சுனிதா (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வித்யா ஸ்ரீ'
பிறப்புசுனிதா சிவராமகிருஷ்ணன்
23 சூலை 1972 (1972-07-23) (அகவை 52)
ஆந்திரப் பிரதேசம்
மற்ற பெயர்கள்கோடை மழை வித்யா, வித்யா ஸ்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1986-1996
வாழ்க்கைத்
துணை
ராஜ் (தி.1996-தற்போது வரை)
பிள்ளைகள்செசாங் (பி.1998)

வித்யா ஸ்ரீ என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் 1986 முதல் 1996 வரை தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில் நடித்ததற்காக அறியப்பட்டர்.

திரைப்பட வாழ்க்கை

முக்தா எஸ். சுந்தர் இயக்கி 1986 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான கோடை மழை திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் நுழைந்தார். அப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, ரஜினிகாந்த் (முதன்மைப் பாத்திரமல்ல, விருந்தினர் பாத்திரம்), பிரசாத் லட்சுமி ஆகியோர் உடன் நடித்தனர். மேலும் பி. வாசு இயக்கி, விஜயகாந்த் நடித்த பொன்மன செல்வன் (1989) படத்திலும். அதே ஆண்டு விஜயகாந்த்துடன் நடித்த ராஜநடை, வரவு நல்ல உறவு (1990) ஆகிய படங்கள் வெளியாயின. வரவு நல்ல உறவு படத்திற்கு விசு சிறந்த கதை எழுத்தாளருக்கான தமிழ்நாடு அரசு விருதைப் பெற்றார். டி. என் கண்ணா இயக்கிய பெண் சார்ந்த கதையான நெஞ்ச தொட்டு சொல்லு என்ற தமிழ்த் திரைப்படத்திலும் இவர் நடித்தார்.

1987 இல் இவர் சாஜன் இயக்கிய நிறபேதங்கள் என்ற மலையாள திரைப்படங்களில் நடித்தார். அப்படத்தில் இவருடன் பிரதாப் போத்தன், அம்பிகா, கீதா, கனிகேனம் நேரம் ஆகியோர் நடித்தனர். ராஜசேனன் இயக்க ரத்திஷ் மற்றும் சரிதா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்தனர். பின்னர் மேலும் பல மலையாள படங்களில் நடித்தார்.

ராகவேந்திரா ராஜ்குமார் நடிக்க எம். எஸ். ராஜசேகர் இயக்கிய அனுகுலகோபா கண்டா திரைப்படங்கள் மூலம் 1990 இல் கன்னட திரையுலகில் நுழைந்தார். கன்னடத்தில் மேலும் சில படங்கள் நடித்தார்.

இவர் இந்திய முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால், ஜெகதீஷ், முகேஷ், ஜெயராம், சுரேஷ் கோபி, அம்பரீஷ், அனந்த் நாக், சிவ ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் போன்ற பலருடன் இவர் ஜோடியாக நடித்துள்ளார்.

நடனக் கலைஞராக

கோடை மழை வித்யா, வித்யாஸ்ரீ என்றும் அழைக்கப்படும் சுனிதா, நன்கு அறியப்பட்ட இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் பரதநாட்டியம் பயின்றவர். இவர் 3 வயதில் நடனமாடத் தொடங்கி, 11 வயதில் அரங்கேற்றம் செய்தார். "குருகுலம்" என்ற பழைய பாரம்பரியத்தின்படி பயிலும் பாக்கியத்தை இவர் பெற்றிருக்கிறார். பத்மஸ்ரீ வாழுவூர் ராமையா பிள்ளை மற்றும் அவரது மகன் கலைமாமணி வழுவூர் ஆர். சமராஜ் ஆகியோரிடமிருந்து பரதநாட்டியத்தின் வழுவூர் பாணியில் பயிற்சி பெற்றார். இன்றுவரை, இவர் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். அமிதாப் பச்சன், மம்மூட்டி, மோகன்லால், வினீத் போன்றோருடன் உலகம் முழுவதும் பல மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடியுள்ளார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிருத்யாஞ்சலி ஸ்கூல் ஆப் டான்ஸில் கலை இயக்குநராக இருந்து நடனப் பள்ளியை சுனிதா நடத்தி வருகிறார்.[1] கடந்த பத்து ஆண்டுகளில் பாரம்பரிய நடனம் கற்பிப்பதற்கும், நிகழ்த்துவதற்கும் தன்னை அர்ப்பணிப்பதன் மூலம் தென் கரொலைனாவின் கலாச்சார வாழ்க்கையை வளப்படுத்தியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் ஆந்திராவில் வேணுகோபால் சிவராமகிருஷ்ணன் மற்றும் புவனா ஆகியோருக்குப் பிறந்தார். 1996 ஆம் ஆண்டில் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 1998 இல் ஷஷாங்க் என்ற மகன் பிறந்தார். இவர் தற்போது அமெரிக்காவின் தென் கரொலைனாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.[2]

திரைப்படவியல்

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்பு
1986 கோடை மழை வித்யா தமிழ் திரைப்பட நாயகியாக அறிமுகம்
1987 மாவீரன் ஹெலினா தமிழ்
1987 கனிகணம் நேரம் இந்து மலையாளம்
1987 நேரம் நல்லா இருக்கு ருக்கு தமிழ்
1987 நிறபேதங்கள் இந்து மலையாளம்
1988 உழைத்து வாழ வேண்டும் ராணி தமிழ்
1989 மிருகயா பாக்யலட்சுமி மலையாளம் வேட்டைக்காரன் சிலுவை தமிழில்

தெலுங்கில் மிருகம்
1989 பொன்மன செல்வன் ராதா தமிழ் தெலுங்கில் சரணராஜு
1989 திராவிடன் சாரதா தமிழ்
1989 ராஜநடை தேன்மொழி தமிழ்
1990 அப்பு சரோஜினி மலையாளம்
1990 அனுகூலக்கோபா கண்டா ராதா கன்னடம்
1990 கஜகேசரியோகம் கார்த்திகா மலையாளம்
1990 வரவு நல்ல உறவு வளர்மதி தமிழ்
1991 நீலகிரி லட்சுமி மலையாளம் தெலுங்கில் ரௌடி ராஜ்சியம்
1991 ரோல் கால் ராமகிருஷ்ணா சுவப்னா கன்னடம்
1991 மிமிக்ஸ் பாரடே சந்தியா செரியன் மலையாளம்
1991 கொல்லூர் ராதா ராணி கன்னடம்
1991 ஜார்ஜூட்டி சி / ஓ ஜார்ஜூட்டி அலிசி மலையாளம்
1991 இரிக்கு எம்.டி அகதுண்டு அன்சி ஸ்ரீதரன் மலையாளம்
1991 அரலித ஹூவுகலு சுதா கன்னடம்
1991 பூக்காலம் வரவாய் துளசி மலையாளம்
1991 உத்தராகண்டம் மலையாளம்
1991 குஞ்சிகிளியே கூட்டேவிட் மலையாளம்
1991 முக சித்ரம் சுந்தா மலையாளம்
1991 புக்சட்டே கண்டா ஹொட்டே தும்பா உண்டா ரேவதி கன்னடம்
1992 சினேகசாகரம் காவேரி மலையாளம்
1992 முகமுத்ரா தேவி மலையாளம்
1992 மந்திரிகாசெப்பு சியாமா மலையாளம்
1992 ஆர்த்ரம் சயினபா மலையாளம்
1992 சவிதம் நீலிமா மலையாளம்
1992 பொன்னுருகும் பக்ஷி அம்மினிகுட்டி மலையாளம்
1992 நெஞ்சத் தொட்டு சொல்லு பொங்கனா தமிழ்
1992 காசர்கோடு காதர் பாய் சந்தியா செரியன் மலையாளம்
1992 பூச்சக்கரு மணி கெட்டும் ராதிகா மலையாளம்
1993 கற்பகம் வந்தாச்சு ராதா தமிழ் தெலுங்கில் பேஜவாடா ரௌடி
1993 சௌபாகியம் இந்து மலையாளம்
1993 வக்கீல் வாசுதேவ் சிறீதேவி மலையாளம்
1993 ஆக்னியம் ரமணி மலையாளம்
1993 வாத்சல்யம் சுதா மலையாளம்
1993 ஆதிஹாம் என்ன இதீகம் மெர்சி மலையாளம்
1993 சமூகம் ராதிகா மலையாளம்
1994 நந்தினி ஒப்போல் மாயா மலையாளம்
1994 பிரதக்ஷினம் சுதா மலையாளம்
1995 சிரஞ்சீவி ராஜகவுடா வசந்தா கன்னடம்
1996 கலிவீடு ஊர்மிளா மலையாளம்
2011 அகேன் காசர்கோடு காதர் பாய் சந்தியா செரியன் மலையாளம் காப்பக காட்சிகள்

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

  • Sunitha at IMDb
"https://tamilar.wiki/index.php?title=சுனிதா_(நடிகை)&oldid=22829" இருந்து மீள்விக்கப்பட்டது