கோவை செழியன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கோவை செழியன்
பிறப்புமுருகேசன்
(1931-12-29)29 திசம்பர் 1931
கங்காருபாளையம், காங்கேயம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு14 March 2000(2000-03-14) (aged 68)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்கோவை செழியன்
செயற்பாட்டுக்
காலம்
1931-2000
வாழ்க்கைத்
துணை
கமலம் செழியன்
பிள்ளைகள்செம்பியன் சிவக்குமார், மாதவி, வாசுகி, கபிலன்

கோவை செழியன் (Kovai Chezhiyan) என்பவர் தமிழக அரசியல்வாதியும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.

அரசியல் வாழ்வு

கோவை செழியன் தன் அரசியல் வாழ்வை திராவிடர் கழகத்தில் தொடங்கினார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன் அரசியல் வாழ்வைத் தொடர்ந்தார். இவர் 1971-இல் காங்கேயம் சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தி.மு.க.விலிருந்து ம. கோ. இராமச்சந்திரன் வெளியேற்றப்பட்டு அவர் அ.இ.அ.தி.மு.கவைத் துவக்கியபோது கோவை செழியன் அதிமுகவில் இணைந்தார். இவர் எம். ஜி. ஆர். முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு திட்டக் குழு உறுப்பினராக இருந்தார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழுத் தலைவராகவும் இருந்தார். பின்னர் இவர் தமிழ்த் தேசியக் கட்சியைத் துவக்கினார். தன் வாழ்வின் பிற்பகுதியில் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பேரவையை நிறுவி அதன் தலைவராக இருந்தார்.[2]

திரைத்துறையில்

இவர் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சிவக்குமார், முத்துராமன், என்டிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், ராஜேஷ் கண்ணா, மம்முட்டி உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்தவர். மேலும் இவர் தெலுங்கு மற்றும் இந்திப் படங்களையும் தயாரித்துள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் இதற்கு முன் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் கெளரவ செயலாளராக இருந்தார்.

பின்னர் இவர் தனது நண்பரான கவிஞர் கண்ணதாசனால் தயாரிப்பாளராகத் தமிழ்த் திரைப்படங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் ஆரம்பத்தில் கண்ணதாசனுடன் சேர்ந்து படங்களைத் தயாரித்தார். பின்னர் ஸ்ரீதர் இயக்கிய சுமைதாங்கி திரைப்படத்தினை தனியாகத் தயாரித்தார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களைத் தயாரித்து விநியோகம் செய்துள்ளார்.

குடும்பம்

இவர் மார்ச் 14, 2000 அன்று இறந்தார்.[3] இவரது மரணத்தைத் தொடர்ந்து, இவரது மகன் கபிலன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தினை தொடர்ந்து நடத்தி வந்தார். 2000ஆம் ஆண்டில் கார்த்திக் நடிப்பில் தொடங்கப்பட்ட ஒருவர் மனதில் ஒருவரடி என்ற திரைப்படத் தயாரிப்பு நிறைவுபெறாமல் உள்ளது.[4] கோவை செழியனின் மனைவி கமலம் செழியன் வயது முதிர்வு காரணமாக ஏப்ரல் 24, 2021 அன்று காலமானார்.

திரைப்படவியல்

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 171-172.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Staff (2000-03-14). "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்" (in ta). https://tamil.oneindia.com/news/2000/03/14/kovai.html. 
  3. "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்". 14 March 2000.
  4. "டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai -- தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!". Archived from the original on 13 May 2001.

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கோவை_செழியன்&oldid=348636" இலிருந்து மீள்விக்கப்பட்டது