கார்த்திக் குமார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கார்த்திக் குமார்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கார்த்திக் குமார்
பிறந்ததிகதி 21 நவம்பர் 1977 (1977-11-21) (அகவை 46)
பிறந்தஇடம் சென்னை, இந்தியா
பணி நடிகர், நகைச்சுவை நடிகர்
துணைவர் சுசித்ரா

கார்த்திக் குமார் (பிறப்பு 21 நவம்பர் 1977) என்பவர் முன்னாள் இந்திய நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை

சென்னையிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் வேதியியல் பொறியியலைப் படித்தார். பின்னணி பாடகரான சுசித்ரா என்பவரை மணந்தார்.[1][2]

தொழில்

கல்லூரிப் படிப்பை முடிந்தபின், கார்த்திக் தனது நண்பர் சுனில் விஷ்ணுவுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனமான "இவாம்" ஒன்றை தொடங்கினார்.

கார்த்திக் அறிமுகத்தை அலைபாயுதே (2000) திரைப்படத்தில் நடித்தார்.[3] இவர் ஆர். மாதவன் கதாப்பாத்திரத்திற்கான சோதனையில் பங்கேற்று, பின் மிகவும் இளையவராக இருப்பதால் நிராகரிக்கப்பட்டார். யாரடி நீ மோகினி மற்றும் பொய் சொல்லப் போறோம் (2008) போன்ற படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்.

திரைப்பட வரலாறு

ஆண்டு திரைப்படம் பங்கு மொழி குறிப்புக்கள்
2000 அலைபாயுதே ஷியாம் தமிழ்
2002 சத்யா இந்தி
2004 வானம் வசப்படும் கார்த்திக் தமிழ்
2004 யுவா விஷ்ணு இந்தி
2005 கண்ட நாள் முதல் அரவிந்த் தமிழ்
2008 யாரடி நீ மோகினி சீனு தமிழ்
பொய் சொல்லப் போறோம் உப்பிலிநாதன் தமிழ்
2009 நினைத்தாலே இனிக்கும் வாசு தமிழ்
எதுவும் நடக்கும் நாகா தமிழ்
2010 சப்னோ கே தேஷ் மெயின் இந்தி
கொல கொலயா முந்திரிக்கா கிரிஷ் தமிழ்
2011 தெய்வத்திருமகள் கார்த்திக் தமிழ் விருந்தினர் தோற்றம்
வெப்பம் விஷ்ணு தமிழ்
2015 பசங்க 2 அகில் தமிழ்
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் டாக்டர் ரகு தமிழ்
2018 மன்னர் வகையறா அறிவழகன் தமிழ்
வினோதன் தமிழ்
2022 ராகெட்ரி: நம்பி விளைவு P. M. நாயர் தமிழ்

தொலைக்காட்சி

ஆண்டு தலைப்பு பங்கு மொழி குறிப்புக்கள்
2012 தர்மயுத்தம் அர்ஜுன் தமிழ்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கார்த்திக்_குமார்&oldid=23634" இருந்து மீள்விக்கப்பட்டது