ராகெட்ரி: நம்பி விளைவு
ராகெட்ரி: நம்பி விளைவு | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | ஆர். மாதவன் |
தயாரிப்பு | விஜய் மூலன், வர்கிஷ் மூலன், மாதவன், சரிதா மாதவன் |
இசை | சாம் சி. எஸ். |
நடிப்பு | ஆர். மாதவன் சிம்ரன் |
படத்தொகுப்பு | பிஜித் பாலா |
கலையகம் | Tricolour Films Varghese Moolan Pictures |
வெளியீடு | 1ஜூலை 2022 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் இந்தி ஆங்கிலம் |
ராகெட்ரி: நம்பி விளைவு (Rocketry: The Nambi Effect) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியியலாளர் நம்பி நாராயணனின்[1] வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் ஓர் இந்திய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஆகும்.[2] சிம்ரனுடன் முன்னணி பாத்திரமேற்று ஆர். மாதவன் நடிக்கிறார். மேலும் மாதவனே இப்படத்தை இணைந்து தயாரித்து, இணைந்து இயக்கியுள்ளார். இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம், மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இப்படத்தை ஆனந்த் மஹாதேவன் இணைந்து இயக்குகிறார்.[3] இதன் இசையமைப்பாளர் சாம் சி. எஸ். ஆவர். இதன் கதை, நாராயணன் பிரன்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஒரு பட்டதாரிமாணவராக இருந்த நாட்களையும், அவர் மீது தவறான உளவுச் குற்றச்சாட்டுக்கள் பதிந்ததைப் பற்றியதாகும்.
2017-ற்கு முன் தயாரிப்புக்கு முந்தைய வேலைகள் ஆரம்பமான நிலையில், அக்டோபர் 2018ல் திரைப்படத்தின் டீஸர் வெளியானது.
நடிகர்கள்
- ஆர். மாதவன் - நம்பி நாராயணன்
- சிம்ரன்
- பசேல் சிங் சஹானி - சார்தஜ், இஸ்ரோ விஞ்ஞானி, நம்பி நாராயணனின் நண்பர்
தயாரிப்பு
படப்பிடிப்பு
திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்மொழியில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நிகழும்.[4] முதன்மை படப்பிடிப்பு 21 ஜனவரி 2019ல் தொடங்கியது.[5]
மேற்கோள்கள்
- ↑ "'Rocketry – The Nambi Effect' teaser: Madhavan presents scientist Nambi Narayanan's story".
- ↑ "R. Madhavan: 95 per cent of Indians don't know about Nambi Narayanan, which I think is a crime".
- ↑ "Nambi Narayanan biopic will have no heroine: Madhavan".
- ↑ https://www.firstpost.com/entertainment/madhavan-to-star-in-director-ananth-mahadevans-untitled-biopic-about-isro-scientist-nambi-narayanan-4766401.html
- ↑ https://indianexpress.com/article/entertainment/bollywood/r-madhavan-is-nambi-narayanans-doppelganger-in-rocketry-on-set-photos-5549693/