மணி ஜெகதீசன்
மணி ஜெகதீசன் Mani Jegathesan 玛尼济嘎山 | |
---|---|
பிறப்பு | ஜெகதீசன் மாணிக்கவாசகம் 2 நவம்பர் 1943 கோலாகங்சார், பேராக், மலேசியா |
இருப்பிடம் | கோலாலம்பூர் |
தேசியம் | மலேசிய இந்தியர் |
மற்ற பெயர்கள் | பறக்கும் மருத்துவர் |
கல்வி | மருத்துவம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் |
பணி | பல்கலைக்கழக இணைவேந்தர் |
பணியகம் | மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | ஆசியாவின் வேகமான ஓட்டக்காரர் |
உயரம் | 174 cm |
எடை | 61 kg |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | புவான் ஸ்ரீ லீ ஹோங் |
பிள்ளைகள் | ஆஷ்லி (34) சிரின் (31) மணிகா (26) |
உறவினர்கள் | மாணிக்கவாசகம் தந்தையார் |
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
ஆண்கள்தட களம் | ||
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் | ||
1961 ரங்கூன் | 400 மீட்டர்கள் | |
1961 ரங்கூன் | 200 மீட்டர்கள் | |
1961 ரங்கூன் | 4x100 மீட்டர்கள் | |
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | ||
1962 ஜகார்த்தா | 100 மீட்டர்கள் | |
1962 ஜகார்த்தா | 200 மீட்டர்கள் | |
1962 ஜகார்த்தா | 4x100 மீட்டர்கள் | |
1966 பாங்காக் | 100 மீட்டர்கள் | |
1966 பாங்காக் | 200 மீட்டர்கள் | |
1966 பாங்காக் | 4x100 மீட்டர்கள் |
டான் ஸ்ரீ, டத்தோ, டாக்டர் மணி ஜெகதீசன் (Mani Jegathesan, பிறப்பு: 1943) மலேசியாவின் புகழ்பெற்ற ஓட்டக்காரர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 1960, 1964, 1968ஆம் ஆண்டுகளில் மலேசியாவைப் பிரதிநித்தவர்.[1] 1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கங்களை வென்று சாதனை படைத்தவர்.
1968ஆம் ஆண்டு மெக்சிகோ ஒலிம்பிக் போட்டியின், 200 மீட்டர் அரை இறுதி தகுதிச் சுற்று ஓட்டத்தில், அவர் செய்த 20.92 விநாடிகள் சாதனையை இதுவரை மலேசியர் எவராலும் முறியடிக்க முடியவில்லை.[2] பறக்கும் மருத்துவர் என்று அன்பாக அழைக்கப்படுகின்றார்.[3] மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக பதவி வகிக்கும் முதல் மலேசிய இந்தியர், முதல் மலேசியத் தமிழர்.[4][5]
வரலாறு
மணி ஜெகதீசன், பேராக் மாநிலத்தின் அரச நகரான கோலாகங்சார் நகரில் 1943 நவம்பர் மாதம் 2ஆம் தேதி பிறந்தார். கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள 100 குவார்ட்டர்ஸ் பகுதியில் வளர்ந்தார். ஜாலான் பத்து தொடக்கப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை பயின்றார்.
1955ஆம் ஆண்டு தன்னுடைய உயர்நிலைப் படிப்பை ‘வி.ஐ’ என்று அழைக்கப்படும் விக்டோரியா உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டு பயின்றார். பின்னர் 1956ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் இருக்கும் ஆங்கிலோ சீனப் பள்ளிக்கு மாற்றலாகிச் சென்றார். அங்கு 1961ஆம் ஆண்டு வரை அவருடைய கல்வி வாழ்க்கை தொடர்ந்தது.
லண்டன் பல்கலைக்கழகம்
1967ஆம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் நோயியல் துறையில் பட்டம் பெற்று மருத்துவரானார். அது மட்டும் அல்லாமல், அந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவராகவும் தேர்வு செய்யப்பட்டார். அதற்காகத் தங்கப் பதக்கமும் பெற்றார்.
1970ஆம் ஆண்டு பாங்காக்கில் உள்ள மகிடோல் பல்கலைக்கழகத்திலும், 1970ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்திலும் மருத்துவத் துறையில் உயர்க்கல்வியை மேற்கொண்டார்.[6] ஆங்கிலோ சீனப் பள்ளியில் பயிலும் போது, தன்னுடைய 16வது வயதிலேயே 1960 ரோம் ஒலிம்பிக் போட்டிகளில் மலாயாவைப் பிரதிநிதித்தார்.[7] எந்தப் பதக்கத்தையும் பெறவில்லை.
ஓட்டப்பந்தயத் துறை
1960ஆம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு, அடுத்து அடுத்து வந்த இரு ஒலிம்பிக் போட்டிகளிலும், இரு ஆசிய விளையாட்டுகளிலும் மலேசியாவைப் பிரதிநிதித்துச் சிறப்பு செய்தார். அவர் மலேசிய நாட்டிற்குப் பதக்கங்களை மட்டும் கொண்டு வரவில்லை.
மாறாக இந்த நாட்டில், ஓட்டப் பந்தய சாதனைகளையும் படைத்துள்ளார். அவர் செய்த சில சாதனைகள் இன்றும் முறியடிக்கப்படாமல் இருக்கின்றன. அவரை ஆசியாவின் வேகமான ஓட்டக்காரர் என்றும் பறக்கும் மருத்துவர் என்றும் மலேசிய மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.[8]
ஆசியாவின் வேகமான மனிதர்
மணி ஜெகதீசன் முதல் முறையாக 1959 பாங்காக் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார். 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 1961 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில், மலேசியாவிற்கு மூன்று தங்கங்களையும் ஒரு வெள்ளியையும் கொண்டு வந்தார். அடுத்து அவருடைய பார்வை ஆசிய விளையாட்டுகளின் பக்கம் திரும்பியது.
1962இல் ஜகார்த்தாவில் நடைபெற்ற போட்டிகளில் 200மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்று புதிய சாதனையையும் செய்தார். 1966இல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கங்களைக் கொண்டு வந்தார். ஓர் அனைத்துலகப் போட்டியில், ஒரே சமயத்தில் மூன்று தங்களை வென்று சாதனை படைத்தவர்கள் மலேசியாவில் எவரும் இல்லை. அதன் பின்னர் ‘ஆசியாவின் வேகமான மனிதர்’ எனும் அடைமொழியும் அவருக்கு கிடைத்தது.[9]
அதன் பின்னர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200மீட்டர் ஓட்டத்தில் மலேசியர் எவருக்கும், இதுவரையில் தங்கப் பதக்கம் கிடைக்கவில்லை. அதுவும் ஒரு சாதனையாக இருந்து வருகிறது. அதே ஆண்டு ‘ஆசிய விளையாட்டாளர்’ (Asian Athlete of 1966) எனும் விருதும் அவருக்கு கிடைத்தது. ஜெகதீசன் மூன்று ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொண்டு இருக்கிறார்.
24வது வயதில் ஓய்வு
தன்னுடைய 16வது வயதில் உயர்நிலை நான்காம் படிவம் படித்துக் கொண்டு இருக்கும் போது 1960 ரோம் ஒலிம்பிக்கில் பங்கு பெற்றார். 1964இல் பலகலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருக்கும் போது 1964 தோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கு பெற்றார். இந்த ஒலிம்பிக் போட்டியில் 200மீட்டர் நேரோட்டத்திற்கு, அரையிறுதிப் போட்டியாளராகத் தேர்வு பெற்றார்.
1968 மெக்சிகோ ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற ஒரு மருத்துவ அதிகாரியாகப் பங்கு பெற்றார். அதே ஆண்டு, தம்முடைய 24வது வயதில் விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இப்போது, டாக்டர் மணி ஜெகதீசன், அனைத்துலக ரீதியில் ஒரு பிரபலமான மருத்துவராகவும், மருத்துவ ஆய்வாளராகவும் ஓர் அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்.[10]
சாதனைகள்
விளையாட்டாளர்
- 1960 – ரோம் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
- 1961 – ரங்கூன் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள், 200மீ, 400மீ, 4x400மீ தங்கப் பதக்கம் & 100மீ வெள்ளி பதக்கம்
- 1962 – ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜகார்த்தா, 200மீ தங்கப் பதக்கம் - மலேசியாவிற்கு கிடைத்த முதல் தங்கம்
- 1964 – தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக்கள், 200மீ அரையிறுதிச் சுற்று
- 1965 – கோலாலம்பூர் தென்கிழக்காசிய விளையாட்டுகள் 100மீ, 200மீ, 4x100மீ, 4x400மீ தங்கப் பதக்கம்
- 1966 – ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பாங்காக், 100மீ, 200மீ, 4x100மீ தங்கப் பதக்கம், (Asian Athlete of 1966)
- 1968 – மெக்சிகோ ஒலிம்பிக் விளையாட்டுக்கள், 200மீ அரையிறுதிச் சுற்று
- 2002 – ஆசிய பிரபலங்களின் நினைவு மாளிகையில் இணைக்கப்பட்டார் (Asian Hall of Fame)[11]
விளையாட்டு அதிகாரி
- 1972 – மலேசிய ஒலிம்பிக் குழுவின் மருத்துவ அதிகாரி
- 2003 – பொதுநலவாய விளையாட்டுகளின் அறவாரிய மருத்துவ ஆலோசகர், மெல்பர்ன் பொதுநலவாய விளையாட்டுகளின் மருத்துவ ஆலோசகர், மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் துணைத்தலைவர்
- 2004 – ஏதன்ஸ் ஒலிம்பிக் போட்டியில் மலேசியக் குழுவின் தலைவர், ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய மலேசியர்.
- 2007 - மலேசிய ஒலிம்பிக் மருத்துவ மன்றத்தின் தலைவர்
சேவைகள்
- தலைவர், நோயியல் துறை, கோலாலம்பூர் பொது மருத்துவமனை (1985–88)[12]
- தலைவர், மலேசிய மருத்துவ ஆய்வுக்கழகம் (1988–93)
- இணைவேந்தர், மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்
- துணை இயக்குநர், தொழில்நுட்ப ஆய்வியல் துறை, மலேசிய சுகாதார அமைச்சு (1993–98)
- மருத்துவ ஆலோசகர், ஐக்கிய நாட்டுச் சபை மேம்பாடுத் திட்ட வாரியம், ஜெனிவா
- ஆயுள்கால உறுப்பினர், மலேசிய அறிவியல் கலாமன்றம் (மருத்துவம்)
- செயல்குழு உறுப்பினர், மலேசிய ஐசனோவர் சக ஆய்வாளர்க் கழகம்
- மனித நல ஆய்வுக்கழகம், ஐக்கிய நாட்டுச் சபை மேம்பாடுத் திட்ட வாரியம் சுவிட்சர்லாந்து
- விரிவுரையாளர், மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்
- ஆலோசகர், உலக வங்கி
- ஆலோசகர், உலக சுகாதார நிறுவனம்
- அறிவுரைஞர், நுண்ணுயிரியல், சன்வே மருத்துவமனை
- அறிவுரைஞர், நுண்ணுயிரியல், மாசா பல்கலைக்கழகக் கல்லூரி (MAHSA University College)[13]
மேற்கோள்கள்
- ↑ Datuk Dr Manickavasagam Jegathesan is the first Malaysian to make it to the semi-finals of the Olympic Games. His achievement made him to the semi finals for the Olympics 1964 (Tokyo) and 1968 (Mexico) in the 200 m event.
- ↑ His 200metres at 20.9secs and his 400metres at 46.3secs still stands after over 4 decades.
- ↑ Through his achievements he was called ‘The Flying Doctor’. He was the first to be entitled ‘Olahragawan Negara’ in 1966.
- ↑ Tan Sri Dr M. Jegathesan is new USM pro chancellor (first time a Malaysian of Indian descent been appointed to this position.)
- ↑ Ex-sprint ace M. Jegathesan to be made USM pro-chancellor.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Sukan Olimpik di Rome pada 1960 dalam acara pecut 100 m.
- ↑ While at ACS, in 1960 at the tender age of 16, Jega represented Malaya at the Rome Olympic.
- ↑ "The year was 1968 and Jega as he is popularly referred to, qualified for the semi-finals in the 200 m event at the Mexico Olympic Games, creating a new Malaysian record of 20.92 seconds which still stands unchallenged to this date." இம் மூலத்தில் இருந்து 2012-08-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120815080444/http://www.olympic.org.my/museum/hof/ind/ddmj.htm.
- ↑ "In his day, he was regarded as the fastest man in Asia. In 1966, he earned the accolade of being the fastest man in Asia by winning three gold medals at the Bangkok Asian Games in the 100 m, 200 m and 400 m events." இம் மூலத்தில் இருந்து 2010-08-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100813233554/http://perisik-rakyat.com/2009/12/flying-doctor-aka-fastest-man-in-asia_15.html.
- ↑ Dr Jegathesan not only became an accomplished athlete, well-known doctor and researcher but did the country proud yet again through his appointment as Chairman of the Commonwealth Games Federation (CGF) Medical Commission and honorary Medical Advisor for the 2006 Melbourne Commonwealth Games.
- ↑ "In the year 2002, 13 new inductees were included into the Hall of Fame, five are sports administrators, while nine are outstanding national athlete." இம் மூலத்தில் இருந்து 2012-08-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120808032451/http://www.olympic.org.my/museum/hof/index.htm.
- ↑ "Department of Pathology, Kuala Lumpur Hospital (HKL) with more than 350 laboratory staff from various categories including 20 pathologists." இம் மூலத்தில் இருந்து 2013-05-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130526053055/http://www.hkl.gov.my/content/deptintro.php?Did=23.
- ↑ "The Research Management Centre (RMC) MAHSA University College, Malaysia is headed by Professor Tan Sri Dr M Jegathesan, Deputy Vice-Chancellor for Research and Medical Education and is located at the Department of Biomedical Sciences of the university." இம் மூலத்தில் இருந்து 2013-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130328000756/http://www.mahsa.edu.my/faculties/research/.