சாம் ஆண்டன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சாம் ஆண்டன்
Sam Anton
Sam anton.jpg
பிறப்பு30 திசம்பர் 1985 (1985-12-30) (அகவை 38)
சென்னை, இந்தியா
பணிஇயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2015-முதல்
வாழ்க்கைத்
துணை
அஜிதா கோபி

சாம் ஆண்டன் (Sam Anton) இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். 1985 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். முக்கியமாக தமிழ் மொழி திரைப்படங்களில் இவர் பணியாற்றுகிறார். 2015 ஆம் ஆண்டு டார்லிங் என்ற திகில் நகைச்சுவை [[ஜி. வி. பிரகாஷ் குமார்|படத்தில் சாம் அறிமுகமானார், இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசு குமார் ஒரு நடிகராக நடிக்கத் தொடங்கினார். நாயகி நிக்கி கால்ராணிக்கும் இது முதல் தமிழ் படமாகும். டார்லிங் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் மீண்டும் நடிகராக மாறிய இசையமைப்பாளருடன் இணைந்து இரண்டாவது படமான எனக்கு இன்னொரு பெயர் இருக்கு படத்தை சாம் இயக்கினார். சாம் ஆண்டன் பணியாற்றிய அதர்வா மற்றும் அன்சிகா மோத்வானி நடித்த 100 என்ற படமும், யோகி பாபு நடித்த கூர்கா என்ற படமும் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன.[1] [2] [3] [4]

தொழில்

சாம் தனது பள்ளிப்படிப்பை எக்மோரிலுள்ள டான் பாசுகோ பள்ளியில் படித்தார். எசு.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதன் பிறகு ஒரு தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையை ஒரு நிகழ்நேர நிகழ்ச்சியுடன் தொடங்கினார். சுடுடியோ கிரீனைச் சேர்ந்த கே.இ.ஞானவேல் ராசா இவரது வேலையைக் கவனித்ததால் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்சுடன் இணைந்து டார்லிங் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

திரைப்படவியல்

Year Film Role Credited as Notes
2015 டார்லிங் இயக்குனர், எழுத்தாளர்
2016 எனக்கு இன்னொரு பெயர் இருக்கு (திரைப்படம்) இயக்குனர், எழுத்தாளர்
2019 100 இயக்குனர், எழுத்தாளர்
2019 கூர்கா இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர்
ஒரு நடிகராக

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சாம்_ஆண்டன்&oldid=20960" இருந்து மீள்விக்கப்பட்டது