எனக்கு இன்னொரு பெயர் இருக்கு (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எனக்கு இன்னொரு பெயர் இருக்கு
இயக்கம்சாம் அன்ரன்
தயாரிப்புஏ. சுபாஷ்கரன்
கதைசம் அன்ரன்
இசைஜீ. வீ. பிரகாஷ் குமார்
நடிப்புஜி. வி. பிரகாஷ் குமார்
ஆனந்தி
ஒளிப்பதிவுKrishnan Vasant
படத்தொகுப்புருவேன்
கலையகம்லைகா புரடக்சன்
வெளியீடுசூன் 17, 2016 (2016-06-17)
ஓட்டம்129 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு (enakku innoru per irukku) என்பது 2016 இல் வெளிவந்த நகைச்சுவை கலந்த தமிழ் திரைப்படமாகும். சாம் அன்ரன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஜீ. வீ. பிரகாஷ் குமார் மற்றும் ஆனந்தி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை லைகா புரடக்சனில் இருந்து சுபாஷ்கரன் அல்லைராஜா தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தின் தயாரிப்பு 2015 ம் ஆண்டு மார்கழியில் தொடங்கியது.[1]

கதைச்சுருக்கம்.

ஜானி (ஜீ. வீ. பிரகாஷ் குமார்) சந்தோசமான மென்மையான பையன். ஆனால் அவன் காதலிக்கும் பெண்ணான ஹேமாவின் (ஆனந்தி) தந்தையோ ஜானி ஒரு மோசமான ரவுடி என தவறாக எண்ணி எதிர்காலத்தில் தனக்கு பிறகு ராயபுரத்திற்கு நைனாவாகவும் தனக்கு நல்ல மருமகனாகவும் வரேவண்டும் என விரும்பினார். ஆனால் ஜானி அரியவகை நோயினால் அதாவது இரத்தத்தைப் பார்த்தால் அவன் முன்னர் கூறிய வார்த்தைகளை திரும்ப திரும்ப கூறுவான். ஜானி தனக்கு இருந்த குறைகளை கடந்து அடுத்த நைனாவாக எவ்வாறு மாறுகிறான் என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

  • ஜீ. வீ. பிரகாஷ் குமார்- ஜொனி ( இரத்தத்தை கண்டால் திரும்ப திரும்ப பேசிய வார்த்தைகளை கூறும் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டவன்)
  • ஆனந்தி - ஹேமா ஜொனி ( தாஸின் மகள்)
  • சரவணன் - தாஸ் (நைனா), ராயபுரத்தின் தலைவன்
  • கருணாஸ் - பிங்கர் பாபு, நைனாவின் அடியாள்
  • சார்லி - சுப்பையா ( நைனாவின் வலது கை)
  • வீடிவீ கணேஷ் - பென்ஞ்சமின் (தாஸின் நண்பன்)
  • ராஜேந்திரன் - மகாபலி மகா
  • நிறோசா - தனம்
  • யோகி பாபு - ஒண்டிப்புலி
  • சுவாமிநாதன் - ஆட்டோ ஓட்டுனர்
  • லொள்ளு சபா மனோகர் - ஆசிர்வாதம்
  • லோரன்ஸ் ராமு - துரை (நைனா)
  • சண்முகம் முத்துசாமி
  • விஜய் வரதராஜ் - க்ளோரி
  • மன்சூர் அலி கான் (சிறப்பு தோற்றம்)
  • பொன்னம்பலம் (சிறப்பு தோற்றம்)

தயாரிப்பு

"டார்லிங்" (2015) திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சாம்மிற்கு ஜீ. வீ. பிரகாஷ் குமாருடன் இது இரண்டாவது படமாகும். இத்திரைப்படத்தை "ஸ்ரூடியோ கிறின்" [2][3] ஆனது " கைப்புள்ள" எனும் பெயரில் எடுக்க திட்டமிட்டிருந்தது. எனினும் அது கைகூடாமல் போக "லைகா புரடக்சன்" அத் திரைப்படத்தை தயாரிக்க எண்ணியது. கத்தி(2014) திரைப்படத்திற்கு பிறகு இத்திரைப்படம் லைகா புரடக்சனிற்கு இரண்டாவது திரைப்படமாகும்.[4][5]

இசை.

இத்திரைப்படத்திற்கு ஜீ. வீ. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்