கருடன் (2024 திரைப்படம்)
கருடன் (2024 திரைப்படம்) | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | ஆர். எஸ். துரை செந்தில்குமார் |
தயாரிப்பு | வெற்றிமாறன் (unc.) கே. குமார் |
திரைக்கதை | ஆர். எஸ். துரை செந்தில் குமார் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஆர்தர் ஆ. வில்சன் |
படத்தொகுப்பு | பிரதீப் ஈ. இராகவ் |
கலையகம் | கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இலார்க் சுடுடியோசு |
வெளியீடு | மே 31, 2024 |
ஓட்டம் | 135 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | மதிப்பீடு. ₹20 கோடி[2][3][4] |
மொத்த வருவாய் | மதிப்பீடு. ₹62 கோடி[5] |
கருடன் (Garudan) என்பது 2024 இல் வெற்றிமாறனின் மூலக் கதையிலிருந்து ஆர். எஸ். துரை செந்தில்குமார் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடி தொடர்பான பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தை[6][7] வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, கே. குமாரின் இலார்க் சுடுடியோசு இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் சூரி, எம். சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ரோசினி அரிப்பிரியன், சுஷ்வதா, ரேவதி சர்மா, சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ஆர். வி. உதயகுமார், மைம் கோபி ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் கதை குழந்தைப் பருவ நண்பர்களான ஆதி, கருணா ஆகிய இருவரின் நம்பகமான நம்பிக்கைக்குரிய சொக்கன் என்பவரை பின்தொடர்கிறது. அவரது விசுவாசம் காட்டிக்கொடுப்பதற்கும் உயிர்வாழ்வதற்கும் இடையிலான ஒரு மாறும் தன்மையால் மாற்றப்படுகிறது.
இப்படம் செப்டம்பர் 2023 இல் பெயரிடப்படாமல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விடுதலை பகுதி 1 இற்குப் பிறகு சூரி முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்த இரண்டாவது திரைப்படம் இதுவாகும். முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி அதே மாதத்தில் தொடங்கி 2024 சனவரியில் முடிவடைந்தது. அம்மாத இறுதியில் தலைப்பு அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆர்தர் ஆ. வில்சன் ஒளிப்பதிவும் பிரதீப் ஈ. இராகவ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
கருடன் 2024 மே 31 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. விமர்சகர்கள் முன்னணி நடிகர்களின் நடிப்பை (குறிப்பாக சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் யுவன் சங்கர் இராஜாவின் பின்னணி இசை, செந்தில்குமாரின் திரைக்கதை, இயக்கம்) ஆகியவற்றைப் பாராட்டினர்.
நடிகர்கள்
- சூரி - சொக்கன் "சொக்கா"
- எம். சசிகுமார் - ஆதி
- உன்னி முகுந்தன் - கருணா
- சிவாதா - தமிழ்செல்வி, ஆதியின் மனைவி
- ரோசினி ஹரிப்பிரியன் - அங்கையர்கன்னி"அங்கு", கருணாவின் மனைவி
- ரேவதி சர்மா - வின்னரசி "வின்னு", சொக்காவின் காதலி
- சமுத்திரக்கனி - ஆய்வாளர் ஈ. முத்துவேல்
- ஜார்ஜ் மரியன் - காவலர் ஐ. திருவேட்டை
- மைம் கோபி - நாகராஜ்
- ஆர். வி. உதயகுமார் - அமைச்சர் கே. தங்கபாண்டி
- வடிவுக்கரசி - செல்லாயி, கருணாவின் பாட்டி
- துஷ்யந்த் ஜெயபிரகாஷ் - வைரவேல்
- வழக்கு எண் முத்துராமன் - கருணாவின் மாமனார்
- பிரிகிதா சாகா - பர்வீன்
- அபிசேக் வினோத் - வழக்கறிஞர் கதிரவன்
- ஜி. மாரிமுத்து - ஆதியின் தந்தை(புகைப்படத்தில் மட்டும்)
- மயில்சாமி - கருணாவின் தந்தை(புகைப்படத்தில் மட்டும்)
மேற்கோள்கள்
- ↑ "Garudan Review – A Distinctive Rural Subject with Engaging Screenwriting!". MovieCrow. 2024-05-31. Archived from the original on 2024-05-31. பார்க்கப்பட்ட நாள் 2024-05-31.
- ↑ "Garudan Box Office Collection Day 7: Soori's Film Recovers Cost, Making 16% Profit, Leaving Big-Budget Films in the Dust!". Archived from the original on 7 சூன் 2024. பார்க்கப்பட்ட நாள் 8 சூன் 2024.
- ↑ Jha, Annie (2024-06-08). "Garudan Budget & Day 8 Box Office Collection Worldwide". Bollymoviereviewz (in English). Archived from the original on 3 சூன் 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.
- ↑ "Garudan Box Office Collection Day 7, Movie Budget & Total Earning – Box Office Reviewz" (in English). 2024-06-06. Archived from the original on 6 சூன் 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.
- ↑ "Garudan At The Worldwide Box Office (Closing Collections): Soori's Film Ends Its Journey By Enjoying 117.5% Returns; Here's How Much It Earned!". Koimoi. 3 July 2024. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2024.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Rare sighting of brahminy kite thrills birders" இம் மூலத்தில் இருந்து 10 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210410140230/https://timesofindia.indiatimes.com/city/chennai/rare-sighting-of-brahminy-kite-thrills-birders/articleshow/57240089.cms.
- ↑ "Garudan". British Board of Film Classification. Archived from the original on 9 June 2024. பார்க்கப்பட்ட நாள் 31 May 2024.