முருகேசன் மகேந்திரன்
தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | மலேசியர் | |||||||||||||
பிறப்பு | 9 மார்ச்சு 1947 | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
விளையாட்டு | வளைதடிப் பந்தாட்டம் (ஹாக்கி) | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
முருகேசன் மகேந்திரன் (பிறப்பு: 9 மார்ச் 1947); (மலாய்: Murugesan Mahendran; ஆங்கிலம்: Murugesan Mahendran) என்பவர் மலேசியாவில் புகழ்பெற்ற வளைதடிப் பந்தாட்டக்காரர்.
1972-ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனி; மியூனிக் நகரில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்; 1976-ஆம் ஆண்டு கனடா; மொண்ட்ரியால் நகரில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்; ஆகிய இரு ஒலிம்பிக் விளையாட்டுகளிலும் மலேசியாவைப் பிரதிநிதித்தவர்.[1]
பொது
1974-ஆம் ஆண்டு ஈரான்; தெஹரான் நகரில் நடைபெற்ற 1974 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வளைதடிப் பந்தாட்டப் போட்டியில் மலேசியாவுக்கு வெண்கலப் பதகத்தைப் பெற்றுத் தந்த அணியில் இவரும் பங்கேற்று இருந்தார்.
தேசிய அளவிலும் அனைத்துலக நிலையிலும் வளைதடிப் பந்தாட்ட துறையில் மலேசியாவின் பெயரையும் மலேசிய இந்தியர்களின் பெயரையும் புகழ்பெறச் செய்தவர் முருகேசன் மகேந்திரன்.
மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது
மலேசியாவில் சிறந்த வளைதடிப் பந்தாட்ட வீரராகத் திகழ்ந்த இவருக்கு, 1987-ஆம் ஆண்டின் மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது வழங்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
- ↑ "Olympedia – Murugesan Mahendran; 1972 Summer Olympics; 1976 Summer Olympics". www.olympedia.org. பார்க்கப்பட்ட நாள் 18 March 2022.
- ↑ "Anugerah Sukan Negara for Sportsman of the Year". FamousFix.com. பார்க்கப்பட்ட நாள் 18 March 2022.