சாந்தி கோவிந்தசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜி. சாந்தி
தனிநபர் தகவல்
முழு பெயர்Shanti Govindasamy
தேசியம்மலேசியர்
பிறப்பு19 செப்டம்பர் 1967 (1967-09-19) (அகவை 57)
கோலாகங்சார்; பேராக்; மலேசியா
ஆண்டுகள் செயலில்1991–1997
விளையாட்டு
நாடு மலேசியா
விளையாட்டுதடகளப் பந்தயம்
பயிற்றுவித்ததுஅருண் ரசீட்
ஓய்வுற்றது1998
சாதனைகளும் விருதுகளும்
மண்டல இறுதிதென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள்
மிகவுயர் உலக தரவரிசை100 மீட்டர் தங்கம்
200 மீட்டர் தங்கம்

ஜி. சாந்தி அல்லது சாந்தி கோவிந்தசாமி (பிறப்பு: 19 செப்டம்பர் 1967); (மலாய்: Shanti Govindasamy; ஆங்கிலம்: Shanti Govindasamy; G. Shanti;) என்பவர் மலேசியாவின் ஓட்டப் பந்தய வீராங்கனை.

1997-ஆம் ஆண்டு, இந்தோனேசியா, ஜகார்த்தா தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் போட்டிகளில் (Southeast Asian Games) 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் தங்கம் வென்றவர். அதன் பின்னர் தென்கிழக்கு ஆசியாவின் அதிவேகப் பெண்மணி (Fastest Woman in Southeast Asia) என்று பெயர் பெற்றவர்.[1]

ஓட்டப் பந்தயத் துறையில் மலேசியாவின் பறக்கும் பாவை என புகழப்படும் ஜி. சாந்தி, 1998-ஆம் ஆண்டில், மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதைப் பெற்றார் (Malaysian Sportswoman of The Year award 1998).[2]

பொது

ஓட்டப் பந்தயத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், தற்சமயம் ஒரு வங்கியில் ஓர் அதிகாரியாய்ப் பணி புரிந்து வருகிறார்.

1993-ஆம் ஆண்டு கோலாலம்பூரில், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 11.50 வினாடிகளில் ஓடி சாதனை ஏற்படுத்தினார். அந்தச் சாதனை 2017-ஆம் ஆண்டில், 24 ஆண்டுகளுக்குப் பின்னர் முறியடிக்கப் பட்டது.[3]

பறக்கும் பாவை ஜி. சாந்தி

ஜி. சாந்தியின் அந்த 100 மீட்டர் சாதனையைச் சைடாதுல் (Zaidatul) என்பவர் முறியடித்தார். அதைக் கேள்விப்பட்ட ஜி. சாந்தி ’நாட்டுக்கு ஒரு சிறந்த பெண் ஓட்டக்காரர் கிடைத்து விட்டார்’ என்று கூறி மகிழ்ச்சி அடைந்தார்.

தேசிய அளவிலும் அனைத்துலக நிலையிலும் ஓட்டப் பந்தயத் துறையில் மலேசியாவின் பெயரையும் மலேசிய இந்தியர்களின் பெயரையும் புகழ்பெறச் செய்த பறக்கும் பாவை ஜி. சாந்தி, 1998-ஆம் ஆண்டு, விளையாட்டுத் துறையில் இருந்து ஓய்வு பெற்றார்.[4]

பிலிப்பைன்ஸ் லிடியா டி வேகா

1991-ஆம் ஆண்டு மணிலா தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் போட்டியில், அப்போதைய ஆசியாவின் அதிவேக வீராங்கனையான பிலிப்பைன்ஸ் நாட்டின் லிடியா டி வேகா (Lydia de Vega) என்பவரிடம் 100 மீட்டர் ஓட்டத்தில் தோற்றாலும்; 200 மீட்டர் ஓட்டத்தில் மலேசியாவுக்குத் தங்கம் வென்றுக் கொடுத்தார்.[5]

அந்தப் போட்டியில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஜி. சாந்தி விவரிக்கிறார்.

100 மீட்டர் ஓட்டத்தில் லிடியாவிடம் தோற்றதும் என்னுடைய பயிற்றுநர்கள், 200 மீட்டர் ஓட்டத்திற்கு எனக்கு ஊக்குவிப்பு கொடுத்தார்கள். பயப்படமால் ஓடு... அப்படின்னு எனக்கு உற்சாகம் கொடுத்தார்கள். எனக்கு ஏழாவது ஓடு பாதை கிடைத்தது. அந்த ஓட்டத்தை ஓடி முடித்து தங்கப் பதக்கம் வென்றேன் என்றார்.[6]

மலேசியாவுக்கு தங்கப் பதக்கம்

மேலும் சொல்கிறார்: 200 மீட்டர் ஓட்டத்தில் இன்னும் ஒரு மீட்டர் தூரம் இருந்த போது, நான் கீழே விழுந்து விட்டேன். கையில அடிப்பட்டு விட்டது. எனக்கு வலி எல்லாம் ஒன்றும் தெரியவில்லை. சந்தோஷம் மட்டும் தான் இருந்தது. மலேசியாவுக்கு தங்கப் பதக்கம் எடுத்துக் கொடுத்த சந்தோஷம். 100 மீட்டர் ஓட்டத்தில் நான் தங்கம் எடுத்ததை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை என்றார்.[6]

தனிப்பட்ட தகவல்கள்

1995-ஆம் ஆண்டு ஓட்டப் பந்தயத்தில் இருந்து ஓய்வுப் பெற்றார். அதன் பின்னர் திருமணம். கணவரின் பெயர் கண்ணன் ராஜு. இரு பெண்பிள்ளைகள். மூத்தவர் வினோசனா. இளையவர் தெய்வசனா.

மூத்த மகள் வினோசனா, தற்சமயம் கெடா, அலோர் ஸ்டார், சுல்தானா பாகியா பொது மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிகிறார். இளைய மகள் தெய்வசனா, மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பல் மருத்துவராகப் பணி புரிகிறார்.

மீண்டும் ஓடு களத்தில் சாந்தி

ஒரு குழந்தைக்குத் தாயான பிறகு 1996-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிரடியாக மீண்டும் ஓடு களத்திற்குத் திரும்பினார்.

1997-ஆம் ஆண்டு, ஜகார்த்தா தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் போட்டிகளில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் தங்கம் வென்றார். இதன் வழி தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் போட்டியில் 14 ஆண்டுகளுக்குப் பின், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் மலேசியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது.[6]

ஜி. சாந்தியின் சாதனைகள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்

  1. Velusamy, Thermesh (23 April 2020). "G.Shanti was born on 19 September 1967 in Kuala Kangsar Perak and competed for Malaysia primarily in the 100m and 200m events. She was once dubbed the fastest woman in Southeast Asia after winning gold in the 100m and 200m events in the 1997 Jakarta Sea Games.". https://worldofbuzz.com/5-inspiring-former-malaysian-athletes-we-should-all-be-talking-about/. பார்த்த நாள்: 13 March 2022. 
  2. "G Shanti selaku jaguh olahraga dan ratu pecut Malaysia terutama dalam acara 100 meter (m) dan 200m masih tiada tandingan hingga hari ini.". https://www.bharian.com.my/sukan/olahraga/2017/08/306959/g-shanti-tunggu-pengganti. பார்த்த நாள்: 13 March 2022. 
  3. "பறக்கும் பாவை ஜி.சாந்தியின் சாதனை முறியடிப்பு". https://nilaa4u.com/?p=4108. பார்த்த நாள்: 13 March 2022. 
  4. Heroes, Malaysian Indian Sports (15 September 2016). "Malaysian Indian Sports Heroes - After a series of disasters and false starts, Shanti, at the age of 30, made stunning return at the 1997 Jakarta SEA Games by winning the 100m Gold, ending a 16-year dry spell for Malaysian women. She also won the Gold in the 200m event. Her victories in Jakarta made her the fastest woman in South-East Asia and it was a fitting tribute that she was honoured as Sportswoman of the Year in 1998.Shanti Govindasamy (G. Shanthi) - Athletics". http://my-indiansportsheroes.blogspot.com/2016/09/shanti-govindasamy-g-shanthi-athletics.html. பார்த்த நாள்: 13 March 2022. 
  5. "Top 5 Yesteryear Malaysian Indian Athletes That You Might Not Have Heard Of!". 7 September 2020. https://varnam.my/lifestyle/2020/29261/top-5-yesteryear-malaysian-indian-athletes-that-you-might-not-have-heard-of/. பார்த்த நாள்: 13 March 2022. 
  6. 6.0 6.1 6.2 "பறக்கும் பாவையைப் பிடிக்க ஆளில்லை !". https://raaga.my/news/news-update/article.aspx?node=80480. பார்த்த நாள்: 13 March 2022. 
  7. Asian Games Statistics – Women’s 100m பரணிடப்பட்டது 26 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
  8. Asian Games Statistics – Women’s 200m பரணிடப்பட்டது 26 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
"https://tamilar.wiki/index.php?title=சாந்தி_கோவிந்தசாமி&oldid=24022" இருந்து மீள்விக்கப்பட்டது