சிருங்காரம்
சிருங்காரம் | |
---|---|
இயக்கம் | சாரதா ராமநாதன் |
தயாரிப்பு | கோல்டன் ஸ்கொயர் பிலிம்ஸ் |
திரைக்கதை | இந்திரா சௌந்தரராஜன் |
இசை | லால்குடி ஜெயராமன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | மது அம்பாட் |
படத்தொகுப்பு | ஏ. ஸ்ரீகர் பிரசாத் |
கலையகம் | கோல்டன் ஸ்கொயர் பிலிம்ஸ் |
விநியோகம் | ஜி.வி. பிலிம்ஸ் [1] |
வெளியீடு | 5 அக்டோபர் 2007 |
ஓட்டம் | 117 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிருங்காரம் 2007 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் சாரதா ராமநாதன் இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம்[2][3][4][5]. எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் இப்படத்தின் திரைக்கதை, வசனம் அமைப்பதில் இணைந்து பணிபுரிந்துள்ளார்[6]. பத்மினி ரவி இப்படத்தைத் தயாரித்தார்[7][8].அறிமுக நாயகி அதிதி ராவ் ஹைதாரி[9][10][11] இரு வேடங்களிலும் மற்றும் மனோஜ் கே. ஜெயன், ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். 1920 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பதாகக் கதை அமைந்தது[12]. தேவதாசி முறையைக் கதைக்களமாகக் கொண்ட திரைப்படம்[13].
இப்படம் 53ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளையும்[14] மற்றும் தமிழக அரசு திரைப்பட விருதுகளில் இரண்டு விருதுகளையும் பெற்றது[15][16][17]. மேலும் பன்னாட்டுத் திரைப்பட விழாக்கள் பலவற்றில் இப்படம் திரையிடப்பட்டது. இப்படம் 2007 அக்டோபர் 5 ஆம் நாள் திரையரங்குகளில் வெளியானது[18][19][20].
கதைச்சுருக்கம்
பரதநாட்டிய கலைஞரான வர்ஷினிக்கு இந்தியா குடியரசாக அறிவிக்கப்படும் தினத்தன்று நடைபெறும் விழாவில் நடனமாட இந்தியாவின் தலைநகரத்திற்கு வருமாறு அழைப்பு வருகிறது. அவளை குழந்தையிலிருந்து வளர்த்து வரும் கோயில் அர்ச்சகர் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்று கோயிலில் நாட்டியமாடும் காமா என்ற நடனப் பெண்ணிடம் அறிமுகம் செய்கிறார். அதன் பின் கதை கடந்த காலத்திற்குச் (1920 ஆம் ஆண்டு) செல்கிறது. கோயிலில் நடன மங்கையாக (தேவதாசி) இருக்கும் பெண் தன் வயது முதிர்வின் காரணமாக தன் வம்சத்தைச் சேர்ந்த மதுரா என்ற பெண்ணைக் கோயிலில் நடன மங்கையாக இருக்கத் தேர்வு செய்கிறார். தஞ்சாவூர் சமஸ்தானத்தின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் மிராசு சுகுமார், மதுராவின் அழகில் ஈர்க்கப்படுகிறார். கோயிலில் தேவதாசியாக இருப்பவர்கள் மிராசுவின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டியவர்கள் என்பது மரபு. ஆனால் மதுராவிற்கோ நடனத்தில் தன் திறமையை வளர்த்து மிகச்சிறந்த நடன மங்கையாக வேண்டும் என்பதே இலட்சியம்.
கோயிலில் பணி செய்யும் கீழ் சாதியைச் சேர்ந்த பணியாள் சிவாவிற்கு மதுராவின் நடனம் என்றால் மிகப் பிரியம். "வந்தே மாதரம்" என்ற புரட்சிக் குழுவில் இணைந்திருக்கும் சிவா, மதுராவிடம் தவறாக நடக்க முயலும் மிராசுவை எச்சரிக்கிறான். இதனால் பொய்க்குற்றம் சாற்றப்பட்டு அவனை ஊரை விட்டு வெளியேற உத்தரவிடுகிறார்கள். ஊரைவிட்டு வெளியேறும் சிவா தன் குழுவுடன் இணைந்து செயல்படுகிறான். மிராசு, மதுராவைப் பயன்படுத்தி தஞ்சாவூர் ஆட்சியரை மயக்கி தன் காரியங்களை சாதித்துக் கொள்ள நினைக்கிறான். ஆனால் அவன் திட்டத்திற்கு உடன்பட மறுக்கும் மதுரா கோயிலிலிருந்து வெளியேறுகிறாள்.
மதுரா கோயிலை விட்டு வெளியேறுவதால் அவளது சகோதரி காமா தேவதாசியாக்கப்படுகிறாள். மிராசுவின் தீய எண்ணங்களை அறியும் காமா, மதுராவைப் போல் கோயிலைவிட்டு வெளியேற முயற்சிக்கிறாள். மதுரா தற்போது "வந்தே மாதரம்" குழுவில் சிவாவுடன் இணைந்துவிட்டதாக அறிகிறாள் காமா. அச்சமயம் கோயிலிலுள்ள புனிதமான பொருள் ஒன்று தொலைந்து போகிறது. அப்பொருளை திருடிச்சென்றதாக மதுராவின் மீது பழி சுமத்தப்படுகிறது. அவளைக் கைது செய்ய உத்தரவிடுகிறான் மிராசு. ஆனால் சிவா தானே திருடியதாக பழியேற்று சிறைக்குச் செல்கிறான். அக்குற்றத்திற்காக அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கர்ப்பிணியாக இருக்கும் மதுரா பெண் குழந்தையைப் பெற்றுவிட்டு இறந்துபோகிறாள். அந்தக் குழந்தையே வர்ஷினி. வர்ஷினி உருவத்தில் தன் தாய் மதுராவைப் போலவே இருக்கிறாள். அதன்பின் வர்ஷினி என்ன செய்தால் என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
- அதிதி ராவ் ஹைதாரி - மதுரா மற்றும் வர்ஷினி
- மனோஜ் கே. ஜெயன் - சுகுமார் (மிராசு)
- ஹம்சா மொய்லி - காமா
- சசிகுமார் சுப்பிரமணி - காசி
- மஞ்சு பார்கவி - பொன்னம்மாள்
- ஒய். ஜி. மகேந்திரன் - குருக்கள்
- ஐசுவரியா - மிராசுவின் மனைவி
- சந்திரசேகர் - கங்காணி
- பரத் கல்யாண் - மணிசுந்தரம்
- சிந்து - சரோஜா
- ஜூனியர் பாலையா - கோயில்பிள்ளை
- லட்சுமி ரவி - அம்புஜம்
விருதுகள்
53 ஆவது தேசிய திரைப்பட விருதுகள்[21]
- சிறந்த ஒளிப்பதிவு - மது அம்பாட்
- சிறந்த இசையமைப்பாளர் - லால்குடி ஜெயராமன்
- சிறந்த நடன இயக்குனர் - சரோஜ் கான்
தமிழக அரசு திரைப்பட விருதுகள் 2005[21]
- சிறந்த கலை இயக்குனர் - தோட்டா தரணி
- சிறந்த ஆடை வடிவமைப்பு - ருக்மினி கிருஷ்ணன்
திரையிடப்பட்ட திரைப்பட விழாக்கள் பட்டியல்:
- 37 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா[22]
- 8 ஆவது துபாய் சர்வதேச திரைப்பட விழா[23]
- அடிலெய்டு ஓஸ்ஆசியா திரைப்படவிழா 2008[24]
- 4 ஆவது இந்தியத் திரைப்பட விழா - லாஸ் ஏஞ்செல்ஸ்[25][26]
- கேரளா திரைப்படவிழா[27]
- திருச்சூர் பன்னாட்டுத் திரைப்பட விழா[28]
- 2 ஆவது இந்திய சர்வதேச பெண்கள் திரைப்பட விழா[29]
- டான்ஸ் ஆன் கேமரா விழா 2006[30][31]
- 3 ஆவது இந்தோ - ஜெர்மன் திரைப்பட விழா[32]
இசை
படத்தின் இசையமைப்பாளர் பத்ம பூஷன் லால்குடி ஜி. ஜெயராமன். பாடல்களை ஸ்வாதி வி.ஏ.ஆர். ஜெயராமன் எழுதியுள்ளார். இப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார்[33][34]. சிருங்காரம் மட்டுமே இவர் பணிபுரிந்த ஒரே திரைப்படம்[35][36].
- தலைப்பு பாடல்
- மல்லரி - இஞ்சுக்குடி சகோதரர்கள்
- நாட்டுப்புறப்பாடல் - டி. எல். மகராஜன், ஓ.எஸ்.அருண்
- ஏன் இந்த மாயமோ (ஹமிர் கல்யாணி) - பாம்பே ஜெயஸ்ரீ
- முதல் மரியாதை - சுவாதி ஸ்ரீகிருஷ்ணா , ஹம்சி
- மாமர தோப்பில - ஓ. எஸ். அருண்
- நினைவால் என்னை - லால்குடி விஜயலட்சுமி
- மூன்று பருவங்கள் - லால்குடி ஜி.ஜே.ஆர். கிருஷ்ணன், லால்குடி விஜயலட்சுமி, சுவாதி, ரேவதி மீரா மற்றும் இசைக்குழு
- ஏன் இந்த மாயமோ (ஹமிர் கல்யாணி) - எஸ். சௌம்யா
- அகரம் - ஸ்வாதி ஸ்ரீகிருஷ்ணா , ஹம்சி
- முதல் மரியாதை - சுவாதி ஸ்ரீகிருஷ்ணா , ஹம்சி
- நாட்டுப்புறப்பாடல் - டி. எல். மகராஜன், ஓ.எஸ்.அருண்
- ஹரதி - சுவாதி ஸ்ரீகிருஷ்ணா , ஹம்சி, மீரா
- மூன்று பருவங்கள் - லால்குடி ஜி.ஜே.ஆர். கிருஷ்ணன், லால்குடி விஜயலட்சுமி, சுவாதி, ரேவதி மீரா மற்றும் இசைக்குழு
மேற்கோள்கள்
- ↑ "Sringaram, a labour of love". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2011-12-09.
- ↑ "சாரதா ராமநாதன்".
- ↑ "சாரதா ராமநாதன்". Archived from the original on 2018-03-20. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
- ↑ "சிருங்காரம்".
- ↑ "சிருங்காரம் - விமர்சனம்".
- ↑ "இந்திரா சவுந்தர்ராஜன்".
- ↑ "சிருங்காரம்". Archived from the original on 2005-05-07. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
- ↑ "சிருங்காரம்".
- ↑ அதிதி ராவ் அறிமுகம். https://books.google.co.in/books?id=3g46DwAAQBAJ&pg=PA83&lpg=PA83&dq=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE&source=bl&ots=ENeEv4_LVg&sig=ACfU3U2pvEX5wg7Xnp_XgUIz9fxeeZqQnA&hl=ta&sa=X&ved=2ahUKEwjLy-uEh_rgAhUe63MBHUXHAoAQ6AEwA3oECAMQAQ#v=onepage&q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE&f=false.
- ↑ "அதிதி ராவ் அறிமுகம்".
- ↑ "அதிதி ராவ் அறிமுகம்".
- ↑ "சிருங்காரம்".
- ↑ "தேவதாசி முறை பற்றிய திரைப்படம்".
- ↑ "சிருங்காரம் 3 தேசிய விருதுகள்".
- ↑ "சிருங்காரம்". Archived from the original on 2012-03-19. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
- ↑ "இசை".
- ↑ "சிருங்காரம் விருதுகள்".
- ↑ "சிருங்காரம்".
- ↑ "2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள்". Archived from the original on 2019-11-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
- ↑ "2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள்".
- ↑ 21.0 21.1 "சிருங்காரம் விருதுகள்".
- ↑ "படவிழா". Archived from the original on 2007-10-20. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "துபாய் படவிழா".
- ↑ "அடிலெய்டு படவிழா". Archived from the original on 2016-10-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
- ↑ "லாஸ் ஏஞ்செல்ஸ் படவிழா".
- ↑ "லாஸ் ஏஞ்சல்ஸ் படவிழா". Archived from the original on 2007-02-11. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
- ↑ "கேரளா படவிழா". Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "திரிசூர் படவிழா". Archived from the original on 2008-01-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "பெண்கள் படவிழா". Archived from the original on 2012-04-07. பார்க்கப்பட்ட நாள் 2022-01-09.
- ↑ "டான்ஸ் ஆன் கேமரா".
- ↑ "டான்ஸ் ஆன் கேமரா". Archived from the original on 2012-10-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
- ↑ "இந்தோ - ஜெர்மன் படவிழா".
- ↑ "இசையமைப்பாளர் தேசிய விருது". Archived from the original on 2007-12-03. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "லால்குடி ஜெயராமன் - தேசிய விருது".
- ↑ "லால்குடி ஜெயராமன்". Archived from the original on 2007-08-17. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
- ↑ "லால்குடி ஜெயராமன்".
வெளி இணைப்புகள்
- http://www.sringaramthefilm.com/ - இணையதளம்
- சிருங்காரம்