அறிவு (பாடகர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அறிவு
அறிவரசு கலைநேசன் பாடகர் சூலை 4-2022 பேரவை விழா.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்அறிவரசு கலைநேசன்
இசை வடிவங்கள்
தொழில்(கள்)
இசைத்துறையில்2018 – தற்போது வரை
இணைந்த செயற்பாடுகள்

அறிவு என பொதுவாக அறியப்படும் அறிவரசு கலைநேசன் என்பவர் ஒரு இந்திய சொல்லிசை, பாடலாசிரியர், மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் பொதுவாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றுகின்றார். அனிருத்தின் இசையமைப்பில் மாசுடர் (2021) படத்திற்காக இவர் எழுதிய "வாத்தி இரைடு" பாடலுக்காகவும், தீ உடன் இணைந்து இவர் பாடிய "எஞ்சாய் எஞ்சாமி" என்ற ஒற்றை பாடலுக்காகவும் இவர் அறியப்படுகிறார்.[1]

தொழில்

கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்கும் போது, அறிவு பா. இரஞ்சித்தை சந்தித்தார். அப்போது அவர் காலாவை (2018) இயக்க ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் அறிவு இரஞ்சித்தின் இசைக்குழுவான தி காசுலசு கலெட்டிவ் இணைந்தார். பின்னர் இவர் தமிழ் திரைப்படங்களுக்கு பாடல்களை இயற்றுவதோடு, பல சுயாதீன பாடல்களையும் உருவாக்கியுள்ளார். அறிவு இசை தயாரிப்பாளர் ஆப்பிரோவுடன் இணைந்து தனது "தெருக்குரல்" பாடல் தொகுப்புக்காக பல பாடல்களை எழுதினார், இது வெளியிடப்பட்டு பிரபலமானது. [2] [3] [4] [5]

ஆரம்ப கால வாழ்க்கை

அறிவு சென்னையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரக்கோணம் ஊரில் வளர்ந்தவர். இவர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் தொலைக்காட்சி, வானொலி போன்றவை இல்லாமல் வளர்க்கபட்டார். இதனால் இவர் நாட்டுப்புற பாடல்களின் தாக்கத்துக்கு உட்பட்டார். இவர் தனது உயர்நிலைப் பள்ளி நாட்களில் சாதி, வறுமை பற்றி கவிதைகள் எழுதத் தொடங்கினார், மேலும் தனது கல்லூரி காலத்தில் அரசியல் உணர்வு பெற்றார். [2][6]

இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு

படங்கள்

ஆண்டு படம் பணி பாடல் (கள்) குறிப்புகள்
பாடகர் பாடலாசிரியர்
2018 காலா Red XN Green tickY "உரிமை மீட்போம்" சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில்
வட சென்னை Green tickY Green tickY "மத்திய சிறையிலே" சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில்
2019 வந்தா ராஜாவாதான் வருவேன் Red XN Green tickY "ரெட் கார்டுச"
"மாடன் முனியம்மா"
ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில்
நட்பே துணை Green tickY Green tickY "சிங்கிள் பசங்க"
"வீதிக்கோர் ஜாதி"
ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில்
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு Green tickY Red XN "நிலமெல்லம்" தென்மா இசையமைப்பில்
Red XN Green tickY "தலைமுறை"
2020 பட்டாஸ் Green tickY Green tickY "மவனே" விவேக் - மெர்வின் இசையமைப்பில்
டகால்ட்டி Green tickY Green tickY "டகல்டி நா!" விஜய் நரேன் இசையமைப்பில்
நாடோடிகள் 2 Green tickY Green tickY "வருங்காலம் எங்கலது" ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில்
நான் சிரித்தால் Red XN Green tickY "ஹேப்பி பர்த்டே" ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில்
காலேஜ் குமார் Red XN Green tickY "காலேஜ் குமார்"
"பாரி பாரி"
குதுப் - இ - கிருபா இசையமைப்பில்
ஜிப்சி Green tickY Green tickY "தீவிர வியாதி" சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில்
சூரரைப் போற்று Red XN Green tickY "மாறா கருப்பொருள்" ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில்
துக்ளக் தர்பார் Green tickY Red XN "அண்ணாத்தே சேதி" கோவிந்த் வசந்தா இசையமைப்பில்

சுயாதீன இசை

  • தெருக்குரல் [7]
  • மங்கிஸ் வித் 5 ஜி [8]
  • எஞ்சாய் என்சாமி [9]

இசைத் தொகுப்புகள்

  • தெருக்குரல் (2019) [10]

குறிப்புகள்

  1. "Hip Hop Adhi is all set to enthral ‘single pasanga’". The Times of India. 26 January 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/hip-hop-adhi-is-all-set-to-enthral-single-pasanga/articleshow/67699250.cms. பார்த்த நாள்: 18 August 2020. 
  2. 2.0 2.1 Seetharaman, G. (21 July 2019). "Rapping truth to power: Arivu pulls no punches in his album 'Therukural'". https://economictimes.indiatimes.com/magazines/panache/rapping-truth-to-power-arivu-pulls-no-punches-in-his-overtly-political-album-therukural/articleshow/70308836.cms?from=mdr. 
  3. Tagat, Anurag (2 August 2019). "Speaking truth to power with Arivu and ofRO". https://www.thehindu.com/entertainment/music/speaking-truth-to-power-with-arivu-and-ofro/article28795328.ece. 
  4. "Meet Arivu, Who Wants to Take Rap in India Back to Its Political Roots". https://thewire.in/the-arts/arivu-tamil-rap-anti-caa. 
  5. "Arivu: Independent art will be an alarm for the society". https://www.cinemaexpress.com/stories/interviews/2020/mar/29/arivu-independent-art-will-be-an-alarm-for-society-master-soorarai-pottru-vijay-suriya-vaathi-raid-17789.html. 
  6. "'Let's fight': Tamil rapper Arivu comes up with powerful lyrics against CAA, goes viral" (in en). https://www.theweek.in/news/entertainment/2020/01/15/lets-fight-tamil-rapper-arivu-comes-up-with-powerful-lyrics-against-caa-goes-viral.html. 
  7. "கோ கொரோனா கோ! கோஷம் போட்டா குறையுமோ? தெறிக்கவிடும் தெருக்குரல் அறிவு! [Ko Corona Ko! Will it decrease with noise? Therukural Arivu explains!"]. 10 April 2020. https://tamil.indianexpress.com/lifestyle/corona-outbreak-vanakkam-virus-tamil-rap-song-by-therukkural-arivu-went-viral-on-social-media-183179/. 
  8. "Arivu and Madan Gowri's 'Monkeys with 5G' talks of modern discrimination". https://www.thenewsminute.com/article/watch-arivu-and-madan-gowris-monkeys-5g-talks-modern-discrimination-124477. 
  9. Dhee ft. Arivu - Enjoy Enjaami (Prod. Santhosh Narayanan) (in English), retrieved 2021-03-07
  10. Shekar, Anjana. "'Therukural' by Arivu-ofRO is a brilliant Tamil hiphop album". https://www.thenewsminute.com/article/therukural-arivu-ofro-brilliant-tamil-hiphop-album-104379. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அறிவு_(பாடகர்)&oldid=8711" இருந்து மீள்விக்கப்பட்டது