சர்தார் (2022 திரைப்படம்)
சர்தார் | |
---|---|
திரைப்பட வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | பி. எஸ். மித்திரன் |
தயாரிப்பு | எஸ். இலட்சுமன் குமார் |
கதை | பி. எஸ். மித்ரன் பொன் பார்த்திபன் ரோஜு பின்பு ரகு ஜீவி |
கதைசொல்லி | பி. எஸ். மித்திரன் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் |
படத்தொகுப்பு | ரூபன் |
கலையகம் | பிரின்ஸ் பிக்சர்ஸ் |
விநியோகம் | ரெட் ஜெயன்ட் மூவீசு |
வெளியீடு | 21 அக்டோபர் 2022(India) |
ஓட்டம் | 165 minutes[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹100 கோடி[2] |
சர்தார் (Sardar) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி உளவு அதிரடி-பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இதை பி. எஸ். மித்ரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் எஸ். இலட்சுமண் குமார் தயாரித்துள்ளார்.[3] இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் ராசி கன்னா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, ரித்விக், யூகி சேது, அவினாஷ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[4][5] ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் வழியாக இந்தி திரைப்பட நடிகர் சங்கி பாண்டே தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானது, லைலா 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரிய திரைக்கு வந்தது இந்தப் படத்தின் ஒரு சிறப்பாகும்.[6][7]
இப்படம் குறித்து 2020 நவம்பரில் அறிவிக்கப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு 2021 ஏப்ரலில் தொடங்கியது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக படப்பிடிப்பும், தயாரிப்புமு ஒரு ஆண்டு தாமதமானது. 2022 சனவரியில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி 2022 சூனில் முடிவடைந்தது. படப்பிடிப்பானது சென்னை, மும்பை, மைசூர், அஜர்பைஜான், சியார்சியா ஆகிய இடங்களில் நடைபெற்று, 2022 சூலையில் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் தொடங்கப்பட்டது.
சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக 2022, அக்டோபர் 21 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படத்தின் நடிகர்களின் நடிப்பை (குறிப்பாக கார்த்தி, ராசி கன்னா, சங்கி பாண்டே மற்றும் ரித்விக்), அதிரடி காட்சிகள், கதைக்களம், சமூக செய்திகள் போன்றவை விமர்சகர்களிடமிருந்து மிகவும் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றியடைந்த இப்படம் உலகம் முழுவதும் ₹100 கோடி (US$13 மில்லியன்) ) வசூலித்தது., 2022 இல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக ஆனது.[8][9]
கதைச் சுருக்கம்
தண்ணீரை விலைக் கொடுத்து வாங்கவேண்டிய நிலை தன் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தேசத் துரோகி என்ற பட்டத்தை சுமந்து குடும்பத்தை இழந்து, தன் வாழ்வை இழந்து, 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஓர் இந்திய உளாளியின் கதையாகும்.
நடிகர்கள்
- இரட்டை வேடத்தில் கார்த்தி :
- சாலினியாக ராசி கன்னா, வழக்கறிஞர், விஜய்யின் காதலி
- இந்திரா ராணியாக ரஜிஷா விஜயன், போசின் மனைவி மற்றும் விஜய்யின் தாயார் [10]
- மகாராஜ் ரத்தோராக சங்கி பாண்டே
- லைலா சமீரா தாமஸ், சமூக ஆர்வலர் மற்றும் டிம்மியின் தாயார் (பின்னணிக் குரல் சவிதா ரெட்டியால் கொடுக்கபட்டது ) [11]
- சமீராவின் மகன் திமோதி என்ற டிம்மியாக ரித்விக்,
- விஜய்யின் வளர்ப்பு மாமா பாவாடைசாமியாக முனிஷ்காந்த்
- விஜய்யின் நண்பனாக செங்கோட்டுவேல் கதிரேசன்
- ரத்தோரின் அடியாளாக அஷ்வின் குமார்
- ஏஜென்ட் கரப்பாம்பூச்சியாக யூகி சேது
- விக்டராக அவினாஷ் (செட்டா)
- ரா தலைவர் சந்திர மோகனாக யோக் ஜேபி
- நாசா தலைவர் பிகே ஆபிரகாமாக, முகமது அலி பெய்க்
- போஸின் தந்தை, முன்னாள் ராணுவ அதிகாரி மற்றும் விஜய்யின் தாத்தா சிதம்பரமாக, பாலாஜி சக்திவேல்
- சிட்டகொங் சிறைக்காவலராக தினேஷ் பிரபாகர்
- முத்துலட்சுமியாகவும், போஸின் அம்மாவாகவும், விஜய்யின் பாட்டியாகவும் ஆதிரா பாண்டிலட்சுமி
- சல் யூசுப் ஜெனரல் யூசுஃப் (பாகிஸ்தான் இராணுவம்)
- இளவரசு அரசியல்வாதி
- ரா அதிகாரியாக சஹானா வாசுதேவன்
- ரத்தோரின் உதவியாளராக ஷியாம் கிருஷ்ணன்
- செய்தியாளராக சுவாமிநாதன்
- கூனாக இரும்புத்திரை சரத் ரவி
- ஊடக ஆய்வாளராக ஜெகன் கிருஷ்ணன்
- குப்புசாமி, டிம்மியின் மருத்துவராக கே. எஸ். கிருஷ்ணன்
- பிலிப்ஸாக விஜய் வரதராஜ்
- ஒரு செய்தியாளராக அப்துல் லீ,
- நாடகத்தில் வள்ளியாக நடிப்பவராக மைனா நந்தினி,
தயாரிப்பு
வளர்ச்சி
2020 அக்டோபரில், விஷாலின் இரும்புத்திரை (2018) மற்றும் சிவகார்த்திகேயனின் ஹீரோ (2019) ஆகிய படங்களை இயக்கிய பி. எஸ். மித்ரன் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிப்பதாக தகவல்கள் தெரிவித்தன. படம் பிரின்ஸ் பிக்சர்சின் தயாரிப்பில் அதிகாரப்பூர்வமாக 2020 நவம்பர் 14 அன்று (தீபாவளி அன்று) பூசையுடன் தொடங்கியது.[3]
நடிப்பு
2021 ஏப்ரலில், கார்த்திக்கு சோடியாக முன்னணி பாத்திரத்தில் நடிகை ராசி கன்னா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் சமூக ஆர்வலர் கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[12][13] முக்கிய எதிர் நாயகனாக சங்கி பாண்டே நடித்ததன் வழியாக தமிழ் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.[14] மே மாதம், ரஜிஷா விஜயன் இரண்டாவது கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டார்.[15] மார்ச் மாதத்தில், சிம்ரன் அவரது அப்போதைய கால அட்டவணையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் படத்திலிருந்து விலகினார். அதற்கு பதிலாக, நடிகை லைலா அதே மாதத்தில் படத் திட்டத்தில் ஒப்பந்தமானார்.[7] இதன் வழியாக 16 வருட இடைவெளிக்குப் பிறகு அவர் திரைத் துறைக்கு திரும்பினார்.[11]
படப்பிடிப்பு
பின்னர், படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு 2021 ஏப்ரல் 26 அன்று தொடங்கியது.[16] சென்னையில் இரண்டு நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக, 2021 ஏப்ரல் 29 அன்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.[17] படப்பிடிப்பு 2022 சனவரி 9 அன்று மீண்டும் தொடங்கியது.[18] 2 கோடி மதிப்பில் தற்காலிக கட்டமைப்புகள் அமைத்து, படத்தின் முக்கிய பகுதிகளை படமாக்க திட்டமிட்டனர்.[19][20][21] ராஷி கண்ணா 2022, பிப்ரவரி 5 அன்று படப்பிடிப்பில் இணைநுதார் [22] இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 2022 மார்ச் 19 அன்று தொடங்கியது.[23] அவர் நடிக்கும் பகுதிகள் சென்னை, மும்பை, மைசூர் போன்ற இடங்களில் 12 நாட்களில் படமாக்கப்பட்டது.[24][25] சங்கி பாண்டேயின் நடித்த முக்கியப் பகுதிகள் நாடாளுமன்றக் கட்டடம், அஜர்பைஜான் மற்றும் சிர்சியாவில் படமாக்கப்பட்டன [26] அதுவரை படத்திற்கான தற்காலிக கட்டமைப்புகளுக்காக தயாரிப்பாளர்கள் 4 கோடி செலவழித்தனர்.[27][28]
இசை
மித்ரனின் படங்களுக்கு வழக்கமாக இசையமைத்துவந்த யுவன் சங்கர் ராஜாவுக்குப் பதிலாக, இப்படத்திற்கான இசையை ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்தார். படத்திற்காக கார்த்தி பாடிய "ஏறுமயிலேறி" என்ற படத்தின் முதல் தனிப்பாடல் 2022 அக்டோபர் 2 அன்று வெளியிடப்பட்டது.[29]
பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|
ஏறுமயிலேறி | கார்த்திக் சிவகுமார் | யுகபாரதி | 4:12 |
மேரே ஜான் | நகாஷ் அஜீஸ் | ஜிகேபி | 4:20 |
சொரக்கா பூவே | ஆதித்யா ஆர்கே, பத்ரா ரஜின் | ஏகாதசி | 3:52 |
இங்கி பிங்கி பாங்கி | அறிவு, சந்தோஷ் அரிகரன் | அறிவு, ரோகேஷ் | 3:26 |
வெளியீடு
நிரையரங்கு வெளியீடு
கார்த்தியின் பிறந்தநாளில் படத்தின் திரை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும் இப்படமும் 2022 அக்டோபர் 21 அன்று தீபாவளிக்கு முன்னதாக வெளியானது.[30]
விநியோகம்
இப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீசு வாங்கியது.[31] தெலுங்கு மாநிலங்களின் விநியோக உரிமையை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் பெற்றது.[32] கர்நாடக பிராந்திய விநியோக உரிமையை ஏவி மீடியா கன்சல்டன்சி பெற்றது.[33]
வீட்டு ஊடகம்
படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பிந்தைய மேலதிக ஊடக உரிமையை ஆஹா நிறுவனம் பெற்றது.[34] படப்பிடிப்புக்கு முன்பே படத்தின் செயற்கைகோள் உரிமை கலைஞர் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டது.[35]
வரவேற்பு
சர்தார் படம் விமர்சகர்களிடமிருந்து மிக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[36]
தொடர்ச்சி
2022 அக்டோபர் 27 அன்று நடந்த படத்தின் வெற்றி விழாவில், படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இதற்கு தற்காலிகமாக சர்தார் 2 என்று பெயரிடப்பட்டுள்ளது.[37][38]
குறிப்புகள்
- ↑ "Karthi's 'Sardar' runtime revealed; censor details to be out soon | Tamil Movie News - Times of India". m.timesofindia.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-10-13.
- ↑ "'Sardar' box office collection: Karthi starrer enters the Rs 100 crore club". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 November 2022.
- ↑ 3.0 3.1 "It's Official: Karthi's next with PS Mithran". The Times of India. Archived from the original on 18 June 2021. பார்க்கப்பட்ட நாள் 10 May 2021.
- ↑ "First look of Karthi and Raashi Khanna's Sardar out". The Times of India. Archived from the original on 1 May 2021. பார்க்கப்பட்ட நாள் 1 May 2021.
- ↑ "Rajisha Vijayan announces her next in Tamil, to act opposite Karthi". Mathrubhumi. Archived from the original on 9 May 2021. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
- ↑ "Simran, Raashi Khanna, and Rajisha Vijayan on board for Karthi's 'Sardar'!". Sify. Archived from the original on 26 April 2021. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
- ↑ 7.0 7.1 "Laila replaces Simran in Karthi and Raashi Khanna's Sardar!". The Times of India. Archived from the original on 28 March 2022. பார்க்கப்பட்ட நாள் 28 March 2022.
- ↑ "Sardar box office collection day 2: Karthi starrer spy thriller estimated to earn Rs33.35.crore". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 25 October 2022.
received overwhelming reviews from the audience and the critics who applauded the film for its plot line and performances. A sequel is in development.
- ↑ "Sardar crosses one hundred crores at the box office". சினிமா எக்ஸ்பிரஸ்.
- ↑ Aiswarya (4 May 2021). "Rajisha is full-on at Tamil after Dhanush's Karnan, next film with Karthi and Surya". The PrimeTime. பார்க்கப்பட்ட நாள் 10 May 2021.
- ↑ 11.0 11.1 "Laila returns to Tamil films after 16 years with Karthi's Sardar". The Times of India. Archived from the original on 10 October 2022. பார்க்கப்பட்ட நாள் 28 March 2022.
- ↑ "Simran negative role in Karthi film Sardar". Tollywood. 27 June 2021. பார்க்கப்பட்ட நாள் 30 March 2022.
- ↑ "Sardar: Karthi-PS Mithran's film title unveiled with motion poster". Cinema Express. Archived from the original on 13 May 2021. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ Madhu, Vignesh (6 May 2021). "Karthi plays a dual role in Sardar!". onlookersmedia. பார்க்கப்பட்ட நாள் 11 May 2021.
- ↑ "'Karnan' actress Rajisha Vijayan signs her third Tamil film". The Times of India. Archived from the original on 16 May 2021. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Sardar: PS Mithran's Upcoming Film Starring Karthi To Go On Floors Today". spotboye.com. Archived from the original on 11 May 2021. பார்க்கப்பட்ட நாள் 11 May 2021.
- ↑ "#COVIDSecondWave brings shoots of Vikram, Suriya, Karthi, and Sivakarthikeyan movies to a halt". The Times of India. Archived from the original on 12 May 2021. பார்க்கப்பட்ட நாள் 11 May 2021.
- ↑ "Karthi resumes shooting for Sardar". The Times of India. Archived from the original on 10 October 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.
- ↑ "'Sardar': A massive set worth Rs 2 crore for Karthi's dual drama". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 11 May 2021.
- ↑ "2cr worth set for Karthi's 'Sardar'". Sify. Archived from the original on 11 May 2021. பார்க்கப்பட்ட நாள் 11 May 2021.
- ↑ "Massive jail set constructed for Karthi's Sardar". dtNext.in. 8 May 2021. Archived from the original on 14 May 2021. பார்க்கப்பட்ட நாள் 14 May 2021.
- ↑ "Raashi Khanna begins shooting for 'Sardar' in Chennai, shares picture from set". The Times of India. Archived from the original on 28 April 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.
- ↑ "Raashi Khanna resumes shoot for Sardar". The Times of India. Archived from the original on 10 October 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-05-29.
- ↑ "Raashii Khanna gives sneak peak of her intense lawyer look from 'Sardar'". Zee News. Archived from the original on 15 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-06-15.
- ↑ "Raashi Khanna dazzles in a pink gown as she shoots for a song of her upcoming film 'Sardar'". thestatesman.com. 21 April 2022. Archived from the original on 10 October 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-06-15.
- ↑ "Chunky Panday shoots in Baku's parliament building for Karthi's Sardar". The Times of India. Archived from the original on 15 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-06-15.
- ↑ Pudipeddi, Haricharan. "Makers of Karthi's Sardar spend Rs4 crore to shoot key portion in Georgia, Azerbaijan". Cinestaan. Archived from the original on 15 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-06-15.
- ↑ "Sardar: Makers of Karthi's next spend Rs 4 crore to shoot crucial portions in Georgia and Azerbaijan; PICS". Pinkvilla. 14 June 2022. Archived from the original on 14 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-06-15.
- ↑ "The first single Yaerumayileri from Sardar, sung by Karthi, to be out on THIS date". ottplay.com. பார்க்கப்பட்ட நாள் 9 October 2022.
- ↑ "தீபாவளிக்கு வெளியாகிறது கார்த்தியின் 'சர்தார்'". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-05-24.
- ↑ "கார்த்தியின் 'சர்தார்' படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-06-15.
- ↑ "Annapurna Studios to release Karthi's Sardar in Telugu". Cinema Express. Archived from the original on 17 July 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-07-17.
- ↑ "கார்த்தி நடிக்கும் "சர்தார்".. கர்நாடக உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்! முழு விபரம்". Behindwoods (in Tamil). 13 July 2022. Archived from the original on 10 October 2022. பார்க்கப்பட்ட நாள் 14 July 2022.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "கார்த்தியின் 'சர்தார்' படத்தை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்". Zee Tamil News. 12 February 2022. Archived from the original on 12 February 2022. பார்க்கப்பட்ட நாள் 12 February 2022.
- ↑ "Digital and satellite rights of Karthi's 'Sardar' sold even before the film completes the shoot". The Times of India. Archived from the original on 27 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
- ↑ "Sardar box office collection day 2: Karthi starrer spy thriller estimated to earn Rs 10.35 crore". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 25 October 2022.
received overwhelming reviews from the audience and the critics who applauded the film for its plot line and performances.
- ↑ "Sardar: Karthi and PS Mithran announce a sequel to their spy thriller; Read details". Pinkvilla. 26 October 2022.
- ↑ "Karthi and PS Mithran confirm sequel to Sardar at success meet. Details inside". இந்தியா டுடே.