சுவர்ணா மேத்யு
சுவர்ணா மேத்யு | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1991–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | வர்கிஸ் ஜேக்கப் |
பிள்ளைகள் | ஜேக்கப் |
சுவர்ணா மேத்யூ என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். 1990 களில் மலையாள, கன்னட படங்களில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தார். இவர் சில தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் விஷ்ணுவர்தனுடன் கில்லாடிகளு, ஜெயராமுடன் சுதினம் சுமனுடன் நாயாதுகாரி குடும்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மிதுன் சக்கரவர்த்தி படங்களான டோ நம்ப்ரி, மேரி அதாலத், சுல்தான், சன்யாசி மேரா நாம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
திரையுலகிலிருந்து ஒதுங்கி இருந்த இவர் 2012 இல் மலையாள திரைப்படமான சட்டகாரி படத்தின் வழியாக மீண்டும் நடிக்க வந்தார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
கேரளத்தின் பாலாவில் மேத்யூ மற்றும் எல்சம்மாவின் நான்கு குழந்தைகளில் இளையவராக சுவர்ணா பிறந்தார். சுவர்ணாவுக்கு சாஜி, சிபி என்ற இரண்டு சகோதரர்களும், சுவப்னா என்ற ஒரு சகோதரியும் உண்டு. சுவர்ணா 1992 ஆம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டத்தை வென்றார், அது திரையுலகில் நுழைய இவருக்கு வழி வகுத்தது. மலையாள திரைப்படமான வலயம் படத்திற்குப் பிறகு இவர் புகழ் பெற்றார்.[2] இவர் 2003 இல் வர்கீஸ் ஜேக்கப்பை மணந்தார், இந்த இணையருக்கு ஜேக்கப் என்ற ஒரு மகனும், ஜியா என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர் தன் குடும்பத்துடன் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் குடும்பத்துடன் குடியேறினார்.[3]
பகுதி திரைப்படவியல்
- தாய் மனசு (1994)... அன்னலட்சுமி
- கிழக்கு மலை (1995)
- மாயா பஜார் (1995)... சுவர்ணா
- கோகுலத்தில் சீதை (1996)... காவேரி (விருந்தினர் தோற்றம்)
- பெரியதம்பி (1997)... கண்ணம்மா
- பொன்மானைத் தேடி (1998)... பிரியா
- ரோஜாக்கூட்டம் (2002)... கிரண்
- ஷக்கலக்கபேபி (2002) ... சூரவள்ளி
- எனக்கு 20 உனக்கு 18 (2003)... பிரீத்தியின் மைத்துணி
- ஜூட் (2004) காயத்திரி
- வர்ணஜாலம் (2004)
- சந்திரமுகி (திரைப்படம்) (2005)... சுவர்ணா
- ஒரு நாள் ஒரு கனவு (2005) ... மாயாவின் சகோதரி
- திருப்பதி (2006)
- நீயும் நானும் (2012)
தொலைக்காட்சித் தொடர்கள்
- யாகமா தியாகாமா - மைக்ரோ தொடர் மேக்ரோ சிந்தனைகள் - தமிழ் தொலைக்காட்சி தொடர்
- குணகளம் ரணகளம்-மைக்ரோ தொடர் மேக்ரோ சிந்தனைகல் - தமிழ் தொலைக்காட்சித் தொடர்
- அவிச்சரிதம் (2004-2005) - மலையாள தொலைக்காட்சித் தொடர்
- கடமட்டத்து கதனர் (2004) - மலையாள தொலைக்காட்சித் தொடர்
- அன்வேஷி - மலையாள தொலைக்காட்சித் தொடர்
- சதுரங்கம் (2005-2006) - தமிழ் தொலைக்காட்சித் தொடர்
- ஜனவரி (2007) - மலையாள தொலைக்காட்சித் தொடர்
- தேன்மொழியாள் (2007) - தமிழ் தொலைக்காட்சித் தொடர்
- மாயா மச்சிந்திரா - தமிழ் தொலைக்காட்சி தொடர்
- ஆகாஷதூத்து - மலையாள தொலைக்காட்சித் தொடர் - {காப்பக காட்சிகள்}
குறிப்புகள்
- ↑ sify.com
- ↑ "American Jalakam". Asianet. பார்க்கப்பட்ட நாள் 6 January 2014.
- ↑ "Innalathe Tharam". amritavtv. பார்க்கப்பட்ட நாள் 6 January 2014.