ஜித்தன் ரமேஷ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரமேஷ் சௌத்ரி
பிறப்புரமேஷ் சௌத்ரி
23 அக்டோபர் 1982 (1982-10-23) (அகவை 42)
சென்னை, தமிழ்நாடு
மற்ற பெயர்கள்ஜித்தன்
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2005-தற்போது
வாழ்க்கைத்
துணை
சில்பா சௌத்ரி
உறவினர்கள்ஆர். பி. சௌத்ரி (தந்தை)
ஜீவா (தம்பி)

ஜித்தன் ரமேஷ் என்று அழைக்கப்படும் ரமேஷ் சௌத்ரி (23 அக்டோபர் 1982) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு முதல் தமிழ்த் திரைப்படத்துறை மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் பணியாற்றி வருகின்றார். இவர் பிரபல தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரியின் மகனும், நடிகர் ஜீவாவின் அண்ணனும் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான ஜித்தன் என்ற படத்தில் நாயகனாக நடித்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு வெளியான வானம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் பிரபல தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரியின் மகனும், நடிகர் ஜீவாவின் அண்ணனும் ஆவார்.[1] இவரது தந்தை ஆர். பி. சௌத்ரி என்பவர் மார்வாரி மொழி பேசும் ராஜஸ்தானி குடும்பத்தை சேர்ந்தவர். சௌத்ரி சென்னையில் பிறந்த மார்வாரி பாரம்பரியத்தைச் சேர்ந்த இந்து ஆவார். இவரது தாய் 'மஹாபீன்' சென்னையைச் சேர்ந்த ஒரு தமிழ் முஸ்லீம் ஆவார். அவரது தாயார் ஒரு முஸ்லீம் என்றாலும், ரமேஷ் தனது உடன்பிறப்புகளுடன் இந்து மதத்தை பின்பற்றுகிறார்.

இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். பிறகு தனது வணிக நிர்வாக பட்டத்தை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில் பெற்றார். பிப்ரவரி 2006 இல் ஷில்பா என்பவர் திருமணம் முடித்து 2007 ஆம் ஆண்டு இருவருக்கும் தோஷ்னா என்ற மகள் பிறந்தது.[2]

திரைப்படம்

நடிகராக

ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2004 வித்யாரத்தி தெலுங்கு
2005 ஜித்தன் ரமேஷ்
2006 மது மதுகிருஷ்ணன்
ஜெர்ரி ஜெயராம் (ஜெர்ரி)
நீ வேணும்டா செல்லம் கண்ணா
2007 மதுரை வீரன் சிவா
புலி வருது ரமேஷ்
2011 பிள்ளையார் தெரு கடைசி வீடு கணேஷ்
ஒஸ்தி பாலன்
2012 ஒரு நடிகையின் வாக்குமூலம் கௌரவ தோற்றம்
2014 ஜில்லா
டே நைட் கேம் மலையாளம்
2016 ஜித்தன் 2 ரமேஷ்
2019 ஒக்கடே லைப் ராம் தெலுங்கு
உங்களை போடணும் சார் டேவிட்
2020 நிரீக்ஷனா

தொலைக்காட்சி

ஆண்டு நிகழ்ச்சி கதாப்பாத்திரம் அலைவரிசை குறிப்புகள்
2020 - ஒளிபரப்பில் பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளராக விஜய் தொலைக்காட்சி

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

"https://tamilar.wiki/index.php?title=ஜித்தன்_ரமேஷ்&oldid=22192" இருந்து மீள்விக்கப்பட்டது