsendisk.com/product/thyagi-tamil-film-ep-vinyl-record-by-m-s-viswanathan/.
- ↑
- ↑