இந்திரா சௌந்தரராஜன்
இந்திரா சௌந்தர்ராஜன் (பி. நவம்பர் 13 1958) ஒரு தமிழக எழுத்தாளர். இவரது இயற்பெயர் பி சௌந்தர்ராஜன். சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதைகள் எழுதிவரும் இவர் தமிழ் வாசகர்களால் நன்கு அறியப்பட்டவர். இவர் மதுரையில் வசித்து வருகிறார்.[1]
இவர் தென்னிந்திய இந்துமத பாரம்பரியம் மற்றும் புராண இதிகாசங்களைக் கலந்து எழுதுவதில் வல்லவர். இவருடைய கதைகள் பொதுவாக அமானுட நிகழ்வு, தெய்வீக தலையீடு, மறுபிறவி, பேய்கள் போன்ற விஷயங்களை உள்ளடக்கியிருக்கும். இவர் கதைகள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளன. .[2]
இவருடைய இரண்டு அல்லது மூன்று புதினங்களாவது ஒவ்வொரு மாதமும் கிரைம் ஸ்டோரி மற்றும் இன்றைய கிரைம் நியூஸ் போன்ற பதிப்பாளர்களால் வெளியிடப்படுகின்றன.
தேர்ந்தெடுத்த படைப்புகள்
கதை
- எங்கே என் கண்ணன்
- கல்லுக்குள் புகுந்த உயிர்
- நீலக்கல் மோதிரம்
- சோமஜாfலம்
- உன்னைக் கைவிடமாட்டேன்
- நந்தி ரகசியம்
- சதியை சந்திப்போம்
- தேவர் கோயில் ரோஜா
- மாய விழிகள்
- மாயமாகப் போகிறாள்
- துள்ளி வருகுது
- நாக பஞ்சமி
- கண் சிமிட்டும் இரத்தினக்கல்
- தங்கக் காடு
- காற்று காற்று உயிர்
- தோண்டத் தோண்டத் தங்கம்
- அஞ்சு வழி மூணு வாசல்
- உஷ்
- மகாதேவ ரகசியம்
- சுற்றி சுற்றி வருவேன்
- காற்றாய் வருவேன்
- கோட்டைப்புரத்து வீடு
- ரகசியமாய் ஒரு ரகசியம்
- சிவஜெயம்
- திட்டி வாசல் மர்மம்
- வைரபொம்மை
- காதல் குத்தவாளி
- கிருஷ்ண தந்திரம்
- பெண்மனம்
- பேனா உளவாளி
- ஜீவா என் ஜீவா
- சொர்ண ரேகை
- விடாது கருப்பு
- இயந்திர பார்வை
- வானத்து மனிதர்கள்
- ருத்ர வீணை பகுதி 1 ,2 ,3 & 4
- விக்ரமா விக்ரமா பகுதி 1 & 2
- கன்னிகள் ஏழுபேர்
- ஆயிரம் அரிவாள் கோட்டை
- தேடாதே தொலைந்து போவாய் பகுதி 1 & 2
- சிவமயம் பகுதி 1 & 2
- விரல் மந்திரா
- நான் ராமசேஷன் வந்திருக்கேன்
- ஒளிவதற்கு இடமில்லை
- அது மட்டும் ரகசியம்
- பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்
- மேலே உயரே உச்சியிலே பகுதி 1 & 2
- நாக படை
- மாயமாய் சிலர்
- மாய வானம்
- ரங்கா நீதி
- அப்பாவின் ஆத்மா
- சீதா ரகசியம்
- காற்றோடு ஒரு யுத்தம்
- நாக வனம் (இன்னும் வெளியிடப்படவில்லை)
- அசுர ஜாதகம்
- முதல் சக்தி
- இரண்டாம் சக்தி
- மூன்றாம் சக்தி
- நான்காம் சக்தி
- ஐந்தாம் சக்தி
- ஆறாம் சக்தி
- ஏழாம் சக்தி
காற்றோடு ஒரு யுத்தம்
காற்றோடு ஒரு யுத்தம் என்பது இந்திரா சௌந்திரராஜன் எழுதிய தொன்மம் சார்ந்த நாவலாகும். இந்த நாவலில் நாட்டார் தெய்வமான கருப்புசாமிக்கு ஒரு வீட்டினை வேண்டுதலுக்காக ஒப்படைத்துவிட்டு, ஒரு ஐயர் குடும்பம் நகரத்தில் குடியேறுகிறது. மகளின் திருமணத் தேவைக்காக மீண்டும் ஊருக்கு வந்து அந்த வீட்டினை விற்க முற்படும் போது, அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. இறுதியில் அந்த வீட்டினை அவ்வூர் மணியக்காரர் கடத்தல் பொருட்களை பதுக்கிவைக்க உபயோகப்படுத்துவதை அறிந்து கொள்கின்றனர். கடத்தல் கும்பலிடம் மாட்டிக்கொண்டவர்களை குதிரையின் மேல் வருகின்ற ஒருவர் கடத்தல் கும்பலை அழித்து, அவர்களைக் காப்பாற்றுகிறார். அது கருப்புசாமிதான் என நம்புகிறார்கள்.
எங்கே என் கண்ணன்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் குணசீலத்தில் வசிக்கின்ற சீனிவாசன் - ராஜன் தம்பதியினரிடம் ஒரு மரப்பாச்சி கிருஷ்ணன் பொம்மை இருக்கிறது. அந்த கிருஷ்ணனை முன்னூறு வருடங்களாக ஒருநாள் தவறாது பூசை செய்துவருகின்றனர். அவர்களது மகன் சம்பத்திற்கு சாரு என்ற பெண்ணுடன் திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார். தங்களுக்குப்பின்பு அந்த கிருஷ்ணரை தங்கள் வாரிசுகள் பூசை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் சம்பத் இதில் அக்கரையில்லாமல் இரு்பபதை கண்டு மனம் வெதும்புகிறார். சம்பத் சாரு தம்பதியினருக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆனாலும் குழந்தை பிற்ககாமல் இருக்கிறது. நாடி சோதிடத்தில் காசிக்கு சென்று நீராடி அங்குள்ள சாதுக்களுக்கு அன்னதானம் செய்தால் குழந்தைபிறக்கும் என்கிறார்கள். சம்பத்தும் சாருவும் அதைக்கண்டுகொள்ளமல் போக, வயதான சீனிவாசனும் ராஜமும் காசிக்கு செல்கின்றனர்.
சீனிவாசனின் நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆடிட்டரிடம் வேலை செய்யும் கணேஷ் என்பவர் காசியில் வேலை விசயமாக தங்கியுள்ளார். அவரிடம் சீனிவாசன் தம்பதிகளை கவனித்துக்கொள்ள கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். கணேஷின் தந்தை மனநலமில்லாமல் பல இடங்களில் சுற்றிக் கொண்டிருப்பவர். அவரை கணேஷ் கண்டுபிடிக்க பல முயற்சிகள் செய்தும் கைகூடாமல் இருக்கிறான். அவனுடையத் தாய் தன்னுடைய கணவனுக்காக ஒரு கோடிமுறை ராமஜெயம் எழுதிக் கொண்டுள்ளார். கணேசின் பெரிய தங்கை சரண்யாவிற்கு திருமணம் செய்து கொடுத்தும், கணவனின் குடிப்பழக்கம் மற்றும் கொடுமையால் தாய்வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டார். இரண்டாவது தங்கை சுஜாதாவிற்கு வலிப்பு நோய் இருக்கிறது. இத்தகைய துயரமான சூழலில் கணேஷ் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு கடவுளின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை.
கிருஷ்ணமூர்த்தி கூறியபடி சீனிவாசம் ராஜம் தம்பதிகளை வரவேற்று அவர்களுக்கு போதிய வசதிகளை செய்து தருகிறான். சீனிவாசன் போகுமிடமெல்லாம் தனது மரப்பாச்சி கிருஷ்ணனை ஓலைக்கூடையில் வைத்து எடுத்துச் சென்று நாள்தவறாமல் பூசை செய்கிறார். கூடையின் அழகில் மயங்கிய கணேஷ் அதேப்போல கூடையொன்றினை வாங்கி அதில் ஆப்பில் பழங்களை அடுக்கி வைக்கிறான். பிராத்தனைகளை முடித்து காசியிலிருந்து டெல்லிக்கு செல்கிறார்கள் சீனிவாசன் தம்பதியினர். போகிற அவசரத்தில் கணேஷின் ஆப்பில் கூடையை எடுத்துப் போய்விடுகின்றனர். அடுத்தநாள் கூடை மாறிவிட்டதை அறிந்த சீனிவாசனுக்கு மாரடைப்பு வருகிறது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். காசிக்கு செய்தி சேகரிக்க வருகின்ற அனுராதா என்ற பெண்மணி கணேஷிடம் அறிமுகமாகி சீனிவாசன் தம்பதிகள் இருந்த இடத்திலேயே தங்குகிறாள். அவளால் மரப்பாச்சி கிருஷ்ணரை அனுக முடியவில்லை. மருத்துவமைனையிலிருந்து சீனிவாசனைக் காப்பாற்ற மரப்பாச்சி கிருஷ்ணுக்கு பூசை செய்வதே ஒரே வழி என மருத்துவரே கணேசிடம் தெரிவிக்கிறார். நாத்திகனாக கணேஷ் தன்னால் இயன்றளவு கிருஷ்ணருக்கு பூசை செய்கிறார்.
கணேசிற்கு உதவியாளராக வருகின்ற கண்ணன் என்பவர், கணேசின் அலுவல் பிரட்சனையை தீர்த்துவிட்டு, கணேசின் தந்தையைக் கண்டு பிடித்து அவர் சித்தபிரம்மையிலிருந்தும் விடுவிக்கிறார். அதன் பின்பு கணேசின் தந்தையை அவரது மனைவி சுஜாதாவிடம் ஒப்படைக்கிறார். அப்போது கணேசின் இளைய தங்கைக்கு ஏற்படும் வலிப்பினை நீக்குகிறார். மூத்த சகோதரி சரண்யாவும் தன்னுடைய கணவன் விபத்தில் அடிப்பட்டு கிடைப்பதாகவும், இவள் பெயரையே கூறிக்கொண்டு இருப்பதாகவும் கூறி கணவனை காண செல்கிறாள். குழந்தை பாக்கியம் இல்லாத சம்பத் சாரு தம்பதியினருக்கு குழந்தை பேரு கிடைக்கிறது. எல்லாவற்றையும் செய்யும் கண்ணன், கிருஷ்ணமூர்த்தி அனுப்பிய கண்ணன் அல்ல, உண்மையான திருமால் அவதாரம் என்பதை இறுதியில் அனைவரும் உணர்கிறார்கள்.
திக் திக் திக்
61 வது இந்திய சுதந்திரத்திற்காக இந்த நாவல் வெளியிடப்பட்டது. இந்த நாவலில் ஞானசேகரன் என்பவனும் அவன் கூட்டாளிகளும் தீவிரவாதிகள். கிராமத்து மக்களிடம் உள்ள முனியப்பசாமி பயத்தினை பயன்படுத்தி பனங்காடு எனுமிடத்தில் மறைந்துள்ளனர், அருகிலிருக்கும் கிராமத்திலிருந்து வரும் நபர்களை கொலை செய்து அவ்வாறு முனியப்ப சாமி செய்ததாக நாடகமாடுகிறார்கள்.
ஞானசேகரன் ஒரு பட்டாளத்தான் போல வேடமிட்டு அக்கிரமத்திலிருக்கும் பஞ்சாயத்து தலைவர் பெண்ணை பெண்கேட்டு வருகிறான். அதல் சம்மதம் தெரிவிக்கின்றனர் அனைவரும். முனியப்பசாமி இவ்வாறு மக்களை கொல்லாது, அது காவல் தெய்வம் என பூசாரி சொல்லிவிட மக்கள் நம்புகிறார்கள். அதனால் ஞானசேகரன் செட்டியாரின் பெண்ணை கெடுப்பதுபோல நடித்து அவள் கையில் போலி துப்பாக்கியை கொடுக்கிறான். அவள் தன் மானத்தினைக் காப்பாற்ற ஞானசேகரனையும் அவன் நண்பர்களையும் கொன்றுவிட போலிதுப்பாக்கியால் சுடுகிறாள். அதை பயன்படுத்தி தாங்கள் இறந்துவிட்டதாகவும், தாங்கள் ஆவியாக பனங்காட்டில் நடமாடுவதாகவும் ஊர் மக்களை நம்ப வைக்கிறார்கள்.
இருந்தாலும் ஞானசேகரனுக்கு ரஞ்சிதத்தின் மீதான மோகத்தால் அவளைக் கடத்தி செல்கின்றனர். நடந்த உண்மைகளை அறிந்த பெண் அங்கிருந்து தப்பிவந்து மக்களிடம் உண்மையை கூறிவிடுகிறார். அனைத்து தேசத்துரோகிகளும் மாட்டிக்கொள்கின்றார்கள்.
தொலைக்காட்சி தொடர்கள்
- என் பெயர் ரங்கநாயகி
- சிவமயம்
- ருத்ர வீணை
- விடாது கருப்பு
- மர்ம தேசம் - ரகசியம், விடாது கருப்பு (கருப்பு எப்போதும் மறக்க மாட்டேன்), சொர்ண ரேகை (கோல்டன் பாம் லைன்ஸ்), இயந்திர பார்வை, வானத்து மனிதர்கள்
- மாய வேட்டை
- சொர்ண ரேகை
- எதுவும் நடக்கும் (வானத்து மனிதர்கள் நாவல்)
- யாமிருக்க பயமேன்
- அத்தி பூக்கள்
- ருத்ரம் (ஜெயா டிவி)
- " சிவ இரகசியம் (ஜீ தமிழ்)"
திரைக்கதைகள்
- சிருங்காரம் (லவ் டான்ஸ்)
- ஆனந்தபுரத்து வீடு (பேய் வீடு)
தமிழ்நாடு அரசு பரிசு
இவர் எழுதிய "என் பெயர் ரங்கநாயகி" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறது.
மேற்கோள்கள்
- ↑ Dutt, Kartik Chandra (1999). Who's who of Indian Writers, 1999: A-M. 1. Sakitya Akademi. பக். 472. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126008735. http://books.google.com/books?id=QA1V7sICaIwC&pg=PA472.
- ↑ Chakravarthy, Pritham (2008). The Blaft Anthology of Tamil Pulp Fiction. Chennai, India: Blaft Publications. பக். 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-906056-0-1.