சுபா (நடிகை)
சுபா | |
---|---|
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1967–2003 |
பெற்றோர் | வேதாந்தம் ராகவையா சூர்யபிரபா |
உறவினர்கள் | புஷ்பவல்லி (அத்தை) ரேகா (நடிகை) |
சுபா (Shubha) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாக மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] 1970 இன் பிந்தைய ஆண்டுகாலத்திலும் 1980 இன் துவக்கத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார்.[2][3] இவர் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[4][5]
ஆரம்ப வாழ்க்கை
இவரின் தந்தை வேதாந்தம் ராகவையா இவர் தெலுங்குத் திரைபப்படங்களின் நடிகர் மற்றும் இயக்குநர் (திரைப்படம்) ஆவார்.இவரின் தாய் சூர்யபிரபா ஒரு நடிகை ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசம், கிருஷ்ணா மாவட்டத்தைச் சார்ந்தவர் ஆவார். இவருக்கு ஐந்து சகோதரிகளும் ஒரு சகோதரரும் உள்ளனர். இவரின் அத்தை புஷ்பவல்லியும் ஒரு நடிகை ஆவார். புஷ்பவல்லி , ஜெமினி கணேசனின் மனைவி ஆவார்.[6] இந்தி நடிகை ரேகா (நடிகை) இவரின் உறவினர் ஆவார்.[7]
தமிழ் திரைப்படங்கள்
1972
1972 ஆம் ஆண்டில் வெளிவந்த பட்டிக்காடா பட்டணமா எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தை பாலமுருகன் எழுதி பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன்,ஜெ. ஜெயலலிதா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். மேலும் மனோரமா, வி கே ராமசாமி ஆகியோருடன் சுபா துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். ம. சு. விசுவநாதன் இசையில் இதன் அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதினார்.
1973
1973 இல் பாக்தாத் பேரழகி எனும் திரைப்படத்தில் நடித்தார். ரவீந்தரின் கதை வசனத்தில் டி. ஆர். ராமண்ணா என்பவர் இயக்கினார். இதில் ரவிச்சந்திரன் (நடிகர்), ஜெ. ஜெயலலிதா ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். சாவித்திரி (நடிகை), நாகேஷ், இரா. சு. மனோகர், ஜெயசுதா ஆகியோருடன் சுபா துணைக்கதாப்பாத்திரத்தில் நடித்தார்[8]. ம. சு. விசுவநாதன் இசையமைக்க அனைத்துப் பாடல்களையும் புலமைப்பித்தன் எழுதினார். இந்தத் திரைப்படத்தை கனேஷ் கிரியேசன்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
மேலும் இதே ஆண்டில் கைலாசம் பாலசந்தரின் இயக்கத்தில் சொல்லத்தான் நினைக்கிறேன் திரைப்படத்தில் நடித்தார். இதில் சிவகுமார், எஸ். வி. சுப்பையா, ஜெயசித்ரா, ஸ்ரீவித்யா, கமல்ஹாசன், ஜெயசுதா ஆகியோருடன் சுபா முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் இளவு காத்த கிளியோ எனும் புதினம் (இலக்கியம்) அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இதனை சுந்தர ஸ்வப்னகலு என்ற பெயரில் பாலச்சந்தர் கன்னட மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.[9] ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.
பொன்வண்டு எனும் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். இதனை என் எஸ் மணியன் என்பவர் எழுதி இயக்கினார்[10][11]. வி. குமார் என்பவர் இசையமைத்தார். ஜெய்சங்கர், பாரதி (நடிகை),ஜெயசித்ரா ஆகியோருடன் சுபா நடித்திருந்தார். மனோரமா (நடிகை) இதில் முக்கிய எதிராளிக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[12][13][14]
விஜயா எனும் திரைப்படத்திலும் நடித்தார்.
1974
1974 இல் அன்பைத்தேடி எனும் திரைப்படத்தில் நடித்தார். இதனை முக்தா சீனிவாசன் இயக்கினார். சிவாஜி கணேசன், ஜெ. ஜெயலலிதா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் மேஜர் சுந்தரராஜன், சோ ராமசாமி ஆகியோருடன் சுபா துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தார். ம. சு. விசுவநாதன் இசையமைத்தார்.[15][16][17][18] இது தவிர மாணிக்கத் தொட்டில், ராஜ நாகம், இதயம் பறக்கிறது ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
1975
1975 ஆம் ஆண்டில் ஏழைக்கும் காலம் வரும், உங்க வீட்டு கல்யாணம், மனிதனும் தெய்வமும், எனக்கொரு மகன் பிறப்பான், எடுப்பார் கைப்பிள்ளை ஆகியத் திரைப்படங்களில் நடித்தார்.
1977
நவரத்தினம் (திரைப்படம்). கேஸ்லைட் மங்கம்மா ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
சான்றுகள்
- ↑ "Profile of Shubha". malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.
- ↑ "Kaloor Dennis back with director Joshiy". newindianexpress.com. 7 February 2012. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.
- ↑ "Porfile of Subha". metromatinee.com. Archived from the original on 19 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Profile of Shuba". entertainment.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Best Shuba Movies List". movieslist.in. Archived from the original on 5 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/stree-sahasamu-1951/article4470326.ece
- ↑ "Memories of the Southern Devadas". thehindu.com. Archived from the original on 24 மார்ச் 2003. பார்க்கப்பட்ட நாள் 1 May 2015.
- ↑ "Baghdad Perazhagi". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2017-08-31.
- ↑ "Interview with Ramesh Aravind - the director of Uttama Villain". Only Kollywood (in English). 2014-09-07. பார்க்கப்பட்ட நாள் 2018-03-08.
- ↑ "N. S. Maniyam - Ponvandu (1973)". indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 2016-07-16.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Pon Vandu". moviebuff. பார்க்கப்பட்ட நாள் 2016-07-16.
- ↑ "Ponvandu Movie". gomolo. Archived from the original on 2016-10-06. பார்க்கப்பட்ட நாள் 2016-07-16.
- ↑ http://tamilrasigan.com/povandu-1973-tamil-movies-online-watch-free/[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Ponvandu 1973 Tamil Movie". filmiclub. பார்க்கப்பட்ட நாள் 2016-07-16.
- ↑ "Anbai Thedi". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-21.
- ↑ "Anbai Thedi". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-21.
- ↑ "Anbai Thedi". gomolo.com. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-21.
- ↑ "Anbai Thedi". nadigarthilagam.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-21.